திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 'சிறைக் கைதியே! சொல்லிடு என்னிடம், தண்டித்து உன்னைச் சிறையில் தள்ளியவன் யார் ? ' 'எனது மேலதிபதி, என்றுரைத்தான் கைதி. உலகில் மிகுந்த செல்வம் திரட்டி மேலோங்கி ஆதிக்க…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு

வெண்ணிலாப்ரியன். சித்திரை பத்து பெளர்ணமி ராவுல மொத்தச்சனமும் குமிஞ்சி கெடக்கும் மந்தமாச் சிரிக்கும் அய்யனார் வாசல்லெ. 'என்னப்பா இது 'ன்னு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் கேக்கும் அஞ்சாப்பூ காயத்ரிப்புள்ளக்கி அணில் முட்டை காட்ட கம்மாக்கரக்கி கூட்டிப்போயி…

இந்தமுறை

அருண்பிரசாத் திறந்து திறந்து மூடுகின்றன உன் அறை ஜன்னல் கதவுகள். வலிமை கூடிய காற்றில் உள்ளேயும் வெளியேயுமாய் அறைபடும் திரைத்துணி ஓரங்கள். மெளனங்களின் பூச்சுக்களில் பவித்திரமானதொரு வெறுமை அமர்ந்து பளபளக்கிறது தூசு துடைக்கப்பட்ட அலமாரிகளின்…

பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்

(தமிழில்) புதுவை ஞானம் மீண்டும் உயிர்த்தெழுந்து வா.... என்னுடன் என் சகோதரனே ' துயரங்களால் ஆழப்புதைக்கப்பட்ட உனது கரங்களை நீட்டு கருங்கல்லால் மூடப்பட்ட கல்லறையில் இருந்து திரும்பி வரப்போவதில்லை நீ.... பூமிக்கு அடியில் புதையுண்டு…

நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்

ஈழநாதன் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலோரம் அலைந்து திரிகிறது மேகம். கைக்கெட்டும் தூரத்தில் கருவானம் உண்டு களைத்து உறக்கத்தில். தெருவிளக்கின் ஒளியும், அலங்கார வளைவுகளின் பட்டுத் தெறிப்பும்... பகலாக்கி விடும் முயற்சியில் பாதி வென்ற களிப்புடன்…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா ---- ஒன்று இறகுதிர்க்கும் பறவை ஒன்று மரித்துப்போன மரக்கிளையில் அமர்ந்துள்ளது வலிய பறவையதை கொத்திச் செல்கின்றன சிறியவைகள் காம்பு பிரியும் காய்ந்த பூவைப்போல விழுந்துபடலாம் ஒரு நாள் அந்த வீர்யப் பறவை.…

தீ தந்த மனசு

சாமிசுரேஸ் காத்;திருப்புகளின் கொடிய சிறகுகள் நிரந்தரமாய் முகம் புதைந்து மரணச்சிசுக்களாயின மூக்கின் மயிர்க்குதிருக்குள் மரணமணம் புற்றுக்கள் வார்த்து மனஙு ; கொள்கிறது நான் நடக்கத்தொடங்கினேன் ஏன் கால்களுக்கடியில் முட்களாய் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது காலம் பாதை ஓரங்களில்…

கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்

சத்தி சக்திதாசன் வசந்த காலங்கள் வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் வாலிபப் பூக்கள் வந்ததை எல்லாம் செலவிட்டு வறுமையிலும் வாடாது நிற்கின்ற இயற்கையின் இறவாக் காலங்களவை வசந்த காலங்கள் இல்லாதோருக்கும் இருக்கும் இன்பம் இல்லையென்றாலும் இனிக்கும் பருவங்கள்…

ஞானப் பெண்ணே

ஜெயந்தன் என்னென்ன நடக்குது ஞானப் பெண்ணே கொஞ்சம் நின்னுபாரடி ஞானப் பெண்ணே சிரிப்பா சிரிச்சவ கைகளிலே செங்கோல் சிரிக்குது ஞானப் பெண்ணே செருப்பாய்க் கிடந்தவன் கால்களுக்கு செங்கழல் ஆச்சே அதிகாரம் குடிச்சாலும் தமிழனாம் ஞானப்…

நெஞ்சுக்குள்ளே ஆசை

பிருந்தா சரண் கோடிஆசை கொட்டிகிடக்கு ஆசைமச்சான் உள்ளத்திலே காட்ட ஏனோ தடையிருக்கு பூட்டிவச்சீக நெஞ்சுக்குள்ளே கருத்தமச்சான் அணச்சுகிட்டான் முருக்கோிய கைகளிலே அன்னகிளி சரணடஞ்சேன் உரம்பாய்ஞ்ச நெஞ்சத்திலே ஜன்னலோர மரங்களல்லாம் எட்டிஎட்டி பாக்குது படுக்கைவிாிப்பு நம்மபாத்து…