திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அணு ! அண்டம் ! சக்தி !

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி ஒரு பொரி உருண்டை பரமாணுக்களாகி, துணுக்காகி அணுவாகி, அணுவுக்குள் அணுவாகித் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகிப் பிளந்து,…

முகவரிகள்,….

மாதங்கி பெருவிரைவு ரயிலில் அரை மணி நேரப் பயணம்; பரிச்சயம் செய்துகொண்ட பக்கத்து இருக்கை பெண்மணி வங்கி அலுவலராம்; குழந்தைகள்,புத்தகம் பேச்சு நீண்டது ஷெண்டன்வே பக்கம் வந்தால் வங்கிக்கு வரவேண்டும்விடைபெற்றார். ஆறு மாதம் கழித்து…

வன்முறை

ப்ரியம்வதாகறுப்பும் சிவப்புமாய் ஒன்றோடொன்று இடித்தபடி சின்னஞ்சிறு குளம்புகள் மிதிக்கப்பட்டு மந்தையாய் ஓடும்போது இடையனின் சிறுகுச்சி அவ்வப்போது உடல் உரசுவது ஓட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்க விலகலின் தண்டனைக்கோ – குட்டியாட்டுக்குப் புரிவதேயில்லை. என்றாலும் அன்றாட வாழ்க்கையின்…

கீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னுடன் விளையாடும் போது, ஒருபோதும் உன்னை யாரென்று கேள்வி கேட்ட தில்லை நான்! உன்னிடம் கூச்ச மில்லை எனக்கு! உன்னிடம் அச்ச மில்லை எனக்கு! கொந்தளிப்பில் ஆடியது என்…

அன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி

புதுவை ஞானம்_______________________________________ அறியப்பட வேண்டியதோர் உண்மை இருக்கிறது ஆற்றப்பட வேண்டியதோர் பணியும் கூட. ஆழ்ந்த அமைதியினூடே ஆற்றப்படுகிறது அப்பணி. அறிஞர்கள் பேசிக்கொண்டும் தூங்கிக்கொண்டும் இருக்கையிலேயே ஓங்கி வளருகிறான் இறைவன் . தற்செயலான நிகழ்வுகள் எனும்…

மழைவெயில்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இது என்ன திடீரென்று இப்படி... அதன் வருகையைத்தான் இது சொல்கிறது அது வருமென்பதின் அடையாளந்தான் இது இவ்வளவுச் சுள்ளென்றிருப்பதே அதன் வருகைக்காகத்தான் அது அப்படி இருக்குமென்பதும் இப்படி இருக்காதென்பதும் தெரிந்ததுதான் ஆனால்…

பதஞ்சலி சூத்திரங்கள்….(2)

ருத்ரா (24) க்லேச கர்மவிபாகா சயைர்புராம்ருஷ்ட: புருஷ விசேஷ ஈஸ்வர. மனம் ஒரு குரங்கு அல்ல. ஆயிரம் குரங்குகள். ஆயிரம் கிளைகள். மண்ணில் பிறந்த உயிர்ப்பாண்டத்துள் மண்ணின் சுவையும் சூடும் அதன் ஆசை-கவலைகளின் நிழல்…

இருள் வெளிச்சம்

சாமிசுரேஸ்,சுவிஸ் புல்வெளியின் காற்றினிடை தனியனாய் நிற்கிறேன் எதையோ தேடி நுகர்வுத்திசுக்களின் ஓவ்வொரு அணுவிலும் குழந்தைகளின் கதறல் வரலாறு தேடி மயானங்களில் அலைகிறது விழி நிலப்பரப்பில் பற்றில்லாக் கால்களுடன் ஒரு கனிதேடி கிளைகளிடையே பரபரத்தபடியே கைகள்…

காதல், மோதல், நோதல் !

சி. ஜெயபாரதன், கனடா தொட்டும், தொடாமல் மொட்டு விட்டு, மணமணத்து, முறுவல் புரிந்தாலும் வாடாத மலரில்லை காதல்! மாறிடும் உலகிலே, மாறிடும் மனதிலே, மாறிடும் ஊதியம் தனிலே, வேரைத் தின்றிடும் கரையான் கூட்டம்! விழுதிடும்…

தாஜ் கவிதைகள்

தாஜ் நடப்பு --------- இரவும் பகலும் உராசும் தேய்மானத்தின் கதையைத்தான் பிடித்தமான நடையில் மேலே நடத்துகின்றோம். காற்றின் சேட்டைகள் கவனத்தை மீறத்தான் செய்கிறது. அந்தரத்திலிருந்து விழுந்தாலும் எழுந்து கம்பிமீதே நடக்கின்றோம். உயர்த்திக் கும்பிட்டு கர்ணமிடுபவர்களுக்கும்…