திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அவள் நிறையும் கிறுக்கல்கள்

தேனுவந்து நிற்கும் நினைவுகளுக்கெல்லாம் விடையெனவும் தடமெனவும் ஆங்காங்கே கிறுக்கப்படும் எழுத்துக்களில் அவ்வளவுமாய் அவள்தான் நிறைந்திருக்கிறாள்.. நாளுக்கொன்றாய் நாளைக்குமொன்றாய் விடுபடும் வார்த்தைக்கோர்வைகள் பலருக்கு கவிதையாகவே புலப்படுவது செயப்பாட்டு விந்தையே.. அவைகள் அவளுக்கான என் கிறுக்கல்கள்தான் என்பதில்…

அதிகமாகும்போது

செண்பக ஜெகதீசன் ஆசாமிகளின் அக்கிரமம் அதிகமாகிவிட்டதால் சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன- சத்தமில்லாமல்.. சத்தமாய்க் கேட்பதெல்லாம் வெறும் சடங்குகளும் இடம்பிடிக்கும் இரைச்சலுமே ! அதனால்தான் காட்டுக்குச் செல்கிறார்களோ சிலர் கடவுளைக் கண்டுபிடிக்க ! செண்பக ஜெகதீசன்

அவள்

ச.ஹரிஹரன் --------------- --------------- மகிழ்வாகும் தருணம் முடியும் நேரமும்கூட மகிழ்வாகவே அமைகின்றது ஏனிந்த மகிழ்ச்சி என்ற கேள்வி மட்டும் எழவே இல்லை காலையில் பேருந்தில் பார்த்த அவளின் நினைவுகளால் கூட இருக்கலாம் !!!!! சிறிது…

புள்ளிகளும் கோடுகளும்.

நாச்சியாதீவு பர்வீன். இல்லாமையிலிருந்து புள்ளி தோன்றியது.... புள்ளிகளின் நெருக்கமும் உடன்பாடும் நேர்கோட்டையும் இன்னும் பல கோடுகளையும் பிரசவித்தன கோடுகளினால் கோணங்களும் வட்டங்களும் உருவாகின உருளைகளும் இன்னும் பல பல உருக்களும் தோற்றம் பெற்றன கோவணம்…

முடிச்சு

கயல்விழி கார்த்திகேயன் முடிச்சுகளால் மட்டும் இறுகியதல்ல நம் உறவு!! என் இரு கைகளிலும் மருதாணி, முகம் மறைத்து அலையும் கூந்தல்.. பின்னிருந்து அள்ளி நீயிடும் கூந்தல் முடிச்சு! எட்டா உயரத்தில் கொடியல் கட்ட முயன்று…

விடுபட்டவை

ஸ்ருதி ரமணிசொல்ல நினைப்பவையெல்லாமும் சொல்லும்படியாகவா இருக்கிறது? சொல்ல நினைத்தவையெல்லாம் சொல்லத்தக்கவைதானா? சொல்லத்தக்கவையெல்லாம் சொல்லப்பட்டு விட்டதா? சொல்லப்பட்டவையெல்லாம் - அதன் தகுதியை அடைந்தனவா? தரம் தாழ்ந்தனவா? சொன்னவைகள் சொல்லியிருக்க வேண்டாமென்றும் சொல்லாதவைகள் சொல்லியிருக்கலாமோ என்றும் தொக்கித்தான்…

இரண்டு கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் அட்ச ரேகை தீர்க்க ரேகை ****************************** ஊர் ஊராய் நகரும் வெய்யில்.. எல்லா காலத்திலும் என்று அஷ்டமி., எது பௌர்ணமி... ஹோரைகளும் சகட யோகங்களும் ராகுவாய் கடித்து கேதுவாய் ஞானமூட்டி ராஜயோகமும்…

மரத்தின் கௌரவம்

குமரி எஸ். நீலகண்டன் அந்த கொழுத்த மரத்திலிருந்து ஒவ்வொரு பழுத்த இலையும் சருகுகளோடு கீழே விழுகிற போதும் மரத்தின் பிரிவின் துக்கத்தின் துளிகள் சில இலைகளோடு ஒட்டி இருக்கும். மஞ்சளாய் பழுத்த அந்த இலை…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ்ஒரு அன்பு ------------------------------------------ ஒரு அன்பு அவ்வளவு எளிதாக உணரகூடியதல்ல அதன் மகத்துவம் புரிவதற்கு முன்பு அதன் புத்துணர்ச்சியை உடேன நாம் பெறுவதே அந்த அன்பினை பெறுவதற்கு நாம் தகுதி உடையவர்களாகிறோம்…

இடைவெளி

ரமேஷ்கல்யாண்இடைவெளி வைத்த இடத்திலேயே வைத்தபடி இருக்கும் பொருட்களுக்கும் அதன் கலைப்புகளுக்கும் இடையே - எழுதிய பக்கங்கள் எழுதியபடியே இருப்பதற்கும் அதில் ததும்பும் கிறுக்கல்கிளுக்கும் இடையே - குடிநீர்க் குடம் சுத்தமாக இருப்பதற்கும் கை இடக்…