திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அக்கறை பச்சை

பி. பகவதி செல்வம் தலைவிதியோ தற்செயலோ சூழ்நிலையின் சூதோ ஏதோ ஒன்றால் எப்போதோ தவறவிட்ட வாய்ப்பு இப்போதைய நாட்களின் இன்னல்களால் உறுத்தி கொண்டிருக்கிறது அக்கறை பச்சையாய்...! - பி. பகவதி செல்வம்

தேவைகள்

அதீதன்சுப்ரமனியம் இத்தனை சுத்தமான மௌனத்தை யார்தான் ஒத்தையில் எதிர்கொள்ளமுடியும் இப்பொழுது தேவையாயிருப்பது என்றோ காணாமல் போன காதலியின் முகம் என்றோ யாருக்காகவோ அழுத கண்ணீர் என்றோ யாரோ பயன்படுத்திய கொச்சையான வசை சொல் என்றோ…

இரண்டு கவிதைகள்

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கைபுதிய சட்டங்கள்! -- வன்னி நகரில் நடந்த வன்செயல்களின் கொடூரத்தில்... இடம்பெயர்ந்தலைந்தேன் தாங்காத சோகத்தில்! போர் மேகங்கள் ஒன்றுசூழ்ந்து பொழிந்தன அன்று குண்டு மழைகள்.. ஈவிரக்கம் துளியுமின்றி துண்டாடப்பட்டன அப்பாவிகளின்…

ஒற்றை மீன்

இளங்கோ* எல்லையற்று நீளும் துயரச் சுவரில் கரும்பாசி போல் படிந்திருக்கிறாய் தனிமைப் போக்கும் வழியற்று அகன்ற கண்ணாடிக் குடுவையில் நீந்தும் என் ஒற்றை மீனுக்கு உன்னைக் கொஞ்சம் சுரண்டி உணவிடுகிறேன் அது குமிழ் குமிழாய்…

இருக்கை…

ஹேமா(சுவிஸ்)****************** இயல்பை விடுத்து இப்போ... தனக்குத் தொடர்பில்லாத இடத்தில் பறந்துகொண்டிருக்கலாம். நாளை... நீந்திக்கொண்டும் இருக்கலாம். இன்னொரு நாள்... இடப்புறச் சங்குக்குள்ளும் ஒளிந்திருக்கலாம். பிறகொருதரம்... பிணங்கள் புதைக்கும் இடத்திலும் பார்த்ததாகச் சிலர் சொல்லலாம். காற்றாய் பறந்து…

நீ….. நான்…. மழை….

ச. மணி ராமலிங்கம் எதிர்பார்ப்பின் எதுகைகளாக பயணிக்கிறோம் மழை தேடும் நீயும் உன்னை தேடும் நானும்.... உன்னை சேர்ந்தால் மோட்சம் பெறுவேன் நான்... நீ மழையை சேர்ந்தால் மோட்சம் பெறும் மழை.. முக்கோண காத்திருப்பில்…

கொடிய பின்னிரவு

கலாசுரன் பகல்களில் தேன் வழிய மலர்ந்த கனவுகள் எண்ணற்ற சிந்தனைகளில் மடிந்து பிறக்கும் தென்றலின் கோபுரங்கள்போல் எண்ணித்துணிந்த முடிவொன்றில் சிதறும் ஞாபகங்கள் இசையின்றித் தாளம்போடும் உணர்வற்ற பாதங்களின் விரல்கள் தேய்ந்துபோனது ஆயிரம் நினைவோட்டங்களின் மனதோர…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ் அதன் மீதமே ------------------------ பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை தழுவி கொள்வதற்கு முன் தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல் சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது அதன் மீதமே . பழியின் தீரம் என்னை…

கைகளிருந்தால்…

துவாரகன் - எமக்குக் கைகளிருந்தால் ஒருவரைக் கன்னத்தில் அறையலாம் தடியால் அடிக்கலாம் சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம் இன்னும் எதுவும் செய்யலாம் எமக்குக் கைகளிருந்தால் ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம் வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்…

கனவுகள் இனிதாகட்டும்!!

கயல்விழி கார்த்திகேயன்இதுவரை திரையிலும் கண்டிராத ஒரு பனிச்சூழல்.. திட்டுத்திட்டாக ரோஜா இதழின் நிறத்தில் சில துளி அடையாளங்கள்.. நகர்கிறது குவியம் மேல் நோக்கி.. என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர் கீழுள்ள பனிமேல் பட்டு தோன்றுகிறது…