அன்பாதவன் அருகருகே த் தொடர்கிறது நம் பயணம் சுவாரஸ்ய மவுனத்தோடும் சுகமான நினைவுகளுடனும் தண்டவாளங்களைப் போல தகுந்த இடைவெளியோடு. @ உடைந்த வளையல்துண்டுகளாய் வீழும் உரையாடல்களைக் குலுக்க மனசின் முப்பட்டைக் கண்ணாடியில் திரள்கின்றனப் புதுப்புது…
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ நீங்கள் அறிந்திருப்பதைப் போன்றே நானும் அதை நன்கறிந்திருக்கிறேன். நாளை ஒருவன் வரக்கூடுமென்றும் இரவும் பகலுமற்ற இடை வெளியொன்றில் இணக்கங்களும் பிணக்கங்களுமற்ற மையச் சாத்தியக் கூறுகளில் முற்றுமாய் கசடுகளற்ற சில பந்த பிணைப்புகளை…
முனைவர் சி.சேதுராமன்வானம் தன் கைகள் நீட்டி அள்ளியநீர் மேல் போய் கரியதாம் நாவற் கனிபோல் கருப்பாக நிறமும் மாறி காற்றினால் அலைப்பு முண்டு கைகளால் குடித்த நீரை அன்பால் கண்களால் கசியவிட்டு காசினி குளிரச்…
இளங்கோ* மௌனக்கோட்டில் புள்ளிகள் கொத்துகிறான் ஒருவன் சொற்களின் கூர் பட்டுத் தெறிக்கின்றன பிசிறுகள் கண் திறக்கும் தருணத்தில் உடைந்து விழுகிறது மௌனம் ***** --இளங்கோ
ரசிகன் ஒரு குறிப்பிட்ட சில தோழிகளை மட்டும் எண்ணம் பட செய்கிறது ஒரு 555 சிகரெட்டும் ஒரு கிளாஸ் ஜானி வாக்கரும்! பேசப்படாத நாட்களில் மௌனங்களுக்கு ஊற்றி விடவோ பற்ற வைக்கவோ தவறியதில்லை நினைவுகள்!…
December 27, 2010 •
M.ராஜா 1சாபச் சுமை சுவர்வழி இறங்கிய ஈரம் படர்ந்திருக்கும். பாதுகை உதிர்த்த மண்துகள்கள் ஈரக் கோடிழுத்தூரும் அட்டைப்பூச்சி மேலும் கீழுமாய் பயணதிசை காட்டும் பாதச்சுவடுகள். எதையும் பாரமெனவே கொள்ளுமோ மாடிப்படிகள்? வருடிச் செல்லும் காற்றில்…
கோநாமுதல் சந்திப்பிலேயே தெரிந்துவிட்டது இருவருக்கும் திறந்திருந்த அத்தனை சாத்தியக்கூறுகளும். பின்வந்த ஒன்றிரண்டு யதார்த்தச் சந்திப்புகளிலும் திட்டமிட்ட சந்திப்புகளிலும் சாத்தியக் கூறுகளனைத்தும் ஒவ்வொன்றாய்ச் சாத்திக்கொள்ள பின்னிரவுச் சந்திப்பொன்றில் பயம்நீங்கி வெளிவந்து சந்தித்துக் கொண்டன வனப்பான வனத்துள்…
சிறி.ப.வில்லியம்ஸ் ஒரு சில புனைவுகளுடன் உனக்கான பதிலை எப்போதும் தயாராகவே வைத்திருக்கிறேன் எதிர்பார்க்கையில் மௌனமாயிருப்பதும் என்றைக்காவது திடுமென முற்றுகையிடுவதும் உன் போர்த்தந்திரமென புரிந்தே வைத்திருக்கிறேன் ஒன்றுவிடாமல் சோதனையிட்டும் ஒரு தடயத்தைக்கூட கண்டுபிடிக்கமுடியாத உன்னிலை பரிதாபகரமானது…
ப.மதியழகன், கடலுக்கடியில் பூகம்பம் கண்களை கசக்கிப் பார்க்கிறோம் உண்மையில் ஆளுயர அலை எழும்பி வருகிறது ஆழ்கடலிலிருந்து கருமை நிற ராட்சச அலை கவ்விச் செல்கிறது மனிதர்களை சமுத்திர ராஜனுக்கு ராஜ்ய வெறிபிடித்தது தனது எல்லைகளைக்…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள் சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான் செழிக்கிறேன் நானும் காலங்காலமாக மென்மையில் ஊறிக்கிடக்கும் மனமதில் எக் கணத்தில் குடியேறினேனோ இசைத்த கீதங்களின்…