திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதை

வா.மணிகண்டன் காற்று- நெஞ்சுக்குழியின் ஆழத்தில் பட்டுவிடாமல் பேரிரைச்சலுடன் வெளியேறிக்கொண்டிருக்கிறது. வியர்வை துளிகளாக ஒட்ட ஆரம்பிக்கின்றன. பெருவெளியில் தனித்துவிடப்பட்ட இலையென அலையும் கண்கள். இன்னும் இரைச்சல். இன்னும்.. ன்னும்... ம்.. ஒரு மிடறு பால் அல்லது…

கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறுவனை இளவரசனைப் போல் ஆடையில் சிங்காரித்து தங்கச் சங்கிலி கழுத்தில் அணிவித்து வெளியில் விளையாட விட்டால் களிப்பு விளையாமல் போகும்! ஒவ்வொரு படியில் ஏறும் போதும் தடையாய் நிறுத்தும்,…

விரல்கள்

பவளமணி பிரகாசம் கோலங்கள் போடும் தளிர் விரல்கள் அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள் அவை செய்யும் பல அதிசய வேலைகள் சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும் வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும் வீணையின் தந்தியோடு மனதை மீட்டும்…

மழை நனைகிறது….

பட்டுக்கோட்டை தமிழ்மதி காயும் துணிகள் நனைகின்றன கை வந்தெடுக்க வரவில்லை. சாரலும் தூறலும் நுழைகின்றன சாளரம் சார்த்த முகம் எட்டிப் பார்க்கவில்லை. துளிகள் துள்ளிக் குதிக்கின்றன துள்ளும் உன் வீட்டு பிள்ளைகள் வெளிநின்று ஓடவில்லை.…

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )

தமிழில்: சிபிச்செல்வன் நற்குணம் நீ ஒரு பெண் அதை மறக்காமலிருப்பது நல்லது உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது ஆண்கள் ஜாடையாகப் பார்ப்பார்கள். நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து…

பேசி பேசி…

பட்டுக்கோட்டை தமிழ்மதி பேசி பேசி செய்த உருவங்கள். சிலைகளாய் சிரிக்கின்றன... இதயம் பிசைந்து பிடித்த சிலை கேட்கிறது என் பெயர் என்னவென்று. காதலென்று சொல்லுகிறோம். விளையாட அள்ளிய மண் கையிலிருந்து நீயில்லாமல் உதிர்கிறது. நீ…

பிரிய மனமில்லை

ஆ. மணவழகன் இளமையிலிருந்தே எனக்கு உன்னைப் பிடிக்கும்! என் வீட்டாருக்கும் உன்னைப் பிடிக்கும் என்பதால்.... நம் உறவிற்கு இடையூறு எண்ணியதில்லை அவர்கள்! உன் முகம் காணாத காலை முழுமையாய்த் தோன்றுவதில்லை எனக்கு! என் கை…

மெளனவெளி

செல்வநாயகி. **** அண்டைவீடென்ற உரிமையில் நாளிதழுக்கோ தொலைபேசிக்கோ நம் அழைப்புமணி அழுத்த ஆளில்லை வாங்கியேதீரவேண்டுமென்ற வற்புறுத்தலோடு கதவுதட்டுவதில்லை கீரைக்காரி சந்திப்பிள்ளையாரின் பதினொருமணிப்பூசைக்கு கோயில்மணியெதுவும் அடிக்கும்வாய்ப்பில்லை யாரையோ பார்க்கவந்தகையோடு முன்னறிவிப்பின்றி வாயிலில்நிற்கும் உறவினர்வருகை இல்லவேஇல்லை பால்காரர்…

இடையினம்

நாகூர் ரூமி ஆண்மைக்கும் பெண்மைக்கும் இயற்கை வைத்த திருஷ்டி. திருஷ்டி என்றாலே கழிக்கத்தானே ? சிவன் பாதி பார்வதி. இவன் பாதி யார் சதி ? திறண்ட மார்புக்குள் வறண்ட பெண்மை. கறந்த பாலுக்குள்…

கூ ற ா த து கூ ற ல்

எஸ். ஷங்கரநாராயணன் கவிதைப் பம்பரம் ---- பீத்தல் குடையும் பிய்ந்த செருப்புமாய்க் கிளம்பி விட்டார் கணக்கு வாத்தியார் டியூஷன் எடுக்க எந்தக் கணக்குக்கும் கட்டுப்படாமல் பெருமழையாய்ப் பெருகுகிறது வாழ்க்கை --- ரயில்பாதை அகல ரயில்பாதை…