திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

போர்ப் பட்டாளங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் மேசையில் ஊர்வலம் போகும் குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன் உறங்கிப் போயிருந்தான் சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த முற்றத்தில் யானைகளின் நடனம் தூரத்து மேகங்களிடையிருந்து திமிங்கிலங்கள் குதித்திட பாய்மரக் கப்பல்களின் பயணம் கைகொட்டிச்…

தண்ணீர்க் காட்டில் ‍- 1

ராம்ப்ரசாத் கடல். இது நிலத்தின் பாகுபாடா? அல்லது குறியீடா? ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல் மிதக்கிறது கடல்... நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை... காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்... தலையால் என் பாதம் தொட்டு வாலால் அத்துவானத்தை இடிக்கிறது திமிர்…

நீ அறியும் பூவே

ரவி உதயன்அத்தனை பெண்களின் கண்களும் அதன்மீதுதான் ! சடைப் பாம்புகள் தரை தீண்டத் துடிக்கும் இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள் தலைவாரி விடும் அம்மாதினமும். ரோஜா, கனகாம்பரம், சிலபொழுது மனோரஞ்சிதம், எப்பொழுதும் சிறு மல்லிகை…

நீ, நான் மற்றும் அவன்

தேனு ஆழிகள் கண்டறியா அமிழ்ந்திருக்கும் தெப்பமென நனைகூந்தல்... அந்தவொரு கணத்தில் சுற்றம் அனைத்தையும் தவிர்த்து முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன காதலும் காமமும்... . இன்னதென்று பிரித்தறியாதபடி படர்ந்து விட்டிருந்த யாக்கைகள் சீராய்ப் பாடும் தென்றலுக்கு சற்றே…

பிரியம் சுமக்கும் சொற்களால்…..

சக்தி பிரியம் சுமக்கும் சொற்கள் கொண்டு உனக்காய் வடிப்பேன் ஒரு கவிதை.... மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட மனதின் மென்மைகளை அதில் பொதித்து நீ அண்மிக்கையில் பரிசளிப்பேன் வெட்கம் குமிழ் குமிழாய் உடைத்தபடி...... உன் நயன பாஷைகள்…

ஒரு கணக்கெடுப்பு

பி. பகவதிசெல்வம் மது விற்பனையின் சதவிகிதங்கள் சற்றே குறைவுதான் மண்ணாய் போன குடும்பங்களையும் மாங்கல்யம் இழந்த மங்கையரையும் கணக்கிடுகையில் ! பி. பகவதிசெல்வம் திருப்பதிசாரம்

‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’

மீராவாணி  என் வலையில் மாட்டியிருந்த உன் வார்த்தைகளில் இரண்டை கையிலெடுத்தேன் ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி கண்ணீர் சிந்தியது… மற்றொன்று மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி துடித்தது…. நான் வலைப்பின்னுவதை நிறுத்திவிட்டேன்.  வார்த்தைகளை குவித்து…

முடிவற்ற பயணம் …

ஷம்மி முத்துவேல் நிறமற்ற அமானுஷ்ய வெளியில் நீந்தி செல்கிறது ஓர் உடலற்ற அருவம் திரவமெனவும் , ஜந்து எனவும் வரையறுக்க இயலாமல் .... ஏதோ ஒளி பிரள்கள் கண்கள் கூசி நிற்க உருவாக்கம் எளிதாய்…

ஐந்து குறுங்கவிதைகள்

தேனம்மை லஷ்மணன்வெய்யில் தாளாமல் வேர்வைத் துளிகளாய் வடிந்து கொண்டிருந்தன இலைகள்.. ************************************************ இரவுக் கம்மாய்க்குள் குளித்துக் கொண்டிருந்தது நிலவு. ******************************************************** அலகுகளும் கால்நகங்களும் நீண்ட வல்லூறாய் நின்று கொண்டிருந்தது மொட்டை மரம். ************************************************************ அளவுகள்…

பூஜ்ஜியத்தின் கால்வாசி!

ரசிகன் மௌனங்கள் என்னை அறைகிற போதெல்லாம் என் கோவத்தை சுவரில் முட்டியோ யாருமற்ற அறையில் கத்தியோ தணிந்து விடுகிறேன்! நீங்கள் எறிந்து விட்டுப்போகும் தனிமைக்கு என் வீட்டு கெவுளியும் பக்கத்து வீட்டு குடும்ப சண்டையும்…