பெருந்துளியொன்று

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

வா.மணிகண்டன்


பெருந்துளியொன்று
புவிநோக்கி வருகிறது.

என் கால்கள்
பிடிமானமற்று
மெல்லிய பலகையொன்றின்
மீதாக நகர்ந்து
கொண்டிருக்கின்றன.

நீராலான
பிரம்மாண்ட
உலகம் ஒன்று
சிருஷ்டிக்கபடுகிறது.

முகவரி தொலைந்து
கொண்டிருக்கும்
கட்டிடத்தின்
ஏதோ ஒரு
தளத்தின் அருகே
என் பயணம் தொடர்கிறது.

தலைகளுடன் சேர்ந்து
மிதக்கின்றன.ரூபாய்
தாள்கள்.

விரல்களில்
நடுக்கம் படர்கிறது.

உதடுகள்
உலர்ந்துவிட்டன.
கால்கள்,பலகையுடனான
பிணைப்பினை
குறைதுக்கொள்ள
ஆரம்பித்துவிட்டன.

என் பயணம்
தொடர்கிறது.

திரையை விலக்கி
புலப்பட ஆரம்பிக்கும்
அசாதாரண
உலகம் ஒன்றினை
நோக்கி.

வா.மணிகண்டன்.

kvmanikandan1@yahoo.co.in

Series Navigation