திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்!(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா (குடியரசு நாளை நினைவுப் படுத்தும் இன்று, இரவீந்திரநாத் தாகூர் வேண்டிய விடுதலைப் பாரதத்தை அவரது கீதாஞ்சலியில் காணலாம்) இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,…

ஒப்பிலான்

நெப்போலியன் எதிர்பாராத தருணங்களில் அதிர்ச்சியாய் நிகழ்ந்துவிடும் நெருங்கியவர்களின் இழப்பு வாழ்வின் எல்லா பிரயத்தனங்களும் வெற்று பூச்சியம் நிரந்தரமற்ற பிம்பமே நிகழ் என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கவா ? மரண உளியால் செதுக்கப்படும் நிமிடங்களே நம் ஆயுள்…

கவிக்கட்டு —- 46

சத்தி சக்திதாசன் புதிதாய்ப் பிறந்தவளோ ! புதிதாய்ப் பிறந்தவளோ பெண்ணாய்ப் புலர்ந்தவளோ இசையாய்ப் பொழிந்தவளோ மலராய் மலர்ந்தவளோ - இவள் புதிதாய்ப் பிறந்தவளோ கனவாய் விளைந்தவளோ மணமாய்த் தவழ்ந்தவளோ பனியாய்க் குளிர்ந்தவளோ நிலவாய் ஒளிர்ந்தவளோ…

முழுமை

பவளமணி பிரகாசம் இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை இடர் நிறைந்து போனது புதுக்கவலை இன்பமாய் இளமையில் துவங்குவது இடையிலேன் தடம் புரண்டு போகுது மூழ்கின்ற போர் சூழலிலே மூச்சை இறுக்கும் மூன்று முடிச்சிலே…

ஓரு உரைநடைச் சித்திரம்.

சந்துஷ். 'இருண்ட காலங்களில் பாடல் இருக்குமா ? இருக்கும் இருண்ட காலங்களைப்பற்றியதாயிருக்கும் ' பிரெக்ட் கடல் தூங்கும் பூமிக்கு எவர் மீது கோபம் அலை கொண்ட கடலுக்கு கரை மீது கோபம் கரை மீது…

புத்தர் இயல்பு (மூலம் ZEN)

தமிழாக்கம் : புதுவை ஞானம். அனைத்து உயிரிகளும் இயல்பில் புத்தர்தான். பனிக்கட்டியானது இயல்பில் தண்ணீர் என்பதைப் போல. தண்ணீருக்கு அப்பால் பனிக்கட்டி இல்லை. உயிரிகளுக்கு அப்பால் புத்தர் எனத் தனியாக ஏதொன்றும் இல்லை. அருகில்…

பலி (மூலம்- MARCOSAN)

தமிழாக்கம்-புதுவைஞானம் தாக்கு... அவனது காயத்திலேயே அவ்வப்போது. எப்போதும் ஆறவிடாதே அந்தப் புண்ணை. அவனது வேதனையிலிருந்து, புதிய.... ரத்தம் கசிய வேண்டும் அவனது வெஞ்சினம் எப்போதும் வாழவேண்டும் அவன் நெஞ்சுக்குள். பயந்து ஓடினால்.... குற்றவாளியென துரத்திப்…

மறுபடியும்

பவளமணி பிரகாசம் துட்டுள்ள சீமாட்டி கேட்டுப் பெற்றனள் செத்துப் போய்விட்ட செல்லப் பூனையின் அசலான நகலின் அன்போடு போற்றிட ஐயகோ! இது என்ன சோதனை! ஐயங்கள் செய்யுதே வாதனை! மாண்ட உறவினை, மனைவியை, மகனை…

கவிதைகள்

வா.மணிகண்டன். 1. பிரிதல் நிமித்தம் கண்ணீர்த்துளி கசிகின்ற கணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. மெளனமான இடம்பெயர்வொன்று. 2. நிகழ்வு எவருடைய நிழலும் வருடியிராத இந்தப்புள்ளியில்தான் எரிமலையின் சிதறலொன்று கடந்து சென்றது. வண்ணத்துப்பூச்சியின் மெல்லிய சிறகடிப்பை. ---- kvmanikandan1@yahoo.co.in

என் பொங்கல்

செல்வநாயகி **** அடுத்த ஊர் சூளையில் வெந்துவந்த சுண்ணாம்புக்கற்கள் ஊறித் தெளிந்த பாலில் குளித்தெழுந்த ஓட்டு வீடுகள் பூளைப்பூவின் வெண்மை வேப்பிலைப் பசுமை ஆவாரம்பூ மஞ்சள் மூன்றும் கலந்த சுகந்தம் காப்புக்கட்டிய இடம்சுற்றி விளைந்த…