க. மோகனரங்கன்
‘ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருப்பதற்காக எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராக இருந்த மு. தளையசிங்கம் பிறகு இலக்கியத்திலிருந்து விாித்து கொண்ட தன் தேடலின் மூலம் ஒரு தத்துவவாதியாக பாிணமிக்கும் நிலையில் அவ்விலக்கியத்தையே துறக்குமளவிற்கு விலகி வந்துவிடுகிறார். இந்தப் பயணத்தில் ஒரு முன்னோடி என்ற அளவில் அவருடைய வெற்றிகளின் அளவிற்கே அவருடைய தோல்விகளும் முக்கியத்துவமுடையவை.
சடம், உயிர், மனம் என்றும் வளர்ந்துள்ள பாிணாமம் இன்று மனதையும் தாண்டிச் செல்வதும் நிலை வரவுள்ளது. அந்நிலையே நிர்வாணம் (அ) பேர் மனம் எனக் கூறும் தளையசிங்கம் அதனடிப்படையிலேயே சர்வோதயம் எனும் தனது தத்துவத்தை இந்திய சமய மரபு சார்ந்த உருவகங்களின் துணையோடு வளர்த்தெடுத்திருக்கிறார். அந்நிலையில் உருவாகும் இலக்கியமே பூரண இலக்கியம். அவ்விழிப்புற்ற நிலையில் வர்க்கமும், சாதியும் மறைந்துவிடும் என நம்பிக்கை தொிவிக்கிறார் தளையசிங்கம்.
ஐரோப்பிய அறிவுவாதத்தின் இறுதி உருவங்களில் ஒன்றான மார்க்சிய சித்தாந்தம் மட்டுமே சமூகத்தின் அன்றாடப் பிரச்சனைகளை இன்று விளக்கவும், அவ்விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குாிய செயல்களை நிர்ணயிக்கவும் கூடிய தத்துவமாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்று சாதகமாக அதை மதிப்பிடும் தளையசிங்கம் மனிதனின் தேவைகள் பொருளாதார சமத்துவ அடிப்படையிலான பொதுவுடமை சமூகத்தைத் தாண்டியும் போவதையும் அந்த அப்பாலான நிலையில் (சத்தியநிலை) நின்றே பொருளாதார சமத்துவத்தைப் பூரணமாக அடையலாம் என்றும் கூறுகிறார்.
பொருளாதாரச் சமூகத் சூழலுக்கும், அந்தச் சூழல் பிரதிபலித்த உற்பத்தி உறவுகளுக்கும் முதலிடம் கொடுத்த மார்க்ஸ் அவற்றை அடிப்படையாகக் கொண்ட செயலுக்கும் மாற்றத்திற்குமே முதலிடம் கொடுத்தார். சிந்தனை அவற்றோடு சேர்ந்து வளரும் ஒன்றேதான் என்றும் அவற்றின் எல்லைகளைத்தாண்டி வளர அதனால் முடியாது என்றும் ஆதலால் தன்னிலிருந்து பிாிந்து நிற்கும் அந்நியமாதல் என்ற நிலையை நீக்க பொருளாதார பொதுவுடமை வந்தால் போதும் என்று மார்க்ஸ் நினைத்தது ஒரு அடிப்படைத்தவறு என்று விமர்சிக்கும் தளையசிங்கம் மார்க்சியமும் நவீன விஞ்ஞானமும் அதன் காரண-காாியவாதத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு தருகின்ற எந்தத் தீர்வும் தற்போது நிலவும் அதிருப்தியைக் கலைந்து நிரந்தர திருப்தியை அளித்துவிடாது என்கிறார் .
ஏனெனில் நவீன காலத்தின் அறிவும், விஞ்ஞானமும் அவற்றின் கோட்பாடுகளும் அறிவுக்கும், மேல் மனதுக்கும் மட்டுமே உாிய விவகாரங்கள் தான் எனக்குறிப்பிடும் தளையசிங்கம் நிரந்தர மாற்றத்திற்கான தீர்வாக மனதை கடந்த நிலையான விஞ்ஞானமயகோசம் மற்றும் ஆனந்தமய கோசம் ஆகிய நிலைகளில் ஏற்படும் சத்திய நிர்வாண நிலையை முன் வைக்கிறார். அது மனிதனுக்கு இதுவரைத் தொிந்த அறிவின் எல்லைகளை அல்லது நனவு நிலையைத் தாண்டிய பேரறிவைத் தாண்டிய புதுயுகமாகயிருக்கும் என்கிறார். அது தத்துவங்களை கடந்த ஒரு தத்துவம், அது திட்டவட்டமான நிரந்தர சிந்தனை அமைப்பையும் தேக்கத்தையும் தாிக்காது. சர்வோதயம் தாிக்கும் சமயம் விஞ்ஞானத்தையும் வெல்லும் விஞ்ஞானம் என்கிறார்.
