திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

‘கவிதையும் கழுதையும் ‘

கரு.திருவரசு பெண்ணே கவிதை! மகளானாய்! மாண்புநிறை மனையானாய்! வந்த மருமகளாய் அவளுக்கு மாமியாரும் ஆனாய்! அகலானாய் வீட்டுக்கே! அக்காளாய் தங்கை அண்ணியுமாய் ஒருமுறையில் நாத்தியுமாய் ஆனாய்! பகலான பெண்ணேநீ பதமாக எவனும் படைக்காத படைத்தாலும்…

செந்தமிழ்ப் பாட்டன்

பசுபதி செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர் செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே . . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே (1) தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;…

‘மே-தை மாதம் ‘

நா.முத்து நிலவன். 'எட்டுமணி நேரவேலை, எட்டுமணி நேரஓய்வு, எட்டுமணி நேரஉறக் கம், - இதைக் கெட்டமன மூலதன வர்க்கமே தருக 'வெனக் கேட்டெழுந்த போரின் தொடக் கம்! -1 மேதினி முழுதுமிந்த மேதின நினைவிலெழும்…

மழை

ஸ்ரீராம்... நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ? முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று .... வானம்,நிலம் பார்த்த பார்வையால் சற்றே சினத்துடன்…

இன்னும் தொலையாத இன்னல்

அனந்த் 0o0o0o0 கன்னக் குழியும் கருநிற விழிகளும் ... கற்றைக் குழலும் கலகல வெனவரும் கன்னல் மொழியும் கவர்தளிர் உடலொடு ... கட்டத் துடிக்கும் இளமையும் துளுமொரு மின்னற் பொறியாய் விளங்கிடு வனிதையை ...…

வாழப் பழகிய சந்தன மரம்

திலகபாமா சிவகாசி அந்த அழகிய அறைக்குள் பத்திரமாக நானிருக்க வைக்கப் பட்டிருந்தேன் எனக்கான உணவுகளும், உடைகளும் உன் புருச லட்சணங்களால் பரி மாறப்பட பசியாறினேன் வந்து போகும் இடைவெளியில் சுகம் தந்து போவதாய் பசியாறிப்…

வாக்குமுலம்

யாழி *இந்த கவிதை மூலம் ஈராக் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற என் எண்ணத்தை அனுப்பியுள்ளேன். எரிவது எண்ணை கிணறுகள் மட்டுமல்ல! எனது வண்ணக்கனவுகளூம் தான்! பிஞ்சுக் கரங்களில் பேரீச்சம் பழங்களை உதிர்த்த…

‘பாரதி பாடாத பாட்டு ‘

கரு.திருவரசு பாரதி பாடாத பாட்டு - இனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - இது பாரதி பாடாத பாட்டு -பாரதி சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் தாலாட்ட அருள்வாயே -பாரதி தூங்காமல் தூங்கிடும் சுகத்துக்குத்…

எது வரை…….. ?

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் மண் மீது விழும் வரை மழை....... கடலுடன் கலக்கும் வரை நதி....... மதம் பிடிக்காத வரை மனிதன்....... மதம் நீக்கி....... ம(னி)தம் காண்போம். saxsun76@yahoo.com

நான் யார்……

ஸ்ரீராம். நீ செடியாய் இருந்தால் உன் வேரை தாங்கும் மண்ணாய் இருப்பேன், நீ மண்ணாய் இருந்தால் மண்ணில் வாழம் ஓர் ஜீவராசியாய் இருப்பேன், நீ ஜீவராசியாய் இருந்தால் உன்னை உயிர்பிக்கும் உயிராய் இருப்பேன், நீ…