திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

எனது மண்ணும் எனது வீடும்

நடராஜா முரளிதரன்- - என்னவர்களிடம் தோற்ற ஒருவனாக எனது வீட்டுக்குச் செல்லும் வாகனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன் எந்த வாகனங்களும் என்னை ஏற்றிக் கொள்ளவில்லை காலணியற்ற பாதத்தோடு எவ்வளவு காத தூரம் நடந்து விட்டேன் எத்தனை…

காதலின் பெயர் பரிசீலனையில்..

ஆறுமுகம் முருகேசன் பனியும் இலையும் பூத்திருந்த அதிகாலையொன்றில் குழுமியது நிரம்பி வழிந்த காதல்.. தொடர்ந்த நாழிகைகளில் ஏதேதோ நிரம்பியும் எதிர்வீட்டுக்குழந்தைகள் மஞ்சள்டிரவுசர் அணிந்திருந்த அப்பொம்மையை மீட்டியதும் எழும்பிய அக்கீச்சொலியில் முற்றமிட்டது மிதமிஞ்சிய காதல்.. இப்படியாக…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன் 01 நின்று சலித்த நீள் பயணமொன்றில் மென்று விழுங்கிய பார்வையோடு நீ விட்டுச் சென்ற இருக்கையில் இன்னமும் உன் சூடு. 0 02 பிறை நிலா நெற்றிப் பெண்ணின் பின் முதுகில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -4

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "காலையில் குடியானவன் தன் குடிலை விட்டு உணவுப் பண்டங்கள் வாங்கத் தாய், தங்கையின் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு நகருக்குச்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++ உருகும் பனியாக இரு ++++++++++++++++++++++++ "உன்னோடு எப்போதும் இருக்கிறேன்" என்றால், இறைவனை நீ சிந்திக்கும் போது உந்தன் விழிகளின்…

வேத வனம் விருட்சம்- 75

எஸ்ஸார்சிஏற்பாடு வேள்விச்சாலையில் அக்கினிப் படையலுக்கு சிவப்பு மச்சக் காளை இரு வெண்புள்ளிக்காளை சாவித்திரிதேவிக்கு நடுவே வெள்ளைவண்ணச் சோடிக்காளை பூஷணனுக்கு கொம்பில்லா மஞ்சளாடு விசுவதேவர்க்கு புள்ளிகளுடையது மருத்துகட்கு பெண் ஆடு சரசுவதிக்கு ஆண் ஆடு வருணனுக்கு…

யார் முதலில் செய்வது?

நாவிஷ் செந்தில்குமார்ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த முகக்கண்ணாடியின் உள்ளேயும் வெளியேயும் இரு குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன... அழுகையை நிறுத்துங்கள் என்றேன் 'அதை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்' என மாறிமாறிச் சொல்லின. --

கவிதைகள்

சி.சுந்தரம்நம்பிக்கை --- கடவுளை சாட்சிக்கு அழைக்க வேண்டிய கட்டாய தருணத்தில் கரையத் தொடங்கியது கடவுள் நம்பிக்கை உள்ளே நுழைதல் --- என் வீட்டு வரவேற்பறையில் மேஜையின் மீது கிடந்தன பத்திரிக்கைகளும் டிவி ரிமோட்டும் இணைய…

இதுவும் கடந்து போகும்!!?

மீ.வச்ந்த் , சாத்தூர் டாலர் தின்று ஜீரனிக்கும் நியூரான்கள், எப்போதாவது திரும்பி பார்க்கும் அந்த நாள் பதிவுகளை..., ம்..அது ஒரு காலம். இந்தியாவின் கவலைகள் தெரிந்த கல்லூரி காலம். தமிழ் மொழியில் பேச்சு, தாய்…

மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்

பொலிகையூர் சு.க சிந்துதாசன்அலை தழுவிப் போன கரைகளெங்கும் நிரையாய் நண்டுகள் நடக்கத் தொடங்கியதால் கீறல்களால் கரை நிரம்பிற்று கீறல்களை அழிக்க அலைக்கரங்கள் முயலவில்லை கரைகள் பற்றிய கவலையெதுவுமின்றி கடலேனோ கடுமமைதி கொண்டிற்று அலைகளின் ஸ்பரிசங்களை…