தனது இந்தக் கோட்பாட்டை கண்டடையும் போக்கில் மார்க்சியம் வரையிலான தத்துவங்களின் போதாமைகளையும் நவீன விஞ்ஞானத்தின் செயல் எல்லைகளையும் வியப்பூட்டுமளவிற்கு துல்லியமான முன்னுணர்வினால் சாியாகவே மதிப்பிடும் தளையசிங்கம் அதன்பிறகு மாற்றாக முன்வைக்கும் பேர் மன நிலையென்பது நமது புறவயத்தர்க்கங்களுக்கும், நிரூபண வாத அறிவிலங்கியலுக்கும் பிடிபடாத ஒன்று. இந்திய ஆன்மிக மரபினையொட்டி பேசுகையில் புத்தர், அரவிந்தர், பரமஹம்சர், ரமணர், இன்றும் பெயர் தொியவராத பல ஞானிகளும் இத்தகைய பாிபூரண விழிப்பு நிலையை அடையப் பெற்றவர்களாகக் கூறப்படுகின்றனர். அத்தகைய நிலையினை அடைந்தவர்கள் அதற்கு முந்தைய சகஜநிலையிலுள்ளவர்களுக்கு அதைச் சொற்களால் விளக்குதல் சாத்தியமல்ல என்றும் கூறப்படுகிறது. உள்ளுணர்வின் பாற்பட்ட ஆழ்ந்த நம்பிக்கையினாலும், இடைவிடாத சாதகத்தினாலும், குருவின் அனுக்கிரகத்தினாலும் ஒருவர் தானே கண்டடைய வேண்டிய தாிசன நிலையாகவே அது நமது மரபின் முன்வைக்கப்படுகிறது.
1966 இல் தளையசிங்கத்திற்குமே அத்தகைய ஒரு அனுபவம் சித்தித்ததாக அவரது வாழ்க்கை குறிப்புகளின்றும் நமக்கு தொியவருகிறது. எனினும் சிந்தனையிலும், நம்பிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் பல்வேறுபடிநிலைகளிலும் கலாச்சாரங்களிலும் வாழ்ந்து வரும் மனிதகுலம், இதுவரையிலுமில்லாத வகையில் எதிர்வரும் ஒரு காலத்தில் சமமான அது விடுதலையை அதன் சகஜ நிலையாக அடைவது சாத்தியம்தானா என்பது நமது உடனடி ஜயமாக எழுகிறது. அதற்குப் பதிலாக தளையசிங்கம் முன்வைப்பது. ஜடம், உயிர் என்ற நிலையைக் கடந்து பிரபஞ்சம் இன்று வந்துசேர்ந்திருப்பது மனமயநிலையின் இறுதிக்கு. எனவே நாளை அதைத் தாண்டிய நிலைக்கு நகரும் என்ற வரலாற்று பாிணாமவாத நம்பிக்கையை. அந்நிலையை நோக்கி இவ்வுலகை விரைவுபடுத்தும் பணியில் முன்நிற்க வேண்டியவர்களாக ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிற கலைஞர்களைக் காண்கிறார் தளையசிங்கம்.
