அரச சவம்
மாம்பலம் கவிராயன்

நீட்டி நிமிர்ந்து அரையில் பதமொடு
தீட்டிய வாளுமாய்த் தீவிழி- காட்டிய
வீரம் புகையில் கலக்கவே கட்டிலில்
ஈரம். அரச சவம்.
பிள்ளை பிறந்த மகிழ்வொடு சாத்தனும்
மெல்ல நகரும் வரிசையில் – அள்ளி
க்ஷறைபடு காசெடுத்து அங்காடி போக
நிறைபடு சீனி நினைத்து.