கடிதங்கள் மார்ச் 18 2004

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

நரேந்திரன், மதூ, நாக. இளங்கோவன். ஜெயமோகன், பொறையாறு நந்தன்நண்பர் பாலாஜி அவர்களுக்கு,

திண்ணையில் உங்கள் எதிர்வினை கண்டேன். நெற்றிக் கண் திறந்திருக்கிறீர்கள். குற்றம், குற்றமே என ஆமோதிக்கிறேன்.

மாலிபூவும் கலிஃபோர்னியாவில்தானே இருக்கிறது ? அதுவும் ஹாலிவுட்டிற்கு மிக அருகில். (மாலிபூவிலிருந்து 26.2 மைல்கள் ஹாலிவுட்டிற்கு. காரில் சென்றால், மாலிபூவிலிருந்து ஹாலிவுட்டிற்கு 36 நிமிடத்தில் செல்லலாம்). ஹாலிவுட் அனைவருக்கும் தெரிந்த இடம் என்பதால்தான், அந்த சர்ச் மாலிபூவில் இருக்கிறது என்று தெரிந்தே ‘ஹாலிவுட் ‘ என எழுதினேன்.

Fox News-ஐச் சேர்ந்த Bill O ‘reilly, Mel Gibson-ஐ பேட்டி கண்டபோது, ‘போப் ஜான்பால், The Passion… திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததாக எனக்குத் தெரியவந்தது ‘ என்று சொன்னார். அதற்கு Mel Gibson சொன்ன பதில் ‘எனக்குத் தெரியாது ‘ என்பதாகும். Bill O ‘reilly மீண்டும் அழுத்தமாக ‘எனக்கு நம்பகமான இடத்திலிருந்து எனக்குத் தகவல் தெரிய வந்தது ‘ என்றார். எனவே, அது நானாகத் திரித்து எழுதிய தகவலில்லை. கண்டு, கேட்டதைத்தான் எழுதினேன்.

கிரேக்கப் படைவீரர்கள் எழுதி இருந்ததும் தவறானதுதான். இலத்தீன் மொழியில் கதாபாத்திரங்கள் பேசுவதை எழுதுகையில் அதன் தொடர்ச்சியாக ‘கிரேக்கப் படைவீரர்கள் ‘ எனத் தவறாக எழுதியது எனது தவறு.

அன்னை மரியாளாக நடித்தது ஒரு இஸ்ரேலிய நடிகை என்பதும் ஒரு Yahoo கட்டுரையில் இருந்து எடுத்து எழுதப்பட்டதே. ரோமானியன் என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது எனக்கு. (இப்படியே போனால் ரோமானியர்கள் என்னை மழிக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது!).

கட்டுரை சுவராசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சில வார்த்தைகளை மாற்றி எழுதுவதும், நான் கண்டறிந்த சில சம்பவங்களை எனது கட்டுரையில் சேர்ப்பதுவும் எனது பாணி. இந்தத் திரைப்படம் பார்த்ததால் விளைந்த ‘எனது ‘ எண்ணத்தில் இருந்து எழுதப்பட்டிருப்பதே இந்தத் திரைப்பட விமரிசனம். ‘இயக்குனருக்கு வேலையே இல்லை ‘ என்பதுவும் எனது எண்ணம்தான். எல்லாப் பார்வைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அல்லவா ?

On a Camel ‘s eye, everything is a Camel என்பார்கள். என்ன நான் சொல்வது ?

அன்புடன்,

நரேந்திரன்.


Dear Editor:

I appreciate you good intention of posting links to other thamizh internet publications. But it crowds up the left hand sidebar. A suggestion: A new category such as ‘Other Links ‘ can be formed and all the other other links can be posted under it. This would give a crisp look to Thinnai and might make navigation easier.

thx,

Maadhoo.


அன்பின் ஆசிரியருக்கு,

ஞானி அவர்களின் ‘ஓ..போடு ‘ என்ற கட்டுரை அருமையானதும் தேவையானதும் ஆன ஒன்று. தேர்தலில் வாக்களிக்காமை என்பது சோம்பேறித்தனம் மற்றும் சனநாயகப் பொறுப்பற்ற தன்மை என்று பலரும் கருத்துச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பல தேர்தல்களில் வாக்களிக்காதவர்களே ‘பெரும்பான்மை ‘ கட்சி என்பது உண்மை. இந்த உண்மை சரியாக அணுகப் படல் வேண்டும். அந்த அணுகலைச் செய்வதற்கு இந்தியாவில் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு அறிவு வளம் இருக்கிறதா என்பது அய்யப்பாடு. அதனாலே இந்த 49 – ஓ வெற்றி பெறுமா அல்லது விரைவில் பலன் தருமா என்பவை அய்யப்பாடுகள். சரியான சிந்தனை வளம் இந்தியா ஆளுகையில் இருந்திருந்தால் வாக்களிக்காத அந்தப் பெரும்பான்மைக் கட்சியினர் அனைவரையும் 49-ஓ வாக எண்ணி செயல் பட்டிருக்கக் கூடும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் மட்டும் 50% க்கும் மேலே.