மேலும் உலக முழுமைக்குமான ஒரு தத்துவதாிசனமாக தனது பிரபஞ்ச யதார்த்தத்தை முன்வைத்துப் பேசும் தளையசிங்கம் அதனை விளக்கவும் விவாிக்கவும் ஒரு குறிப்பிட்ட சமய மரபிற்கேயுாிய கருத்தியல் உருவகங்களையும், படிமங்களையும் தனது சொந்த நம்பிக்கையை முன்னிட்டு பேசுகையில் அம்மரபிற்குள் வராத பிறருக்கு அது எவ்விதமான அர்த்தத்தைத் தரும் என்ற கேள்வியும் எழுகிறது. மட்டுமில்லாமல் மார்க்சியம், நுண் பெளதீகம் வரையிலான இன்றைய சிந்தனைகளைப் புாிந்து கொள்வதற்கும் விவாிப்பதற்குமான தர்க்கங்களிலிருந்து மிகவும் மாறுபட்டது தளையசிங்கம் முன் வைக்கும் ஆன்மிக கருத்துருவங்களின் அடிப்படைகள். ஆன்மிகமும், சமயமும், மதஅடிப்படைவாதமும் பிாித்து புாிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்று என்ற எளிய புாிதலுக்குகூட பெரும்பான்மையோர் வரஇயலாத அரசியல், கலாச்சார சூழலில் உள்ள தமிழ் வாசகர்கள் தளையசிங்கத்தின் கோட்பாட்டை எதிாிடையாக அணுகும் வாய்ப்புகளே அதிகம். இந்த இடைவெளியை உணர்ந்தவராகவோ, அதை இட்டு நிரப்புமளவிற்கு பொறுமையுடையவராகவோ அவரது வெளிப்பாடுகள் அவரைக் காண்பிக்கவில்லை.
பாரதி, ‘பராசக்தி கடைக்கண் பார்வை வைத்தாள், ஆகாவென்று எழுத்தது பார் யுகப்புரட்சி ‘ என்கையில் அது ஒரு கவித்துவ நம்பிக்கை என்ற அளவில் அதில் எவ்வித முரண்பாடுமில்லை. ஆனால் செயல்படும் தத்துவமாக, தான் தர்மம் என்று உருவகிக்கும் ஒன்றின் வளர்ச்சிக்கான உலகின் மாற்றத்திற்கான ஒரு கோட்பாடாக தன்னளவில் ஒரு தாிசனத்தை முன்வைக்கையில், அது வெறும் நன்னம்பிக்கை மற்றும் கனவுாீதியான எதிர்பார்ப்பின் அடிப்படையிலானதாக மட்டுமே இருக்கவியலாது. உலகில் இதுவரை கட்டியெழுப்பப்பட்ட எல்லாப் பெரும் தத்துவங்களும், தாிசனங்களும் இலட்சியம் என்ற அளவில் பூரணத்தை முன்வைத்துபேசினாலும் நடைமுறை செயல்பாடு என்று வருகையில் நிறுவனமாதலின் உள் முரண்களில் சிக்குண்டு, பல தருணங்களில் தான் வாித்துக் கொண்ட இலட்சியத்திற்கு எதிராகவே செயல்பட நேர்ந்து தேய்ந்திறுதலை அடைந்ததைச் சாித்திரமாகவே அறிந்திருக்கிறோம்.
ஒருமையை, எக்காலத்திற்குமான இறுதித்தீர்வை, நிரந்தரத்துவத்தை முன்மொழிவதாக கட்டமைக்கப்படும் எந்தவொரு பெருங்கனவும், சமயதாிசனமும், லோகாதாய தத்துவமும், ஒழுங்கற்றதும் குழப்பமாகவும் தொியும். இவ்வுலகின் தோற்றத்தையும், அதன் புதிரான இயங்கு விதிகளையும் விளக்குவது அதற்கு அர்த்தத்தைக் கற்பிப்பது எனத் துவங்கி மெல்ல மெல்ல தனது இருப்பை உறுதிசெய்து கொள்வது என்ற நிலையில் அவ்வமைப்பிற்குள் வர இயலாத பிறவற்றை அவற்றின் முரண்பாடுகளை அழிக்கும் வன்முறைக்களமாக அது மாறிவிடுகிறது. கிறித்துவம் துவங்கி மார்க்சியம் ஈறாக இதுவரை மனிதகுலம் கண்ட எந்தச் சித்தாந்தமும் இதற்கு விளக்கல்ல.
இருபதாம் நுாற்றாண்டின் இறுதியில், இரு உலகப்போர்களுக்குப் பிறகு ,இத்தகைய லட்சிய கனவுகளின் புதை மேட்டிலிருந்து கொண்டு புலம்பும் மனித குலத்தின் வெறுமையை, நம்பிக்கை இழப்பை, அபத்தத்தை நவீனத்துவம் விாிவாக பதிவு செய்தது என்றால், அதற்கு பிறகாண சிந்தனைகளோ அத்தகைய பெரும் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் பதிலாக கால, இட, வர்த்தமானங்களுக்கு கட்டுப்பட்ட, வேறுபட்ட கலாச்சரங்களுக்கும் அதன் பல்வேறு நம்பிக்கைகளுக்கும் அறிவு மரபுகளுக்கும் அவற்றின் இயல்பான இடத்தை வழங்க வலியுறுத்துகின்றன. எந்த ஒரு கட்டமைப்புமே அதன் வித்தியாசங்களை ஒடுக்குவதிலல்ல மாறாக அவற்றின் ஒத்திசைவிலேயே குறைந்த வன்முறை கொண்டதாக இயங்கமுடியுமென அச்சிந்தனைகள் வாதிடுகின்றன.
