காதல் பொதுவானது
சேவியர்

0
ரயில்வே நிலையத்தின்
பின்புற சந்தில்
பைக்கில் அமர்ந்திருந்த
பையனிடம்
அழுத விழிகளோடு
வாதிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடமும்,
கன்னிமேரா
நூலகத்து மரத்தடியில்
பெண்ணிடம்
கெஞ்சும் குரலில்
பேசிக் கொண்டிருந்த
பையனிடமும்,
வள்ளுவர் கோட்டத்து
வாசலில்
சிரித்துக் கொண்டே
பேசிக்கொண்டிருந்த
அவர்களிடமும்,
அதோ
நமக்கெதிரே
பஞ்சு மிட்டாய் கடிக்கும்
இந்தக்
கல்லூரி இளசுகளிடமும்,
பொதுவாய் இருப்பது
காதல் தான்
நம்மிடம் மட்டுமே
நட்பு
என்று சிரிக்கிறாய் நீ.
எத்தனை பேர்
நம்மைப் பார்த்து
இப்படிச் சிரித்தார்களோ ?
0
சேவியர்
Xavier.Dasaian@in.eFunds.com