சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

‘தமிழ்க் கலைப்படவிழா ‘ ஜீன் 5, 2004


அன்புடையீர்,

வணக்கம். 1996-இல் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி – தமிழ்க் கலை, இலக்கி யம், வாழ்க்கை குறித்த பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

அவற்றுள் பி ன்வருவன குறிப்பிடத்தக்கன.

1. தமிழ்நாடு நேற்று இன்று நாளை – திறனாய்வு நூல்

2. சுப்ரமணிய பாரதி – தமிழ் மற்றும் ஆங்கில விவரணப் படங்கள் (Documentary)

3. தாயகத்திலிருந்து வரும் தமிழறிஞர்களைக் கொண்டு அவ்வப்போது பல்வேறு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள்

2004-ல் புதுப்பொலிவுடன் சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி உங்களையெல்லாம் சந்திப்பதி ல் மிகவும் மகிழ் ச்சியடைகிறது. 2004-ன் முதல் நிகழ்ச்சியாக ‘தமிழ்க் கலைப்பட விழா ‘வை சிந்தனை வட்டம் நடத்தவுள்ளது. தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரத்திற்கு இணையாக இல்லை என்கிற அதிருப்தி தமிழரி டையே வளர்ந்த வண்ணமிருக்கிறது.

தமிழில் வெளியாகும் பெரும்பான்மையான வணிகப் படங்களைப் பார்க்கும்போது இந்த விமர் சனத்தில் பெருமளவு உண்மை இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். அதிர்ஷ் டவசமாக ‘காம்கார்டர் புரட்சி ‘ கொண்டு வந்த தொழில்நுட்ப சாத்தியங்கள், இளம் கலைஞர்களின் கவனத்தையும் கனவையும் சினி மாவின் பக்கம் திருப்பியுள்ளன. அதன்மூலம் கணிசமான அளவில் தமிழில் கலை மற்றும் யதார்த்தமான மாற்றுக் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய படங்கள் தமிழ்நாட்டிலும் இந்தி யாவிலும் போதுமான கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதில்லை.

லண்டன், சுவிட்ஸர்லாந்து, திருப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற குறும்பட விழாக்கள் இத்தகைய படங்களை வெளியுலகப் பார்வைக்குக் கொண்டுவர பெரி தும் உதவியுள்ளன. அதேபோல, சிந்தனை வட்டம் இத்தகைய படங்களையும் அவற்றின் கலைஞர்களையும் உற்சாகப்படுத்தவும் அங்கீகரிக்கவும் கெளரவிக்கவும் விரும்புகிறது. அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்ற தமி ழர்கள் இப்படங்களைப் பார்க்கவும் இது வழிவகுக்கும்.

இத்திரைப்பட விழா, ஒரு நாள் முழுவதும் நியூ ஜெர்ஸியில் நடைபெறும். அவ்வமயம், இந்திய மற்றும் பன்னாட்டுக் குறும்பட விழாக்களில் பரிசுகள் மற்றும் சிறப்புக் கவனம் பெற்ற பல குறும்படங்கள் திரையி டப்படும். ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றிய பார்வையாளர்கள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்களும் நி கழ்வுறும். திரையிடப்படும் குறும்படங்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்படும்.

இவ்விழாவை முன்னிட்டு, சி ந்தனை வட்டம் சார்பாக, தமிழில் திரைப்படத் துறை சார்ந்த சிற்றிதழான ‘நிழல் ‘ ஒரு சிறப்பு மலர் வெளியிட இருக்கிறது. சி ந்தனை வட்டம் நடத்துகிற இக்குறும்பட விழாவையொட்டி வெளியிடப்படும் இவ்விதழில் தமிழ்ச் சினிமாவின் வரலாறு, தமிழ்க் கலைப்படங்களின் வரலாறு, தமிழில் விவரணப் படங்களின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழி ல் கலைப்படங்களை வெகுஜனங்களிடையே எடுத்துச் செல்வதில் உள்ள சவால்களும் தீர்வுகளும், குறும்படத் துறையில் கேம்கார்டர் புரட்சி, குறும்படங்களின் எதிர்காலப் போக்குகள் என்று பல தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற உள்ளன.

விழாவில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு அவ்விதழ் கிடைக்கும். ‘தமிழ்க் கலைப்படவிழா ‘ ஜீன் 5, 2004 (சனி) அன்று நியூ ஜெர்ஸி மாநிலம், ஹி ல்ஸ்பாரோ நகரத்து, முனிசிபல் காம்ப்ளெக்ஸ் மல்டி-பர்ப்பஸ் (Hillsborough Municipal Complex – Multi-purpose Room) அறையில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சி க்கான நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 15 டாலர்கள் (மதிய உணவும் சேர்த்து). பல குறும்படங்கள், அவற்றையொட்டிய அறிவுபூர்வமான கலந்துரையாடல்கள், மதிய உணவு, சிந்தனை வட்டம் சார்பாக வெளிவரும் ‘நிழல் ‘ சிறப்பு மலர் வெளியீடு என்று பல சிறப்புகள் நிறைந்தது இந்நி கழ்ச்சி.

கலையுணர்வும், நுணுக்கமும், சமுதாயப் பார்வையும் பெற்ற குறும்படங்களை வெகுஜனப் பார்வைக்குக் கொண்டுவரும் முயற்சியாக நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இவ்விழாவில் திரையிடப்படப் போகும் குறும்படங்கள் உள்ளிட்ட மேலும் விவரங்களை வி ரைவில் எதிர்பாருங்கள்!

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:

கோபால் ராஜாராம் – gorajaram@yahoo.com

பி.கே. சிவகுமார் – pksivakumar@att.net

துக்காராம் கோபால்ராவ் – thukaram_g@yahoo.com

ஜி.சாமிநாதன் – sami@nettaxi.com

Series Navigation

சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

ஜூன் 5, 2004, ஹில்ஸ்போரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ்


Series Navigation