இப்பின்புலத்தில் நோக்குகையில் இன்றைய தமிழ்வாசகனுக்கு தளையசிங்கத்தின் சிந்தனைகளோடு ஒத்திசைவோ முரண்பாடோ எதுவாக இருந்தாலும் அவற்றைத் தாண்டியும் அவரைப் பொருட்படுத்தி வாசிக்கவும், விவாதிக்கவும் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதலாவதும் முக்கியமானதுவுமான ஒன்று, நவீனத்துவத்தால் வேர்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கும் நமது ஞான மரபுடன் ஆக்கப்பூர்வமான உரையாடலை வலியுறுத்தி அவர் பேசுவது.
நமது அறிவிற்கும், நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட நிலையில் தொன்மம், சடங்கு, பலி, திருவிழா, களியாட்டம் என சமயமானது சமூக மனதின் கூட்டு செயல்களமாக ஓர் ஆழமான பங்கை பாரம்பாியமாக வகித்துவருகிறது. அவ்வகையில் எந்தவொரு லெளகீகமான நடைமுறை தத்துவத்தை விடவும் ஆன்மிக ாீதியிலானதொரு தாிசனம் மனித நாகாிகத்திற்கு அதிகமும் நேர்மறையான பலனளிக்கமுடியும். ஐன்ஸ்டான் உட்பட பல அறிவியலாளர்களும், உளவியல், உயிாியல் நிபுணர்களும் கலைஞர்களும் தங்கள் துறைசார்ந்த பிரத்தேயக அறிவின் எல்லையில் நின்றபடி இத்தகைய சமயம் கடந்த அருளுணர்வைப் பற்றிப் பேசியிருப்பதைக் காணலாம்.
இரண்டாவது ஓர் எழுத்தாளனுக்கு தத்துவத்தோடு இருக்க வேண்டிய உறவு பற்றி அவர் குறிப்பிடுவது. குறைந்த பட்ச வாழ்க்கைப்பார்வையும், அதை விவாதத்திற்குட்படுத்துமளவிற்கு தத்துவார்ந்த பாிச்சயமும் இருக்கும் பட்சத்திலேயே ஒருவருடைய படைப்பு வாழ்வின் யதார்த்த பிரதிபலிப்பு என்ற அளவோடு நில்லாமல் வீச்சும், ழமும் கொண்ட பெரும் படைப்பாக அமையமுடியும் என்கிறார் தளையசிங்கம். இதையொட்டியே தனது ‘போர்ப்பறை ‘ கட்டுரையொன்றில் திட்டவட்டமான தத்துவ மதிப்பெதுவுமின்றி அடிமனதின் உந்துதலாகவே வெளிப்படும் மெளனி, புதுமைப்பித்தனின் சிறுகதைகளை விடவும், ஜெயகாந்தனின் குறிப்பிட்ட சில கதைகள் அதிக தெளிவுடையவை எனக் கூறுகிறார். இலக்கியத்தைச் சுயேச்சையானதொரு அறிதல்களாமாக காணாமல் மரபு வழிபட்ட மார்க்சியர்களைப் போலவே இவரும் உலக மாற்றத்திற்கான ஒரு பெரும் செயல் திட்டத்திற்குட்பட்ட சிறு பிாிவாகவே இலக்கியத்தைக் கருதுவதால் ஏற்படும் முரண் இது. இது விாிவான விவாதத்திற்குாிய ஒன்று.
ஏனெனில் தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் எனக்கருதப்படும் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் நவீனத்துவத்தின் பாதிப்பு பெற்றவர்களே எனவே தவிர்க்க இயலாமல் தத்துவ நம்பிக்கையைத் துாய இலக்கியத்திற்குப் பாதகமான ஒன்றாகவே அவர்கள் கருதிவருபவர்கள். எனினும் புதுமைப்பித்தன், மெளனி போன்றவர்கள் ஒரு விாிவான தத்துவப் பார்வையோடு இயங்கியிருப்பின் அவர்கள் இதைவிடவும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்ற தனையசிங்கத்தின் நம்பிக்கை டால்ஸ்டாய், தாமஸ்மன், தாஸ்தவெஸ்கி போன்றோரை ஒப்பிட்டால் ஆமோதிக்கப்பட வேண்டிய ஒன்றே எனப்படுகிறது.
