….நடமாடும் நிழல்கள்.
கலாப்ரியா

பனிக்கரடியின்
தூக்கத்தில் உலவும்
பேராசை உனக்கு
கூட்டுப்புழுவின்
கனவெனினும்
பரவாயில்லைதான்
என்கிறாய்
உன் நிழலில்
ஓட்டைகள்*
பார்க்காமலிருக்க
பாம்பின் புழைகளும்
சம்மதம் உனக்கு
வெட்கமற்று
கருச் சிசுவின்
கனவுகளில்
புகுந்து விடாதே
உன் அனுபவ அழுக்குப்
படிந்த நிழல்களுடன்
வெளியேயே இரு
கனவும்
கவிதையும்
பிழைத்துப் போகட்டும்.
– கலாப்ரியா
* தன் நிழலில் துவாரங்களை ஒருவன் பார்க்க நேரிட்டால் அவனுக்கு மரணம்
நெருங்கி விட்டது என்று நெல்லைப் பகுதியில் ஒரு வட்டார வழக்கு.
***
kalapria@sancharnet.in