திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தெருவிளக்குகள்

ஸ்ரீமங்கை ---- முன்பெல்லாம் குழல்விளக்கு இத்தெருவில். இறந்த பூச்சிகள் கரியாக அடைத்துக்கிடக்க பாதிக் குழல் காட்டியபடி மழை முடிந்ததென யாரும் கேட்காமலே மங்கிய ஒளியில் மெளனமாய் அறிவித்துக்கிடக்கும். மின்சாரம் பாய்ந்தும் மூன்று மணிநேரமாய் மினுமினுக்கி,…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு

வெண்ணிலாப்ரியன். எருமை மாட்டின் தோல் போல இருக்கிறது இரவு தலை சாய்த்து படுத்திருக்கும் எருமையின் மேற்பரப்புகளில் நிலா வெளிச்சம் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக்கொள்ளும் வேட்கையில் கொசுக்கள் எருமை மாடு தவணைமுறையில் விரட்டிக்கொள்கிறது நிலா வெளிச்சம்…

பெரியபுராணம் – 23

பா. சத்தியமோகன் 12 . விறன்மிண்டநாயனார் புராணம் 491. மணங்கமழ் கொன்றை மாலையும் சடையும் உடைய சிவபெருமானின் திருவடிகள் வணங்கித் பெரும் தவம் செய்த பரசுராமன் எனும் முனிவனைப் பெற்ற நாடு அலை கடலில்…

கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறிய இப்பூவைப் பறித்து மாலை தொடுக்க எடுத்துக்கொள், தாமதப் படுத்தாமல்! இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய் கீழே வீழ்ந்து புழுதி மண்ணில் துவளும் என்று அஞ்சும் என் மனம்! இப்போது…

புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்

புதுவை ஞானம் (கன்பூசியஸை அடியொற்றி) பேரரசு முழுமைக்கும் நன்னெறியை நிலைநாட்ட விரும்பிய முன்னோர்கள் முதலில் தங்கள் மாநிலத்தை நெறிப்பபடுத்தினார்கள். மாநிலத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை நெறிப்படுத்தினார்கள் குடும்பத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள் முதலில்…

கவிக்கட்டு 41

சத்தி சக்திதாசன் பாவங்களை வாங்கிக்கொள் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாலோ மனிதனின் சோகம் நீ அறிந்தனை மக்களின் பாவங்களை தன்னில் தாங்கி மனிதத்துவத்தின் முடியாய் திகழ்ந்தனையே மாபெரும் தேவதூதனே இயேசுவே ! நத்தார் புனித தினத்தில்…

காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)

தமிழில் : நாகூர் ரூமி ==== என் தபால் பெட்டிக்குள் வந்து விழுகிறது காஷ்மீர் சுத்தமான நாலுக்கு ஆறு இன்ச்சுகள் -- எனது வீடு. சுத்தம் எப்போதுமே பிடிக்குமெனக்கு. இப்போது நான் பிடித்திருக்கிறேன் அரை…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!

வெண்ணிலாப்ரியன். வருடக்கரைசலில் வந்து வியர்க்க வைத்த இரவுக்குமிழிகள் எப்போதும் நிகழ்த்தியதில்லை அதை. ஆயிரங்களில் சுருட்டிக்கொண்ட புடவைப்பாம்புகளும் நகைப்பூச்சிகளும் அற்புதங்களை காட்டியதில்லை. குளிரூட்டிய வாழ்க்கை வசதிகளின் மேன்மைத்தனங்களும் பரஸ்பர ஞாபக- விஷய- ஞான மேதாவித்தனங்களும் அவற்றை…

இறைத்தூதர்

கலீல் ஜிப்ரான் - தமிழாக்கம் புதுவை ஞானம் தானொரு விடிவெள்ளியாய் அவதரித்த அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அல்முஸ்தபா ஆர்பயிஸ் நகரில் பன்னிரண்டாண்டு காலம் காத்திருந்தார். தான் பிறந்த தீவிற்கு அழைத்துச் செல்ல வரும் தனது…

என்ன சொல்ல…. ?

நளாயினி தாமரைச்செல்வன். பெண்களின் கைகளில் வளை காப்பு. உடலெங்கும் கருப்பை வேதனை. உணர்வுகள் கூட கருப்பையுள் அடக்கமோ.. ? காலில் என்ன சலங்கையோ. அதற்கு நீங்கள் அடிமையோ. ? மூக்கில் அழகிய மூக்குத்தி. உணர்வுகளின்…