திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முயல்தலில் ஒளிர்தலானது….

சாரங்கா தயாநந்தன் விறகின் மேல் மேனியில் நீறாய்க் கிடக்கிறது சாம்பல். நெஞ்சுறுத்தி. நிகழப் போகும் என் இறப்புணர்த்தி. நாளைய மயானத்தில் நான் தகனித்தலின் பின்னான என் உரு. வரண்ட இதயத்திலிருந்து வடிகிறது ஞானத்தின் முதல்துளி.…

அபகரிப்பு

இளைய அப்துல்லாஹ் தலை குனிந்தபடி நடக்கிறேன் என்னைச்சுற்றிலும் ஒலிகள் மனித அழுத்தங்களை இறுக மூடிய படிக்கு சுதந்திரமாக என்னை நடக்க விடுங்கள் என்னை கேள்வி கேட்க ஒருவர் வருகிறார் கண்ணை மூடிக்கொள்கிறேன் தொந்தரவு செய்வதற்கென்றே…

காலம் எழுதிய கவிதை – ஒன்று

அஸ்காாி - இலங்கை காலம் வளியின் வெளியில் கடினமான கவிதைக்கு பிள்ளையார் சுழி போடும். கவிதை வென்று காாியம் படைக்க கடல் தாண்டி உடம்பு போகும். காலக் கவிதையுடன் மனமோ சூனியவெளியில் சண்டை போடும்…

எங்கே என் அம்புலி ?

டான்கபூர் , இலங்கை கடல் மடியில் தவழ்ந்து. கடல் மடியில் உணர்ந்து. கடல் மடியில் கூடி. கடல் மடியில் காதல் பொழிந்து.... எங்கே என் அம்புலி ? கடற் காற்றில் மூச்செறிந்தாய். கடல் வெளியில்…

பேரழிவுச் சூலாயுதம்!

சி. ஜெயபாரதன் யாமறிந்த பேரழிவுப் பூத ஆயுதங்களில் பூமிதனில் சுனாமிபோல் காணவில்லை! பனிரெண்டு நாடுகளில் மாந்தரை குத்தூசி போல் ஊடுறுவி இழுத்து வந்ததை இன்றுவரைப் பார்த்ததில்லை! நாமெல்லாம் பாமரராய், அறியாத பாலர்களாய் அப்பாவிகளாய் பாதுகாப்பின்றி…

பெரியபுராணம் – 29

கண்ணப்ப நாயனார் புராணம் தொடர்ச்சி -- பா. சத்தியமோகன் 761. போவார்! மீண்டும் வருவார்! இறைவரைத் தழுவுவார் ! மீண்டும் போவார்! காதலுடன் நோக்கி நிற்பார்! கன்றை விட்டுப் பிரிகின்ற தனிமையுடைய பசுவைப் போல…

அற்றைப் பொழுதுக்கும் அப்பால்

இரா. றஜீன்குமார் நித்திலம் கொழித்த கடல்தானிது! நித்திலம் கொழித்த கடல்தானிது ஊழியாடி.... கடல் கரைமேவாதென்ற மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது. புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய் ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது. உலகம் முழுவதும் மனித…

சுநாமி ஊழியம்

மண்ணாந்தை என் சகோதரனே என் சகோதரியே இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறிவார்கள் இவர்கள் அளிக்கும் அரிசிக்கு நம் ஆத்மாவை அறுவடையாகக் கேட்பார்கள் நம் முன்னோர்களை சபிக்கச் சொல்வார்கள் நித்திய நரகத்தின் நெருப்பினைக் காட்டி…

குருவிகள்

செல்வநாயகி. **** தென்னைமட்டைப் பந்தலின் சின்ன ஓட்டைகள் வழியே வெளிச்ச வடாம் பிழிந்துகொண்டிருக்கும் வாசலில் முன்மதியவெயில் தூக்கம் கெடுக்கின்றன இரைச்சல்போட்டு என்று ஊன்றும் கைத்தடியை தூணில் அடிக்கும் பெரியபாட்டியை சொட்டும் மதிக்காது கசமுசவெனப் பேசிக்கொண்டிருக்கும்…

எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )

தமிழாக்கம் : நாகூர் ரூமி எறியப்பட்ட பந்தின் நீள்வட்டத்தின் கீழே பெரியவனாகிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. வெகு நேரம் வானம் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். பந்து விழுந்தது என் கையில், அது பாடியது மூடிய என்…