தவிர நமது மரபுடனும் அதன் தத்துவ விவாதங்களுடனும் எவ்விதமான பாிச்சயமுமில்லாத இலக்கிய வாசகனுக்கும் கூட தளையசிங்கத்தின் துவக்ககால படைப்புகளாக ‘புதுயுகம் பிறக்கிறது ‘ சிறுகதைத் தொகுப்பு ‘ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ‘ மற்றும் ‘போர்ப்பறை ‘ கட்டுரைகள் போன்றவை அதிக அக்கறைக்குாியதாக இருக்கமுடியும். குறிப்பாக புதுயுகம் பிறக்கிறது தொகுதியிலுள்ள பல சிறுகதைகள் அவற்றின் உருவ அமைதி, கச்சிதமும் சுருக்கமும் துல்லியமும் கொண்ட மொழியால் இன்றளவும் அதன் புத்துணர்வை இழக்காமலிருப்பவை. இரத்தம், கோட்டை, தொழுகை ஆகிய கதைகள் தமிழின் மிகச் சிறந்த கதைகள் பட்டியலில் எளிதாக இடம் பெறும் தகுதியுடையவைகளாகும்.
நவீன அறிவியல், உளவியல், சமயம், ன்மிகம், இலக்கியம், தத்துவம் என தனது காலத்தின் பல்வேறு துறைகள் குறித்த துல்லியமான அறிவும், அவற்றை மதிப்பிடவும் ஒன்றுடன் மற்றதைப் பிணைக்கவும் செய்ய தனதேயான பார்வையும் கொண்டு விளங்கிய ஓர் அபூர்வ ஆளுமை தளையசிங்கம். அப்பன்முக ஈடுபாடும் தேடலுமே அவருடைய சிந்தனைகளை இலக்கியத்திலிருந்து மெய்யிலை நோக்கி நகர்த்தியிருக்கவேண்டும். அவரது சிந்தனைகளின் முழுமையை நாம் அடையமுடியாமல் அவருடைய அகாலமரணம் குறுக்கிட்டுவிடுகிறது. இன்றைய பிரதட்சய நிலையினின்றும் பார்க்கும்போது அவரது மெய்யுள் கனவுத்தன்மைமிக்க ஒரு உட்டோபியாவாக தோன்றலாம் எனினும் அதில் உள்ளுரைந்தபடியிருக்கும் தீவிர கருணையும், நம்பிக்கையும், செயலாக்கமும் நமது அக்கறைக்கும், பாிசீலனைக்குமுாியவை. நாம் அடுத்து அடி வைக்கவேண்டிய திசையைத் தோராயமாக சுட்டக்கூடியவை என்பதை மறுக்கவியலாது.
[இக்கட்டுரை சொல்புதிது சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்ட குரு நித்யா ஆய்வரங்கத்தில் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அங்கே வாசிக்கப்பட்ட பிற கட்டுரைகளும் பதிவுகளும் திண்ணை இணையைதழ் இலக்கியக்கட்டுரைகள் பகுதியில் கீழ்க்கண்ட சுட்டிகளில் கிடைக்கும்
]
http://www.thinnai.com/ar0525024.html மு தளைய சிங்கம் கூட்ட பதிவுகள் 1 ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0602023.html முதளையசிங்கம் கூட்ட பதிவுகள் 2 ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0623022.html முதளையசிங்கம் கூட்ட பதிவுகள் 3 ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0610025.html மு தளையசிங்கத்தை புரிந்துகொள்ளும் அடிப்படைகள் ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0617024.html மு தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0623024.html மு தளைய சிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0610023.html மு தளையசிங்கத்தின் இலக்கியப் பார்வை எம் வேத சகாயகுமார்
http://www.thinnai.com/ar0610025.html மு தளையசிங்கத்தை புரிந்துகொள்ளும் அடிப்படைகள் ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0617024.html மு தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0623024.html மு தளைய சிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? ஜெயமோகன்
http://www.thinnai.com/ar0610023.html மு தளையசிங்கத்தின் இலக்கியப் பார்வை எம் வேத சகாயகுமார்
****
- ….நடமாடும் நிழல்கள்.
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- எங்கே போகிறேன் ?
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
- கடிதங்கள் மார்ச் 18 2004
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு