கரு.திருவரசு பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற பான்மையிலோர் காவியமும் பதுமையென இயிஇருக்கின்ற சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன்! அவையெல்லாம் சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே! தடுமாறும் நடைகண்டு தரமான நாட்டியமும் தடதடெனத் தளிர்க்கைகள் தட்டுவதில் தாளங்களும்…
பொன்னி வளவன் பெண்ணே! பல்லவன் பேருந்தில் கருப்பு மை தீட்டிய உன் கயல் விழிகள் பேசிய காதல் மொழிகளில் கனநேரம் மயங்கி நின்ற நான்... பயணச்சீட்டு எடுப்பதற்காக பாக்கெட்டில் கை வைத்தவுடன் பதறிப்போனேன் பணம்…
ஜோதிர்லதா கிரிஜா சொந்தமாய் வீடொன்று இருந்தாலும் தந்திரமாய் மறுத்துப் பொய்யுரைத்து நந்தவனம், நீச்சல் குளம் சூழ்ந்திட்ட அந்தமிகு அரண்மனை போல் வீடு கேட்டு இந்திய அரசினையே இம்மியும் கூசாமல் தொந்தரவு செய்கின்ற தலைவரிடையே 'இந்தா,…
திலகபாமா, சிவகாசி வெட்டியெடுக்கப் பட்ட கிளைகள் போக உயிரிழந்திருந்த வேர் பற்றியிருந்த கரம்பை மண் கட்டியிடுக்கிலும் கருவேலமரங்களின் கால் ஊடாக பயணிக்கும் பச்சோந்தி மாறும் வாழ்வதனில் மாறாது நகழும் மானுடம் சுழலும் புவி வேகத்தில்…
பி.கே சிவகுமார் வாசல்விளக்கைச் சுற்றிவந்து விழுந்து மடியும் விட்டிலுக்கு ஆயுள்காலம் அற்பம்தான் ஆனாலும் ஏனொருமுறை கூட விட்டிலைப் பார்த்தபின்னே ஜன்னலை மூடாமல் விளக்கணைக்க விரும்பியதில்லை அந்தத் தெருநாய் நண்பனுமில்லை பகைவனுமில்லை ஆனாலும் பார்க்கும்போதெல்லாம் பார்வையால்…
புதியமாதவி, மும்பை 400 042 வானவில்லின் பாலங்கள் உடை. மழைமகள் கருக்குடம் திற ஆண்-பெண் கணவன் - மனைவி ஆதாம் - ஏவாள் சட்டைகள் எறி உயிர் உடல் ஆன்மா வேடங்கள் களை நட…
தி கோபாலகிருஷ்ணன், திருச்சி ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியுமா இறுதி வரை ? நிச்சயமாக இருக்க முடியும் - அந்த இறுதி வரும் வரை யாருமற்ற தனிமையில் தற்செயலாக சந்திக்க நேர்ந்து இருவருமே…
பவளமணி பிரகாசம் திருத்தமான வட்ட முகமொன்றை வானத்திரையில் வரைந்து விட்டு வெள்ளை வண்ணம் குழைத்துப் பூசி ரசித்த ஓவியனும் திருட்டி கழிந்திட ஒத்தையாய் கருப்பில் ஒரு பொட்டு வைத்திட மறந்ததால் பதறினான் பிடித்திட்ட தூரிகையை…
பா. சத்தியமோகன் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை மிக லேசானது மிக மிக லேசானது ஆதலால் எடையற்றது எனவே தூக்கவே முடியாத கனம் உடையது பார்க்கவும் முடியாது சொல்லுங்கள் வாழ்க்கை லேசானது ஆதலால் பிறருக்குக் காட்டவும்…
இளந்திரையன் - சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன் என்னைப் பற்றியும் என் வேர் பற்றியும் யாரும் கவனிக்கவில்லை அவரவர்க்கு அவரவர் அவசரம் யாருக்கும் நேரமில்லை மண்ணின் வாசனை மனங்களின் நேசம் மலர்களின் வாசம் மலரும்…