அனந்த் என்னால் எதுவு மியலும் என்றே எதிலும் தலையிடுவோர் பின்னா லிருத்தல் பிழையென் றவையில் பிறர்முன் தானிருப்போர் மன்னா தலைவ எனமுன் புகழ்ந்து மறைவி லிகழ்ந்துரைப்போர் யின்னார் தவறை எடுத்துக் காட்டிச் சொன்னால் விரோதமிலை…
மாம்பலம் கவிராயன் தகப்பனே மெளலி புனைந்திடத் தாயார் முகத்தில் பவுடர் தடவ - நகத்தைக் கடித்துக் 'கடவுளும் ' யாசிக்கும் வீதி. அடித்து நகருது கார். தாருருகும் வெய்யில் தெருவில் பகல்நேரம் கார்நிறுத்தி நான்போகக்…
திலகபாமா அலை கடலாய் கரை அரிக்க அரித்த கரை நெடுவிலும் அணிவகுக்கும் சிப்பிகளின் அலங்காரம் துலங்கும் சமுத்திரத்தின் சங்கமமாய் நானும் கால்களுக்கடியில் கரைந்து போகும் மணல் துகளாய் கரையுமென்றெண்ணிய பாவங்களுக்காய் மூழ்கினாலும் என்றும் மூழ்காத…
இளங்கோ ஒரு நொடிசலனம் போதை தந்த நிமிடக்கலகத்தின் வீரம் எதிரே நின்றவனுடன் விவாதித்து கைகலப்பில் முடித்தாயிற்று அடிவாங்கியவனுக்கும் அந்த கணத்திலா ஆண்மை பொங்கியெழல் வேண்டும் ? அவன், அடித்தவன் நண்பனென உதறிப்போயிருக்கலாம் போதையின் திமிரிதென…
ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள். இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்…
மாம்பலம் கவிராயன் பீடித் தொழிலாளி சாணை பிடிப்பவன் லாடம் அடிக்குமாள் சித்தாட்பெண் - வாடி மிதியடி குத்தும் சிறுவனின் பேச்சே நிதியாம் கவிதைக் குணர். மாலையே மாற்றுங் கதைகள் பழையன ஓலையே சொல்வதே பாடெனக்…
அனந்த் பாருக்குள்ளே பெரிதுநம்ம நாடு - என்று பாடிக்கொண்டு சாதிச்சண்டை போடு பேதையரைச் சாகடித்துப் பாழ்துயரில் மூழ்கடிக்கும் போதையர்க்குக் கோவிலென்ன கேடு ?
மாம்பலம் கவிராயன் நீட்டி நிமிர்ந்து அரையில் பதமொடு தீட்டிய வாளுமாய்த் தீவிழி- காட்டிய வீரம் புகையில் கலக்கவே கட்டிலில் ஈரம். அரச சவம். பிள்ளை பிறந்த மகிழ்வொடு சாத்தனும் மெல்ல நகரும் வரிசையில் -…
எஸ். வைதேஹி. சூன்யமாய் கிடக்குது உலகம் சிந்திக்கத் திறனேயின்றி காமம் தலைக்கேறிக் கொண்டிருக்கிறது. உடல் அனத்திக் குளிர மனம் ஒதுங்க நினைக்கிறது. பதறிப் பதறி செயல்கள் சாத்தியமற்று கிடக்கின்றன. உணர்ச்சியற்ற கட்டையாய் அழும் நான்.…
ராஜி பளிச்சென்று பாயும் பெரிய பம்பரம், சொல்லேன் உன்னுடைய ரகசிய மந்திரம்! உலகத்தைச் சேர்ந்து சுற்றலாமோ ? பூரா பூலோகத்தைப் பார்க்கலாமோ ? (1) வேகமாய் வீசி விளையாடுகிறாய் ! உன் பிரகாசத்தை எனக்குக்…