ஆறுமுகம் முருகேசன்ஒருபோல அமைவதில்லை எல்லா பகல்களும்.. தெருவோர சிறுவனொருவனின் கிழிந்த சட்டைபை ஞாபகபடுத்துவதில்லை என்னை.. பூக்காரசிறுமியின் பூக்கள் அழகுபடுத்த போவதில்லை அப்பூக்கார சிறுமியை ஒருபொழுதும்.. அவளைப் பற்றிய பாடலொன்று கேட்டுவிட முயற்சிப்பதில்லை எல்லா பேனாமுனைகளும்..…
ப.மதியழகன்சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற விலங்காய்ப் பயன்படுவான் குருதியை யாரும் கண்டதில்லையா அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்- என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில் கண்கள் மூடியே இருக்கும் காணச்சகிக்காது இவ்வுலக…
நாவிஷ் செந்தில்குமார்வீட்டின் முன்னே பறந்துகொண்டிருந்த பலூனும் வண்ணத்துப்பூச்சியும் ஒரு நூலால் கட்டப்பட்டிருந்தன… எது எதை இழுத்துவந்ததென அறிய நூலை அறுத்தேன் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணித்தன குழந்தைகளின் உலகத்திலிருந்து தத்தம் உலகத்திற்கு!
வித்யாசாகர் பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் - ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு - ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் -…
நடராஜா முரளிதரன்நான் சிறு பையனாக இருந்தவேளை எனது அம்மம்மா சொல்வாள் தான் பிறந்த வாழ்ந்த ஓடு வேய்ந்த சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி ஊடுருவி உறைந்து காலக்கண்ணாடியில் படிந்து சடத்துவமாய் காட்சி தந்து மூலக்கூற்றுக்…
செ. பாலச்சந்தர்...... ஒவ்வொரு முறையும், உன்னிடம் வாதிட்டு, தோற்றதின் படிமங்கள், ஆயத்தப்படுத்துகின்றன, அடுத்தமுறை உன்னை வீழ்த்த, இம்முறை வார்த்தையையும், வாதத்திற்கான காரணியையும், ஒன்று சேர்த்து கூர்தீட்டி, ஆயுதமாய் திரித்து, மறைத்தவாறு, தோன்றுகிறேன் உன் முன்னே...…
காவிரிக்கரையோன் "இன்றைக்கு மௌன விரதம்" தாள் நிறப்பி அனுப்பிய பின் கண்ணால் வார்த்தைகள் வார்த்து நீ கோர்த்த வாக்கியங்கள் எனக்கு புரியவில்லை என்ற பயமேன் உனக்கு? இதயத்தின் துடிப்பு இதயத்துக்கு அந்நியமாய்ப் போய் விடுமா?…
ராமலக்ஷ்மி, பெங்களூர்.மொட்டுஅதுத் தானாகக் கட்டவிழும் முன்னே பட்டுடுத்தி அலங்கரித்துப் பாதத்தினைப் பற்றியெடுத்து அம்மிமேல் வைத்தழுத்தி அருந்ததியைப் பார்க்கவைத்து கட்டிவைக்கிறார் அவசரமாய் கடமையை முடித்திட..! ஈரைந்து திங்களேலே ஆடுகிறது தொட்டில். தொலைத்திட்ட அவள் பருவம்போலத் துலங்குகின்ற…
இளவட்டம் பெருத்த இரையை தட்டு தடுமாறி சுமந்து வந்த எறும்பு ஒன்று நிலைத்தடுமாறி நீரில் விழ அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தவனின் நினைவில் செய் நன்றிக்காக புறா இலை பறித்து போட எறும்பு அதன்…
செல்வராஜ் ஜெகதீசன்முதல் முறையல்ல இப்படி நிகழ்வது. அன்பின் நிமித்தமான ஒரு பரிசளிப்பிற்குப் பின் அடுத்தொரு சந்திப்பிலேயே வெகு மூர்க்கமாய் உன்னைத் தாக்க நேர்ந்த இந்த பொழுதைப் போல் இப்படி நிகழ்வது இது முதல் முறையல்ல.…