திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சிலர் வணங்கும் கடல்

லதாமகன்விருப்பமற்று அலைந்துகொண்டிருக்கிறது புக விரும்பமில்லாத நீர் வெட்டிவிடப்பட்ட தக்கையின் இடைவெளிகளில் ஆதியில் ஊறிய வன்முறையுடன் சிப்பி மூடிக்கொண்டிருக்கிறது தன்னுள் விழுந்து ஒற்றைத் தூசியின் உறுத்தலில் ஊறும் அன்னிச்சை நீருடன் எப்போதும் உப்பாகாத மீனின் அலைவை…

சுயபரிசோதனை

சின்னப்பயல் உன்னை அதிகம் துன்புறுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மகிழ்வைத்தந்திருக்கிறது உன்னை அதிகம் காயப்படுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மருந்து போடுவதற்கு பயன்பட்டிருக்கிறது. உன்னை அதிகம் உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ? அது என்…

கருவனக் குழி

ந.மயூரரூபன் நிறங்கருத்த குழிக்குள் உங்கள் தலைகள் ஒளிந்திருக்க குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில் மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள். ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால் கருவனம் ஒன்று மிதக்க தலைகள் ஆழ அமிழ்ந்துபோகின்றன. கருவனக்குழிகள் நிறையும் பாதையே என்கால்களின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய்…

சன்னமாய் ஒரு குரல்..

அமைதிச்சாரல் மரணத்தின் வாசம் நிரம்பிய சிதறிக்கிடக்கும் துளிகளினூடே.. வீதியெங்கும் என் விருட்சங்கள் இழுத்துச்செல்லப்படும்போதும் பரபரத்துப்பதறி பற்றிட நினைக்கும் என் கைகள் வெட்டப்படும்போதும் நானெழுப்பும் கூக்குரல் ஏனோ.. உங்கள் காதுகளை வந்தடைவதில்லை. கருவறையே கல்லறையாவது பெண்களுக்கு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா ! (கவிதை -33)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெதுவாய் நடப்பது உன் வழக்கம் பல்லாண்டு களாய் உனக்கு மன வெறுப்புண்டு ! அந்த மனச் சுமையில் எப்படி அமைதி…

வனவாசம்

குமரி எஸ். நீலகண்டன் பசுமையற்ற காங்கிரீட் காடுகளினிடையே விலங்குகள் விலக்கிய வீச்சம் நிறைந்த வீதி நதிகளின் விஷ வாசத்தினூடே நான்கு சக்கர கால்களுடன் காட்டுக் கத்தலில் நகர்ந்து செல்கிற சிங்கங்கள், புலிகள், காட்டு யானைகள்,…

இல்லாத ஒன்றுக்கு…

ஹேமா(சுவிஸ்)*********************************** உதறிவிட்ட கைகளில் திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது ஒற்றை இறகோடு இலையான் ஒன்று தோலைத் துளைக்க மறந்ததோ இல்லை இயலாமையோ இருக்கிறது அசையாமல். குப்பையாய் கூட்டி அள்ளிய சொற்கூட்டம் இலக்கியங்கள் வல்லின மெல்லினங்கள் யாப்பு…

நீரைப்போல நாமும் இருந்தால்

இரவி ஸ்ரீகுமார்! ---- -------------------------------------------------------------------- நீரைப்போல நாமும் இருந்தால் வானும் மண்ணும் ஒன்றாய் தெரியும்! கசடும் கழிவும் அகிலும் மணமும் நீரில் எல்லாம் ஒன்றாய் கலக்கும்! பிரித்து கழித்து ஒதுக்கி என்றில்லாமல் வருவதையெல்லாம் தன்னுள்…

வலிகளின் வரைவிலக்கணமானவள்…

லறீனா அப்துல் ஹக் (இலங்கை)- மௌனத்தின் இடைவெளிகள் நீளும் போதெல்லாம்.... நசிந்து போகின்றது உறவென்று நினைத்துவிட்டாய், நீ. உனக்கான வாழ்தலின் நெருடல்களை நீவுதற்கும் உறுத்தல்கள் எதுவுமின்றி உத்தரவாதப்படுத்துதற்குமாய் - நீ அறுத்துப் பலியிட்டதென்னவோ என்னுடைய…