திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஓவியம்

ருத்ரா. (epsi_van@hotmail.com) ஒரு கோடு. அதன் தலையில் இன்னொரு கோடு. நீண்ட கூட்டல் குறி. செங்குத்தாய் நிமிர்ந்து விறைத்து.. கோட்டை ஒட்டிக்கோண்டு இரு வட்டக்கோளங்கள். அப்புறம் அதைச்சுற்றி குறுக்கும் நெடுக்குமாய் சின்ன வட்டங்கள் பெரிய…

ஓட்டப்பந்தயம்

ஆர் டி லெய்ங் (தமிழில் : புதுவை ஞானம்) **** காலத்துக்கு எதிரானதோர் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. 'நமக்குள் ஒருவன் ' - என மனிதர்கள் உணர்ந்தால் மாற்றங்கள் உண்டாகும் மேலும் மேலும். முட்டாள்தனமான சுயநலத்தின்…

பரம்பொருள்

செங்காளி நல்லதே செய்திடுவீர்.. செய்வதை யாரும் பார்க்கவில்லை என்றெண்ணி செய்யக் கூடாதொன்றைச் செய்திடல் தகுமோ என்னசெய் திடினும்நாம் எங்குமதைச் செய்திடினும் நன்றாகப் பார்த்திடும் நாயகன் உள்ளானே ! தூய்மையான மனம்.. விளக்கு எரிகின்ற வீட்டைக்…

வாழும் வகை

ஓஷோ (தமிழில் : புதுவை ஞானம்) **** 'அண்டத்தில் இரு.... உலகின் எல்லா அவலங்களுடனும் அவத்தைகளுடனும் ஆரவாரங்களுடனும் ஆன போதிலும்.... விலகியும் தனித்தும் பொறுமையாகவும் அத்துடன் இரு ' அதுவாக இருக்காதே ' '…

புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!

(கவியோகி வேதம்) 'தாரண ' என்கின்ற தளிர்மகளே நீவருக! தோரணமாய் வசந்தத்தின் துணைகொண்டே நீவருவாய்! . சோலையெல்லாம் மயில் ஆட, சூழ்ந்துநிற்கும் மாமரத்தில் கோலம்செய் பூக்களிடைக் குயிலெல்லாம் இசையமைக்க, .. மழைத்துளியை எதிர்பார்த்தே மயிலெல்லாம்…

என்னைப் பொறுத்தவரை

புதுவை ஞானம் **** என்னைப் பொறுத்தவரை சாமானிய வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஆம்.... வாழ்வதற்கு ஒரு வழி இருக்கிறது அதன் அழகோடும் அசிங்கத்தோடும் விழிப்புணர்வுடனும் அல்லது விழிப்பற்றும் வழக்கத்துக்குப் புறம்பாகவும் மிக நேர்த்தியாகவும்…

சத்தியின் கவிக்கட்டு 3

சத்தி சக்திதாசன் புதுமையான வரவேற்பு இது என்னடா ஒரு புதுமையான வரவேற்பு ! வானத்தைக் கிழித்துக் கொண்டு சூரியன் எழுவதும் மேகத்தை எரித்துக்கொண்டே கதிர்களை எறிவதும் புத்தாண்டுக்கொரு புது வரவேற்போ ? மனங்களில் இருளும்…

அம்மணம்

புதுவை ஞானம் **** மீனுக்குச் செதிலும் மானுக்குத் தோலும் பறவைக்கு இறகும் ஆமைக்கு ஓடும் அம்மணமாய்ப் பிறந்து அம்மணமாய்ப் போகும் மனிதா ' அம்மணம் ஆக இக்கணம் தருணம். ****

உணவுச் சங்கிலிகள்

ஸ்ரீமங்கை ---- பன்னிரெண்டு வினாடிகளாகப் பார்க்கிறேன்... செங்கால் நாரைபோல் அற்புதமாக பறந்து இறங்கி, முன்னங்கையில் நான் உணராமல் கவனமாகக் கால்பரப்பி, மெதுவாக சிறகுகள் விரித்து, அடக்கி, கைதேர்ந்த செவிலிபோல, உதட்டு ஊசி தோல்மேல் புகுத்தி…

அவதாரம்

ஆர் டி லெய்ங் (தமிழில் புதுவை ஞானம்) **** மொட்டவிழ்கிறது ஆயிரமிதழ்த் தாமரை மண்ணிலிருந்து விண்ணுக்கு நீரினூடாக.... அக்கினியிலிருந்து ஆகாயம் நோக்கி அதன் சலனம். வாழ்வினுள்ளும் சாவினுள்ளும் அவற்றுக்கு அப்பாலுமாக உணர்வுகளுக்கு உள்ளும் வெளியும்…