திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

“மும்பை மண்ணே வணக்கம்!”‍‍‍….

ருத்ரா அந்த கொடூர நாள்! மறக்கமுடியுமா அதை? தாஜ் ஒட்ட‌ல் தீக்குளித்த‌து ஏன்? கொலைப்ப‌சி எடுத்த‌ கும்பல் ப‌சியாற "தாஜ் ஓட்ட‌லுக்கு" வ‌ந்த‌தால் தான். சிக்கன் வறுத்த கரும்புகையா அது? அந்த‌ ஓட்ட‌லில் மானுட‌த்தையே…

ஒரு மாயவானம்

ஹெச்.ஜி.ரசூல் அலையடித்துக் கொண்டிருக்கிறது ஓய்ந்தபாடில்லை கரும்பாறையாய் இறுகி உட்கார்ந்து அலைகளை சிதறடிக்க விருப்பம். தெரியாத திசைகளிலிருந்தும் புறப்பட்டு நெருங்கிமுத்தமிடும் காற்றில் ஒட்டிக் கொண்டிருக்கிறது ஈரம். மேகம் தொட்டுரச எண்ணும் வேளிமலைக் காற்றின் வருடல் கடலும்…

தருணங்கள்..

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி முன் எப்போதோ நான் முன்வைத்த யோசனையாம். முற்றிலும் நினைவிலில்லை. வாங்கிய இடமொன்று நல்ல விலை இப்போதென்று கண்களில் ஒளிகொண்டு கைகளைப் பிடித்தபடி கடைத்தெருவில் ஒரு நண்பன். மகனுக்கு வாங்கிவந்த மாநிற…

வேத வனம் விருட்சம் 15

எஸ்ஸார்சி உலகம் நுகர் பொருள் ஆன்மா அன்று நுகர்வு துறத்தல் உலகு துறத்தல் நுகர்வு மீது வெற்றி ஆன்ம லயிப்பு. உணர்வுகளை வெல் உடற்பசி வெல் ஆன்ம ஞானம் கை கொடுக்கும் கிட்டிடும் பேரின்பம்…

“ஜடப்பொருளின் உரை”

கே.பாலமுருகன் “வணக்கம்! வணக்கம்! வந்தோருக்கு வணக்கம்! நான் உலகத்தின் மகத்தான பலவீனமான ஜடப்பொருள்களின் பிரதிநிதி! உங்களுக்காக செய்தி கொண்டு வந்திருக்கிறேன்! கடந்த நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை ஜடப்பொருள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே…

எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு

வசீகரன் ஏணையில் உறங்கும் பச்சிளம் குழந்தையைக்கூட ஏவுகணை வீசி கொல்லும் எதிரிகளே உங்கள் உலக சாதனையை அம்மணமாய் நின்று கொண்டு உலகம் வாழ்த்தட்டும் எங்கள் வலிகள் உங்களுக்கும் புரியவில்லை இன்னும் இந்த உலகத்திற்கும் புரியவில்லை…

உன் முகங்கள்

வே பிச்சுமணி பிரபஞ்சத்தில் எத்தனையோ வீண்மீன்கள் வெடித்து அழியும் காதல் தோல்விகள் போல்- எத்தனையோ வீண்மீன்கள் புதிதாய் தோன்றும் காதல் வெற்றிகள் போல கருத்த உடம்பில் பல்லை தவிர வேறு வெள்ளையில்லையென காதல் மறுத்த…

கடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 நாணல் புதர்ப்பக்கம் தவளைக் கச்சேரி குழலிசை கூடவே 2 கதை வேணாம் தூங்கி விட்டது குழந்தை தூக்கம் வராத பாட்டி 3 ராஜகுமாரன் வந்து தூக்கிப் போனான் ராணியை மிட்டாய்க்…

ஞாநிக்கு ஒரு தீனி.

ருத்ரா மும்பையில் நடந்த‌ தீவிரவாத சம்பவம் பற்றி புதிய கோணம் ஒன்றைப் படைத்திருக்கும் ஞாநிக்கு பாராட்டுகள்! ஞாநி சிறந்த கட்டுரையாளர். "புட்டு புட்டு "வைத்து எழுதுவதில் புல்ல‌ரிக்க‌ வைப்ப‌வ‌ர். புல்ல‌ட்டுக‌ளைப் பற்றி ஆனாலும் ச‌ரி…

கவிதைகள்

தாஜ் அக்கரைக் காட்சி அவர்கள் பெருத்துவிட்டார்கள் மனிதர்களின் மாற்றாய் நிஜங்களின் நிழலாய் நகர வீதிகளின் அங்கமென நடமாடும் அவர்கள் லோக காப்பாளர்களால் கல்லடிப் படும்வரை அடையாளம் தெரிவதில்லை. நான் காலாறும் இடமெல்லாம் கேலிச் சிரிப்போடு…