திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அதீத வாழ்வு

சாரங்கா தயானந்தன் விரித்திருந்த வெண்தாளாய் வாழ்க்கைவெளி . வர்ணங்களும் தரப்பட்டிருந்தன. நிர்ணயிக்கப்பட்ட வர்ணங்களை நிராகரிப்பதில் பெருமையுறும் என்னிடத்தில் நிர்ச்சலனம். வர்ணங்களின் இணைவிலான புதிய வரைவுருக்களை மாற்றி மகிழ்ந்தது மனம். அவற்றின் முகங்கள் எவரது கற்பனையுள்ளும்…

ஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை

ஏ.எம். குர்ஸித் புணர்தலின் பின் மீண்டெழும் கலவரத்தோடு இன்றைக்கும் அதீத பிரயத்தனத்தோடு ஏற்புடையதாக்க வேண்டும் இந்தப் பொழுதை. எதுவுமே பிடிபடாத எத்தனிப்புகளினின்றும் நிச்சயங்களினின்றும் மறுபடியும் என்னை காப்பாற்றியாக வேண்டும். ஆவன் விரும்பும் மேல் சட்டையையும்…

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)

தமிழில்: சிபிச்செல்வன் நற்குணம் நீ ஒரு பெண் அதை மறக்ாமலிருப்பது நல்லது உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது ஆண்கள் ஷாடையாகப் பார்ப்பார்கள். நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து…

வலி

இளந்திரையன் முக்காட்டின் சரிவுக்குள் முகம் ஒழித்தபடி நகர வேண்டும் விரைவாய் காற்றின் வாடையில் கந்தகமும் தூசியும் காதடைக்கும் கதறலும் ஓசையும் நீண்டு செல்லும் இமைப் பொழுதுகள் கற்குவியலுக்குள் கை நீட்டி உதடு விம்மும் சிறுமியின்…

கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்

எஸ். ஷங்கரநாராயணன் --- தீபாவளி சிறப்பிதழில் முன் அறிமுகம் செய்துவைத்த /ஆனந்த விகடனுக்கு/ நன்றி --- பாலம் கட்டினால் மனிதன் இறங்கிக் குளித்தால் கவிஞன் பொழிகிறது மழை குடை மடக்கி வீடுதிரும்பும் காகம் பாலுக்கு…

கவிதை

வா.மணிகண்டன் காற்று- நெஞ்சுக்குழியின் ஆழத்தில் பட்டுவிடாமல் பேரிரைச்சலுடன் வெளியேறிக்கொண்டிருக்கிறது. வியர்வை துளிகளாக ஒட்ட ஆரம்பிக்கின்றன. பெருவெளியில் தனித்துவிடப்பட்ட இலையென அலையும் கண்கள். இன்னும் இரைச்சல். இன்னும்.. ன்னும்... ம்.. ஒரு மிடறு பால் அல்லது…

கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறுவனை இளவரசனைப் போல் ஆடையில் சிங்காரித்து தங்கச் சங்கிலி கழுத்தில் அணிவித்து வெளியில் விளையாட விட்டால் களிப்பு விளையாமல் போகும்! ஒவ்வொரு படியில் ஏறும் போதும் தடையாய் நிறுத்தும்,…

விரல்கள்

பவளமணி பிரகாசம் கோலங்கள் போடும் தளிர் விரல்கள் அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள் அவை செய்யும் பல அதிசய வேலைகள் சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும் வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும் வீணையின் தந்தியோடு மனதை மீட்டும்…

மழை நனைகிறது….

பட்டுக்கோட்டை தமிழ்மதி காயும் துணிகள் நனைகின்றன கை வந்தெடுக்க வரவில்லை. சாரலும் தூறலும் நுழைகின்றன சாளரம் சார்த்த முகம் எட்டிப் பார்க்கவில்லை. துளிகள் துள்ளிக் குதிக்கின்றன துள்ளும் உன் வீட்டு பிள்ளைகள் வெளிநின்று ஓடவில்லை.…

சுவாசத்தில் திணறும் காற்று

ஜோஸ்பின் பிரான்சிஸ் ---- ஒன்று சுவாசத்தில் திணறும் காற்று சிறகடிக்கும் பூஞ்செடிகள் நகரும் காட்சிகள் வாசித்துப் போட்ட புத்தகங்கள் பழகிப்போன தூக்கம் எல்லாம் கடந்து நினைவு மட்டும் சுற்றி வருகிறது எல்லா பயணங்களிலும் இரண்டு…