திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அறுபடும் மரணங்கள்….

தினேசுவரி, மலேசியாசெருப்புகளைப் போல சில நிலைகளைத் துறந்து மறந்து வாழ எஞ்சி நிற்கிறது நமக்கான வாழ்வு..... அறுபடும் எனத் தெரிந்தும் நாம் மறுப்பதில்லை செருப்புகளை...... அறுபடும் சாத்தியங்களில் பழைய செருப்பின் சௌகரியங்களும் புதிய செருப்பின்…

தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்

கே.பாலமுருகன், மலேசியா1 நேற்றுவரை என் விரல்களின் இடுக்குகளில் காதலுக்கென ஒரு வரி சிக்கியிருந்திருக்கலாம். நான் கடந்து வந்த இரவுகளின் பெரும் முணுமுணுப்பாக இருந்ததென்னவோ காதலின் ஒற்றை வரிகள். நேற்றுவரை வலியும் துக்கமும் ஏக்கமும் முயற்சிகளும்…

நிர்வாண நடனம்

ஹெச்.ஜி.ரசூல்உடல்கள் வெந்து தெறித்து எரிய திசைப்பரப் பெங்கும் தீப் பிழம்பின் நாக்குகள் குளிரின் உறைதலில் அலறல் மேலிட உயிரிழந்து மரத்துப் போகும் உடல்கள் இன்னொரு நரகில் தாகத்திற்கு உருகிய செம்பின் பானம் தொண்டைக் குழி…

அறிதல்..

செல்வராஜ் ஜெகதீசன்தொலைதூரத் தொலைபேசி அழைப்புகளிலும் அம்மாக்கள் எப்படியோ அறிந்து கொள்கிறார்கள் இயல்பாய்ப் பேசுவதையும் இட்டுக்கட்டி பேசுவதையும். SJEGADHE@tebodinme.ae

மூன்று கவிதைகள்

நட்சத்ரவாசி1 இன்றைய தினம் நேற்றைய தினத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது பிறிதொரு தினமும் அப்படித்தான் உறங்கிய போதும் உறங்காத போதும் சூரியனும் இருந்தது நிலவும் இருந்தது சிலர் சொல்லிக் கொள்கிறார்கள் ஒரு தினம் வரும் பிறிதொரு…

இருட்டுக்குள் தீப்பிளம்பு…

தினேசுவரி, மலேசியாநிசப்தத்தோடு உரசிய என் உள் மன நெருடல்களில் உன்னை நோக்கிய பயணங்கள் தொடங்கின இருட்டுக்கு அப்பால்..... இருட்டு விழுங்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்று கொண்டது நடக்க நடக்க மேலெழுந்த தீப்பிளம்பில் ....... நிரம்பியும்…

அவரவர் திராட்சை..

கார்த்தி. என்1) நரிக்கதை சொன்னவன் வானம் பார்த்து நகர்கிறான்.. கேட்டிருந்த குழந்தை எம்பிப் பறிக்கிறது மரத்திலிருந்து சில மழைத்துளிகளை.. 2) கொஞ்சமேனும் மழை வைத்திருக்கிறான் நிழற்படக்காரன்.. நனையவியலாமல் நிறையத் தொலைத்தும். 3) தூரத்துத் துளியொன்று…

உயிர்த்தெழுதல்…

செல்வராஜ் ஜெகதீசன்போய்ச்சேருமிடத்தில் புதிதாய் ஒன்று இருக்குமென்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. புறப்படும்போது வாகனமொன்றில் அடிபட்டு இறந்த வீட்டுப் பூனைக்காக விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான் குட்டிப்பையன். பயணம் முழுதும் அநேகர் மனதில் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழந்து மரித்துக்…

கரியமில இரகசியம்

ஒளியவன்அளவாய்ப் பால் கொடுத்தாய் அருந்தினோம் அதுவும் போதவில்லையென உன் முலைக்காம்புகளைத் தின்று செரித்தோம் உன் உடலினைத் துளையிட்டு துளையிட்டு இன்பம் கொண்டோம் உன் ரோம மரங்களை வெட்டிச் சாய்த்து மொட்டையடித்தோம் கட்டிகளைக் காட்டி வளர்ச்சிகளென்றோம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகுன்றுகளின் ஊடே நீயொரு தென்றல் போல் உலவுகிறாய் ! நீயொரு திடீர் நீரோடை போல் வீழ்கிறாய் பனிக் கடியில் ! பரிதியின்…