திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முடிவுகளல்ல ஆரம்பங்கள்

திலகபாமா சிவகாசி முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மணலில் போட்டு வைத்த கட்டங்கள் தூக்கி எறிந்த செல்லாக்குகள் தீர்மானித்திருந்த கட்டங்களில் விழுந்திருந்தும் எல்லையைத் தொட அடித்த நொண்டிகளில் எகிறிப் போய் விழ மூடிய இமைகளோடு தேடிய செல்லாக்குகள்…

பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. என் வாழ்க்கை நிலவோடு ஒப்பிட்டேன் நீதானே உயர்ந்தவள்... மலரோடு ஒப்பிட்டேன் நீதானே சிறந்தவள்... கனவோடு கலக்கின்ற கண்ணான கண்மணி மனதோடு சேர்ந்திடு மறவாது மின்மினி சொலவது காதலன் சொல்வது என் கடன்...…

தமிழைப் பாடு நீ!

கரு.திருவரசு, செந்தமிழின் சந்தநலம் சிந்துகின்ற துறையிது! சிந்துநடை முந்துமனச் சீர்வரிசைப் பொருளிது! அந்தரத்தில் அந்தரங்க ஆன்மசுகம் தருவது! சொந்தமென வந்தவர்க்குச் சுந்தரத்தேன் சொரிவது! வல்லினத்தின் வலிமையோடு நல்லியலைச் சொல்லியும் மெல்லினத்தின் மென்மையோடு மேடைநடிப் பாடியும்…

விழி தூர கவனம்

தமிழ்மணவாளன் விரிந்து கிடக்கும் பிரமாண்டத்தின் முன் குவிந்து கிடக்கும் ஜனத்திரள் வியப்பை விழுங்கியபடி வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் வாரியெடுத்துச் சேர்க்கின்றன பாதங்களில் தொடர்ந்த பேரலைகள் நுரைத்துப் பொங்கி . அலைகள் மோதவும் அநேகமாய் பின்னகர்ந்த…

பணமே பரமாத்மாவே !

புகாரி, கனடா பணமே பரமாத்மாவே உன்னைப் படைத்த எங்களையே நீ படைக்கிறாயடா பூங்கொடி என்று உன் கைகளில் இரும்புச் சங்கிலியைக் கொடுத்து விட்டோம் அவை எங்களுக்கே விலங்குகளாகிவிட்டன உன்னில் தஞ்சமடைந்த அடிமை நாய்கள் குரைக்காத…

ரகசிய அறை

செல்வி என் வீட்டிற்குவரும் ஒவ்வொருவராலும் எனது ரகசிய அறை தேடப்படுகிறது ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டதும் எனது ரகசியங்கள் தேடப்படுகின்றன. ரகசியங்கள் கிடைக்காதபோது கிடைத்தவைகளே ரகசியமாக்கப்படுகின்றன. sellurs@yahoo.com

தீபமடியோ தீபம் !

கற்பகம் சித்திரமாய்ச் சிரிக்கும் சிங்காரமாய் அசையும் தீபமடியோ தீபம் வண்ணத் தீபம் ! சந்தனப்பொற் சிமிழெடுத்து சர்க்கரையால் திரி நிறுத்தி செங்கதிரை உருக்கியூற்றி செங்குத்தாய் ஏறுமிந்த தீபமடியோ தீபம் தங்கத் தீபம் ! பொன்னிலவுக்குப்…

உதவும் உள்ளத்தின் குமுறல்

சத்தி சக்திதாசன் மழைத்துளியாகி நான் பலமாகப் பெய்தேன் விழுந்ததென்னவோ தரிசான நிலத்தில் தான் அரத்த சந்தனமாக வீசினேன் நறுமணத்தை , மணம் எனும் உணர்ச்சியற்றோர் கூட்டத்தின் முன்னே மெழுகுதிரியாக பரப்பினேன் ஒளி ஜயகோ! குருடர்கள்…

ஆட்டத்தின் எல்லைகள்

ராபின் நமக்குத் தெரிந்தே இருக்கிறது ஆடுவதன் நோக்கமும் அதன் அர்த்தமும் கனவிலும் பயிற்சியிலும் நிகழ்த்தப்பட்ட ஒத்திகைகளின் அரங்கேற்றம் ஆட்ட மைதானங்களில் கற்றுக் கொண்ட ஆட்ட முறைகள் தேர்ந்து கொண்ட நுணுக்கங்கள் அமைத்துக் கொள்ளும் வியூகங்கள்…

நகர் வெண்பா இரண்டு

மத்தளராயன் நகர் நீங்கு படலம் -------------------- (நகருக்கு வெளியே போனால் தான் டிரான்ஸ்பார்மர்களின் சங்கீதத்தையும், முழு நிலவையும் அனுபவிக்க முடிகிறது) பாடிடும் மின்கடத்தி மோதிப் பனந்தலையில் ஆடிடும் காற்றில் அகல்வழி - ஓடியே நகர்ந்து…