This entry is in the series 20100312_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



வழக்கமான தன்

விளையாடுமிடத்தில்

முதல் வண்டியில் என்றும்

முந்தி ஏறும் மகன்

இடைப்பட்ட ஒன்றில்

இன்றைக்கு அமர்ந்தது
முன்னே இருப்பவனை

முழுதாய் பார்க்க என்றான்.

எப்போதும் முந்துவது

என்பதை விடுத்து

மற்றவரைக்

காண்பதென்பதில்

என் வரைக்கும்

ஏக திருப்தி.

o

Series Navigation