நினைவின் கால்கள்
அருண்பிரசாத்

நெடிதே பிளந்து நிற்கும்
கரும்பாறை பாதைகளில்
ஓடிக் களைப்புறும்
நினைவின் கால்கள்.
செறிந்த அலுப்பைத்
தாண்டி வரும்
ஒரு புதிய வெற்றிடத்தில்
அவை தஞ்சம் புகுகின்றன.
வெற்றிடம் நிரப்ப வரும்
பிறிதொரு சூல்மேகம்
புழுதி நிரம்பிய
தேய்ந்த பாதங்களை
கழுவிக் குளிர்விக்கிறது.
அருண்பிரசாத்
everminnal@yahoo.com