This entry is in the series 20040318_Issue

நாகூர் ரூமி


மேகங்கள் மிகவும் மென்மையானவை
இதழ் முகிழ்க்கும் மழலையின்
கன்னம் போல
அல்லது காது குருத்து போல

எனினும் மேகங்கள்
துணிச்சலானவை
முதுகைக் கொடுத்து
சூரியனை மறைக்கும்போது

மேகங்கள் மிகவும்
கருணையுள்ளவை
தாகங்கள் தீர்க்கும்போது

மேகங்கள் மிகவும்
அழகானவை
மலை முகடுகளில்
நடை பயிலும்போது

மேகங்கள் ரொம்ப அற்புதமானவை
தண்ணீரும் இல்லாமல்
தன்னுயிரும் போகாமல்
வான் வெளியில்
மிதந்து செல்லும்போது

மேகங்கள் மிகவும் மென்மையானவை
எனினும்
மேகங்கள் விரட்டுகின்றன
மேகங்களை
அது சூல் கொள்ளவா
போர் வெல்லவா தெரியவில்லை

எனினும் மேகங்கள்
மிகவும் மென்மையானவை.

— நாகூர் ரூமி
2:21 AM 04/03/04

ruminagore@yahoo.com

Series Navigation