பெண் விடுதலைபற்றி…பகவான் ரஜனீஷ்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

தமிழாக்கம் – புதுவை ஞானம்


‘எதிர் வரும் காலம் பெண்களின் காலம் ‘ ‘
என்பது – என் தீர்க்கதரிசனம்.
ஐந்தாயிரம் ஆண்டு காலம்
ஆண்கள் முயன்றனர்
தோற்றும் போயினர்.

பெண்களுக்கு
ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
இனி….
ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும்
அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

தன்….
பெண்மைச் சக்தியை
வெளிக் கொணர்ந்து
வேலை செய்ய
வாய்ப்புக் கொடுக்க வேண்டும்
அவளுக்கு.
முற்றிலும்
தோற்றுவிட்டான்
ஆண்.

மூவாயிரம்
ஐயாயிரம்
ஆண்டுகளுக்கான
ஆண்களின்
சரித்திரம்
இது தான்…
சும்மாவே
ஆண்
பலியிட்டான்
கொன்றான் – படு
கொலைகள் செய்தான்
வாழ்ந்தான்
யுத்தத்துக்காகவே
யுத்தங்களுக்கிடையே
சில நாட்கள் இருந்தன.
அமைதிக்காலம்
என்றோம் அதனை.
இவை
அமைதிக்காலம் அல்ல..
புதிய யுத்தத்துக்கான
தயாரிப்புக் காலம்.

ஆம்….
சில வருடங்கள் தேவைப்பட்டன
மற்றோர்
யுத்தத்துக்கு தயார் செய்வதற்கு.

மீண்டும்
யுத்தம் தான்
மீண்டும்
கொலைகள் தான்
போதும்.. ‘
ஆண்களுக்குப் போதுமான
வாய்ப்புக் கொடுத்தாகிவிட்டது
இனி
பெண்மைச் சக்திகளை
விடுவிப்போம்.

—Source :Bagwan shree Rajnesh
The Book of Books-vol.7(vii)
–தமிழாக்கம்:புதுவைஞானம்.

Series Navigation