நண்பன்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

ரஜித்


இன்னும் ஒரேநாள்
மழை மண்ணை மறந்தால்
மரணிக்கும் பயிர்கள்
அப்போது

மழையாக இறங்குவான் நண்பன்

வெட்டவெளி
கூட்டமாய் சிட்டுக்கள்
கொட்டுகிறது மழை
குடை பிடித்தது ஓர் ஆலமரம்

அந்தக் குடையாக வருவான் நண்பன்

தத்தளிக்கிறது கட்டெறும்பு
கட்டுமரமானது
ஒரு காய்ந்த இலை

அந்தக் கட்டுமரமாக வருவான் நண்பன்

அணைந்து அணைந்து
எரிகிறது உயிர்
ஆக்ஸிஜனைவிட அவசரத் தேவை
பி பாசிடிவ் ரத்தம்

அந்த ரத்தமாக வருவான் நண்பன்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

நண்பன்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

பவளமணி பிரகாசம்


கூறத்தான் வார்த்தைகள் போதாது
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
மாறாத மறக்காத பற்று அது
கொஞ்சமும் குறையாத பாசம் அது
நிலையான நிறைவான நட்பு அது
தடையின்றி பிரவகிக்கும் ஊற்றது
கணமும் கவனம் கலையா காவலது
துடிப்பாக ஓடி வந்து நிற்கையிலே
வெறித்தனமாய் கொஞ்சுகையிலே
அறிவோடு கண்கள் பார்க்கையிலே
வலாய் காத்திருக்கும் பாவத்திலே
வாலை ட்டும் வேகத்திலே
திருப்பி ட்டி மகிழ
வாலில்லாதது குறையே.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

நண்பன்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

வை.ஈ.மணி


நாளும் உடனிருந்தும் நானறியேன் உன்னை
தாளேன், உயிரேயுன் தங்குமிடம் கூறு
திண்ணமது நீயொருநாள் சொல்லாது செல்வாய்
எண்ணமுன தென்னவென்று சொல்.

நெடுநாள் இனையர்தம் நெஞ்சம் வெடித்திடும்
விடைபெற்று அன்றி விலக நிகழ்ந்திடின்
ஆருயிர் நண்பனின் ஆகுலம் ஓங்கிடின்
நேருமே நட்புக் கிழுக்கு.

—————————————————————————————————————–
ntcmama@pathcom.com

Series Navigation

நண்பன்

This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

சேவியர்


ஒரு காலத்தில் அவன் என்
பிாியத்தின் பிரதிநிதி
நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள்
திணிக்க முடியாத தோழன்.

என் பள்ளிக்கூட நாட்களின்
பல்லாங்குழிச் சினேகிதன்.

தவளைக்குளத்தில் நீச்சலடித்து,
தூண்டில் நுனியில் மண்புழு சொருகி
ஓடைக்கரையில் மீன் பிடித்து
அணில் மேல் கோடு வரைந்தது யாரென்று
விவாதம் செய்யும் பொழுதுகள் வரை
என் விரல் தொட்டே நடந்தவன்.

ஒரு விடலைப்பருவத்தின் விளங்காப் பொழுதில்
காரணமே இல்லாமல் சண்டையிட்டோம்.
முகம் இறுக்கி கரம் முறுக்கி
முடிச்சிட்டு முடிச்சிட்டு
இருட்டுக்குள் தடுக்கி விழுந்த நிழலாய்
நட்புநுனி தொலைந்தே போனது.

கோபத்தின் கொடுக்குப்பிடிக்குள்
எங்கள் நெருங்கிய நேசத்தின்
தண்டுவடங்கள் உடைபட்டுத் தொங்கின.

ஒரு படி கீழே இறங்கி நான் பேசியிருந்தால்
ஒரு மாடி உயரம் அவன் இறங்கியிருப்பான்.
அந்த பச்சைமர ஆணித்தடம்
வெட்டுத்தோற்றத்தில் கட்டாயம்
வெளிப்பட்டிருக்கக் கூடும்.
ஆனால் பேசவில்லை.

வாலிபத்தின் சாலை முடிந்து
நடுவயதின் சந்தும் முடிவுற்று
முதுமையின் ஒற்றையடிப்பாதை வரை,
அவனோடு பேச விடவில்லை
பாழாய்ப்போன இந்த வறட்டுக் கொரவம்….

யுகத்தைக் கிழித்துக் கொட்டிய
என் குப்பைக்கூடையில்
என் ஆணவத்தின் அணிகலன்கள்
இன்று அறுந்து கிடக்கின்றன

என் நினைவிகளிடையே பீறிட்டுக் கிளம்பும்
இன்றைய நேசத்தின் ஓாிழை
நேற்று மாலையேனும் கசிந்திருந்தால்,
என் பால்யகால பச்சைக்கிளைகளுக்கு
அவனோடு ஒருமுறை பறந்திருக்கக் கூடும்.

நேற்றிரவு மரணம் சந்திக்கும் முன்
ஒருமுறையேனும் அவனோடு அழுதிருக்கக்கூடும்.

***

Series Navigation