எனினும், 14 வருடங்களாக வாக்குச் சாவடி பக்கம் போக வெறுத்திருந்த எனக்குள் இந்தத் தேர்தலுக்கு வாக்களிக்கப் போக வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. அதை மறுபரிசீலனைக்குட்படுத்தியிருக்கிறது ஞானியின் கட்டுரை.

அடுத்ததாக, திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சமற்கிருதம் குறித்த ‘அரைத்த மாவு ‘ கடிதம். அவர்ின் சமற்கிருதம் குறித்த கருத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிழைகளின் பாதையில் போய்க் கொண்டிருப்பது சமயத்தில் நகைப்பை வர வைக்கிறது.

அவரும் தனது பிழையான வாதங்களை சலிக்காது எழுதி வருகிறார். அவராக சலித்துப் போய் மாற்றினால்தான் உண்டு.

வடமொழிச் சங்கதிகளை, திராவிட இயக்கத் தலைவர்களின் கொள்கைகளாகவும், ஏதோ பெரியாரும் அண்ணாவும் அவர் வழிவந்த கலைஞர், வைகோ போன்றோரின் விளைவுகளாக மட்டும் அவர் எடுத்துக் காண்பிக்கின்ற ஒன்றே, அவரின் தமிழ் மொழி வரலாற்றின் அறியாமையைக் காட்டுகிறது.

வடமொழியைப் பற்றி அவர் பேசும் முன்னர், திராவிட இயக்கத் தலைவர்களின் மேல் உள்ள காழ்ப்பைக் கடந்து, தமிழ் இயக்கம், தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றைப் படித்து விட்டு அவர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மேல் வடமொழி பகை தொடுத்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர் வரலாறு கொண்டது. அதைத் திராவிட இயக்கத் தலைவர்களின் செயல்பாட்டோடு மட்டும் இணைப்பதே பெரும் பிழை. அதனால்தான் அவரின் கருத்துகளை பிழையானவை என்று கூறுகிறேன்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

elangov@md2.vsnl.net.in


அன்புள்ள ஆசிரியருக்கு

திண்ணை வெளியிட்ட அருண்மொழிநங்கையின் கட்டுரை பற்றி ஒரு சிக்கல். பொ.வேல்சாமி அவரது கவிதாசரண் இதழில் அது அங்கையற்கண்ணி என்பவரின் கட்டுரை ஒன்றின் தழுவல் என எழுதியிருந்தமை குறித்து சில நண்பர்கள் சொன்னார்கள். தீராநதியில் ஒரு குறிப்பாக அது பிரசுரமான விஷயமும் . நான் இப்போது செய்துகொண்டிருக்கும் பெரும்பணியினூடாக அவற்றை நேரடியாகக் கவனிக்க இயலவில்லை. மேலும் அவ்விதழ் என்னைப்பற்றி தொடர்ந்து அவதூறுகளை வெளியிட்டுவருவதும் அவதூறுகளுக்காக்வே நடத்தப்படுவதுமாகும். ஆகவே பொதுப்படையாக எதிர்வினையாற்றினேன். இப்போதுதான் ஒரு நண்பர் சுட்டிக்காட்டிய இவ்விணைப்புமூலம் முழுக்கட்டுரையையும் படித்தேன். இது ம்ழுமையான சுயவிளக்கம்

