திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தாஜ் கவிதைகள்

தாஜ்கனவில் வந்த அப்பா! -------------------------- அப்பாவிடம் பயம் அதிகம் உண்மை மாதிரி பொய்யும் பொய் மாதிரி உண்மையும் பேச்சு வழக்கில் பழக்கமாச்சு. சத்தியத்தைப் போதித்தவருக்கு பிசிரில்லாக் குரல் என்னைவிட நேர்த்தி. நலம் விசாரித்தப்படியே வந்தவர்…

பெரியபுராணம் – 108 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன்3075. சிறந்த வேதநூல்களில் விதித்த சடங்குகளின் பொருட்டும் வகுக்கப்பட்ட முறை வழியே வந்த மரபினாலும் தூய மணத்துக்குரிய நல்ல வேள்விப் பொருட்களை அமைத்து ஒழுங்குபடுத்துபவர்களின் தொழில் நிகழ்ந்தது நான்முகனைப் போன்ற பெருந்தவ மறையோர் எடுத்த…

கீதாஞ்சலி (95) ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!

சி. ஜெயபாரதன், கனடாஇம்மைப் பிறப்பின் தலை வாசலை எப்போது தாண்டினேன் என்பதை அறிய வில்லை நான் முதலில்! நடுக் காட்டினில், நள்ளிரவு வேளையில் மொட்டு விரிந்தாற் போல, மாய வாழ்வில் என்னை, மலர வைத்த…

ஊமைக்காயம்

காயத்ரிசொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட வார்த்தைகளில்... கேட்க நினைத்து கேளாமல் விட்ட கேள்விகளில்... அருகிலிருந்தும் மெளனமாய்க் கடத்திய நிமிடங்களில்... தவறான புரிதல்களால்-அன்பை தவற விட்ட தருணங்களில்... இன்னும்... உள்ளாறாமல் இருக்கின்றன நம் நட்பின் காயங்கள்.…

உலகத்தில் எத்தனை வண்ணங்கள்? (தமிழிசைப் பாடல்)

கரு.திருவரசு எடுப்பு உலகத்தில் எத்தனை வண்ணங்கள் - எனக்கு உதவுங்கள் நீங்களும் எண்ணுங்கள் தொடுப்பு மலர்களில் எத்தனை வண்ணங்கள் - மனித மனத்துக்குள் எத்தனை வண்ணங்கள் - எண்ணுங்கள் கண்ணிகள் வானத்தின் நீல வண்ணத்திலே…

உளி

பிச்சினிக்காடு இளங்கோஅழைப்பின் மகரந்த வாடையில் ஏமாறிவிட்டீர்கள் உமிழ்நீர் இழப்பு வேறு அது அழைப்பல்ல…வலை. அந்த இடத்திற்கு உங்கள் மூளையை அனுப்பிவைத்தது தவறு எடைபோடத் தெரியாதவர்களால் எப்படி எடை போடமுடியும்? 'எடை' மட்டுமே தெரிந்தவர்களுக்கு 'இதயம்'…

குதிரைகளின் மரணம்

ஹெச்.ஜி.ரசூல்குதிரைகள் பதித்த தடங்கள் பல குளம்படிகளினூடே அழியாது தெரிந்த வேகம் பாலின அடையாளம் எதுவென தெரியாத குதிரைகள் நேற்றைய சவாரிகளில் மொகலாய மன்னர்களும் குட்டி இளவரசிகளும் வலம் வந்தார்கள். வெற்றிப் பெருமிதங்கள் அடிக்கடி பேசப்பட்டன.…

பார்வதி வைத்த பரவசக் கொலு!

கவியோகி வேதம்கும்மிஅடி பெண்ணேநீ கும்மியடி-பார்வதிக் ..கொலுகண்டுத் துள்ளியே கும்மியடி!(கும்மி) . இம்மியும் 'நேர்த்தி'ப் பிழையின்றி-எழில் ..இயற்கையும் கொஞ்சுதென்றே கும்மியடி! பொம்மைகள் நம்முடன் பேசுதல்போல்-வைத்த ..புதுமைப் பரவசம் பொங்குதடி!..(கும்மி..) . சிவனா'ரின் கோவிலும் கெஞ்சுதடி-என்னைச் .."சிந்தி'லே…

‘ரிஷி’ யின் கவிதைகள்

'ரிஷி'1/ முடியும் வேளை மணியடித்துக் கொண்டிருப்பதாய் ஒரு சிறு அதிர்வு மனதின் செவிப்பறையில். இனி எழுதிப் போட வேண்டியது எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. வகுப்பு முடிந்து விட்டதென்று வெளியே குறிப்புணர்த்தி நிற்கிறது காலம். அடுத்து செல்ல…

கயிற்றரவு

வெ. அனந்த நாராயணன் கார்க் கண்ணாடிமேல் மோதி உதிர்ந்த சருகாய் உயிரைவிட்டது பட்டாம்பூச்சி அதே கண்ணாடிமேல் பறந்து வந்து ஒட்டிக் கொண்டு பட்டாம்பூச்சியாய்ப் படபடத்தது பழுத்த சருகு வெ. அனந்த நாராயணன்