திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முக்காட்டு தேவதைகள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தீயெரித்த வனமொன்றின் தனித்த பறவையென வரண்டு வெடித்த நிலமொன்றின் ஒற்றைச் செடியென சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து உயிர் பிழைத்தவள் நிறைகாதலோடு காத்திருக்கிறாள் அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள் சோரச் சோரச் சொட்டுச்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நான் சூரியனுக்குக் கீழ் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுவிட்டேன். எல்லாம் வெறும் பகட்டு ஒப்பனைகள் ! ஆன்மாக்களின் வெறுப்புக் கொந்தளிப்புகள்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++ உருகும் பனியாக இரு ++++++++++++++++++++++++ நண்பனே ! உன் கதையைச் சொல்ல உரோம இழையாய்ச் சுருங்கினேன் ! நீ…

வேத வனம் விருட்சம் 76

எஸ்ஸார்சி ஆயிரந் தலைகள் ஆயிரங் கண்கள் ஆயிரங்கால்கள் பத்துப் புலன்களொடு புவியெங்கும் பரவியவன் சிருட்டிப்புருடன் பெருவேள்வி நிகழ்கிறது வளர்வனம் மிருகம் மக்கள் ருக்கு யசுர் சாமம் குதிரை ஆடு மாடு தேவர் முனிவர் சாத்தியர்…

பாவனைப்பெண்

நிலாரசிகன். மலர்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும் அறைக்குள் உடல் உருவும் வாசத்துடன் நுழைகிறாய். கிளையிலிருந்து விடுபடும் இலையென என்னிலிருந்து நீங்குவதான பாவனையுடன் கைகுலுக்குகிறாய். பின், நடனமிட துவங்குகிறாய். மிச்சமின்றி சிகப்புநிற திரவத்தை அருந்துகிறாய். சந்தோஷத்தின் உச்சத்தில் நிற்கிறாய்.…

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா ஓயாது கதவுகளை சாத்திவிட்டுப் போகிறது இரவின் அமைதி எஞ்சிய வெளிச்சங்களையெல்லாம் விழுங்கி எங்கும் நிறைகிறது கனத்த இருள் தளர்ந்து படுக்கையில் சாய படர்கிறது தனிமைப் போர்வை கனவுத் திரையில் கடந்தகால காட்சியோட்டம்…

அவர்கள் காதலிக்கட்டும்..!

ஆறுமுகம் முருகேசன்.. தேவதைகள் காதலிப்பதில்லை.. நீ தேவதை அல்ல.. கழுத்தோரம் முத்தப்பந்தலிடுகிறாள் காது திருகி , செல்லம் கொஞ்சுபவன் சிணுங்கி மீள்கிறான்..! வெட்கங்கள்.. இசை மீட்டும் , அவ் - அந்தி மைதானம் மழையின்…

எச்சரிக்கை……!

கலாசுரன் வெள்ளை அணிந்து தான் வந்தார்கள்....!! விடிவைப் பரிசளிப்போம் என்பதாக..... ஆதரவுகளை கைப் பற்றியபின் ... பல நிறங்களை மாற்றிக்கொண்டார்கள் சந்தர்ப்ப வாதிகளாக .... மீண்டும் வருவார்கள் முதல் நிறம் வெண்மையாக...! எச்சரிக்கை......!

ஓட்டை பலூன்

வே பிச்சுமணிகாக்கா கூட்டில் காக்காகுஞ்சின் அலகு வெளியில் பசியுடன் நீட்டிகொண்டு நீள அலகில் இரைவருமென செவ்வாய் பிளந்து கிடக்கிறது காற்றுபோன அடிகுழாய் ஒன்றில் நீர்ஊற்றி நீர் வரும் நீர் குடிக்கும் நீர் ஊற்றுகள் நீருககாக…

எப்போதும் முந்துவது…

செல்வராஜ் ஜெகதீசன் வழக்கமான தன் விளையாடுமிடத்தில் முதல் வண்டியில் என்றும் முந்தி ஏறும் மகன் இடைப்பட்ட ஒன்றில் இன்றைக்கு அமர்ந்தது முன்னே இருப்பவனை முழுதாய் பார்க்க என்றான். எப்போதும் முந்துவது என்பதை விடுத்து மற்றவரைக்…