திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மனைவியின் சிநேகிதர்

அன்பாதவன் இளமை ததும்ப செந்நிறமாய் சிரித்தபடி உரையாடும் இவரே என் மனைவியின் சிநேகிதர். அறுபட்ட பால்யத்தின் தீடார் ஒட்டலாய் புதிய வரவு. யாருமில்லாத போது வருபவர் போவதெப்பதோதென எவருக்கும் தெரியாது. குழந்தைகளுக்கென வாங்கிவரும் திண்பண்டங்கள்…

கணவனின் தோழியர்

புதியமாதவி (1) கதம்ப மாலையாய் உன் தோள்களில் உன் தோழியரின் புன்னகை. கதம்ப மாலைகள் கசங்காமலேயே அணைக்க நினைக்கிறது என் தோள்கள். கதம்பங்களுடன் கலந்துவிட்ட காற்றடித்து உதிர்ந்துபோகிறது என் இரவுகள். (2) பெண்ணுரிமைப் பேசும்…

தொப்புள் கொடி!

ப.வி.ஸ்ரீரங்கன் கனவுகளின் எச்சமாக சோகம் கப்பிய மங்கலான நினைவுகளினது நிழல்கள் தேகமெங்கும் தன் இருள் படர்ந்த விரல்களைப் பரப்பியபடி அன்னை! அடுப்பினில் புகையும் தென்னம் பாளையும் > அதனருகினில் வேகும் அந்த அற்புத உயிரும்…

கவிதை

வா.மணிகண்டன் சில கணங்கள் விருப்பமற்று கடந்து செல்கின்றன. ஒரு ஸ்பரிஸமாக, அழுத்தமான கீறலாக. அல்லது விசுக்கென்று விழும் அம்மாவின் கண்ணீராக. வா.மணிகண்டன். kvmanikandan1@yahoo.co.in

உனது மொழியை பு ாியாத பாவி நான்

நளாயினி தாமரைச்செல்வன் ____ மனசும் உடலும் சோர்ந்த தருணங்களில் உன் மடியில் கால் பதித்து நடைபயின்று உன் அலையின் ஓசையில் என் சோகங்களையே களைந்து போட்டு உன்னோடு சேர்ந்து குதாகலித்திருக்கிறேன். மலைச் சூாியனின் மறைவு…

சாலையோர நடைபாதை

ஸ்ரீமங்கை ---- துண்டித்த கோடுகளாய் சுண்ணம் தீட்டிய நெடுஞ்சாலையின் அகலத்தில் ப்ரமித்து ஓரமாய் நடக்கிறேன்- நீ போதித்தபடி. புகை கக்கிப்போன பேருந்தினின்று விழுந்த காகிதத்தில் காய்ந்த இட்லித்துண்டிற்கு அடித்துக்கொள்ளும் காக்கைகள், என்றோ லாரியில் அடிபட்டு…

ஒவ்வாமை

இளைய அப்துல்லாஹ் ஒவ்வொரு பொழுதும் குனிந்து குனிந்து எழும்புகிறாய். என் தளங்களை மீறிய தவிர்ப்புகளாய் நீ! என் அழகிய கால்களில் எப்பொழுதும் போதை காண்கிறாய். கால்களை அகட்டி வைத்திருக்காத பொழுதுகளிலும்ஸ உன் தொடுதல்கள் கூட…

உறவு

பவளமணி பிரகாசம் காமமில்லா காதலுண்டோ உப்பில்லா உணவுண்டோ தாம்பத்தியத்தில் பத்தியமா பகை அங்கே சாத்தியமா கைக்குழந்தை கணவனே என்றுமே முந்தானை பிடித்த முதல் குழந்தை மனைவியின் செல்லக் குழந்தை தன் முதல் குழந்தைக்குப் பின்…

கவிக்கட்டு …. 47

சத்தி சக்திதாசன் உருவம் உண்மை சொல்லுமா ? உள்ளதைச் சொல்லிவிடு உருவம் உண்மை சொல்லுமா ? இதயத்தின் நிறத்தை இயம்பிடுமா உந்தன் வதனம் இல்லாத இரக்கத்தை இருக்கு என்றே காட்டிடுமோ ? இயல்பான தோற்றமே…

மீட்டெடுக்கச் சொல்கிறேன்

செல்வநாயகி. **** அடுக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது என் மனம் அறைகளால் ஆன அப்பத்தா சுருக்குப்பை போல நிகழ்வுகளின் எச்சங்கள் அடுக்குகளுக்குள் சொருகப்படுகின்றன ஞாபகக்கட்டுக்களாய் ஒழுங்குகள் அற்றுப்போய் ஒரு சீட்டாட்டக்கட்டுக்கான தன்மையில் கலைந்துகிடக்கின்றன ஞாபகங்கள் இழுக்கப்பட்டும் சொருகப்பட்டும்…