ந. மம்முதுவின் பேட்டி சொல்புதிதில் வெளிவந்தபோது அதைப்புரிந்துகொள்ள உதவியாக சில அடிக்குறிப்புகள் தேவைப்பட்டன. தமிழிசை குறித்தும் ஆபிரகாம் பண்டிதர் குறித்தும். கலைக்களஞ்சியங்களிலிருந்துத் தகவல்கள் திரட்டப்பட்டு குறிப்புகள் எழுதப்பட்டன. ஒரு குறிப்பை நான் எழுதினேன். இரு குறிப்புகளை சரவணன்1978 எழுதினார். அவை வெறுமே தகவல்களாக சிறு எழுத்தில் பின்பக்கம் தரப்படவேண்டுமெ என்று அவருக்கு சொல்லப்பட்டது. ஆனால் இதழ் அச்சாகி வந்தபோது வேறுவிதமாக இருந்தது. குறிப்புகள் தனியாக பெயர்களுடன், ஒன்று அருண்மொழிநங்கைபேரிலும் , இருந்தன. அருண்மொழி அவ்விதழுக்காக எழுதிய கட்டுரை – ஹெப்சிபா ஜேசுதாசன்பற்றியது – பிரசுரமாகவில்லை. குறிப்புகள் நீளமாக இருந்தமையால் அவற்றை ஒருபக்கக் கட்டுரைகளாக வெளியிட்டதாகவும் ஒரு கட்டுரை தன்பேரில் இருந்தமையால் ஒன்றை ஆசிரியர் குழுவை சேர்ந்தவர் என்ற காரணத்தால் அருண்மொழிநங்கை பேரில்வெளியிட்டதாகவும் சொன்னார். மேலும் பல பிழைகள், குளறுபடிகள் இருந்தன. அதற்காக அவரைக் கோபித்துக் கொண்டாலும் அப்போது சொல் இதழை முழுக்கவே அவரே செய்துகொண்டிருந்தமையால் மேற்கொண்டு ஒன்றும் சொல்ல இயலவில்லை . இது சொல் சம்பந்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற பல சமரசங்களுடன்தான் சொல் இதழை நடத்தமுடிந்தது. பல சிக்கல்களுக்குப் பின் அவர் தொடரமுடியவில்லை. இதழும் நின்றது.

இப்பிரச்சினை எழுந்தபின் அவரிடம் கேட்டபோது தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தின் வாழ்வியல் கலைக்களஞ்சியத்தைச் சார்ந்தே எழுதியதாக சொன்னார். ஒரு குறிப்பு கலைக்களஞ்சியம் சார்ந்து அமைவதில் பிழையில்லை. கட்டுரையாளர் அத்தகவல்களை தன் கண்டுபிடிப்புகளாக முன்வைக்கவுமில்லை. அவை ஏற்கப்பட்ட அடிப்படைத்தகவல்கள். ஆகவே இரு கட்டுரையும் ஒரே கலைக்களஞ்சியத்தைச் சார்ந்து எழுதப்பட்டிருக்கலாம் என எண்ணினேன். அதையே இதழ்களுக்கும் தெரிவித்தேன். இப்போது இக்கட்டுரைகளைப் பார்க்கையில் சரவணன்1978 இக்கட்டுரையையை அடியொற்றியிருப்பது தெரிகிறது. நிகழ்ந்தது இதுதான். இது பெரிய பிழைதான். இப்படி நிகழ்ந்தது என் பொறுப்பில் என்பதனால் நானே இதற்கு பொறுப்பு. ஆகவே வாசகர்கள் மற்றும் திருமதி அங்கையற்கண்ணி ஆகியோரிடம் உளமார மன்னிப்பு கோருகிறேன். உங்களிடமும்

திண்ணையில் அக்கட்டுரையை நீக்கமுடியுமா ? இது ஓர் விவாதமாக ஆகவேண்டாமென எண்ணுகிறேன். மற்ரபடி உங்கள் விருப்பம். உங்களிடமும் மன்னிப்பு கோருவிறேன். ஒரு தவ்று தொடராக தவறுகளை உருவாக்கிவிட்டது

ஜெயமோகன்


பூ நூலை அறுத்ததற்கே பொங்கி வழியும் விஸ்வாமித்திரரே!

பறையனுக்கு ஒரு நீதி பார்ப்பானுக்கு ஒரு நீதி எழுதி பாரதத்தையே கூறு போட்ட கும்பல்களின் பூநூலை அறுத்தது- தவறுதான் (வேறு எதை அறுத்திருக்க வேண்டும் என்று ஐடியா கொடுத்தால் திண்ணை ஆசிரியர் குழு கத்தறித்துவிடும்)..

வர்னாஷிரம விதையை இந்த தேசத்திலே விதைத்து, நீர் ஊற்றி வளர்த்து, ஏமாளி தமிழர்களின் மீது தினித்து அவர்கள் இந்துக்கள் என்று சம்பந்தமில்லமல் நிணைப்பதை போல் படையாட்சி, பள்ளன், தேவர், நாடார் என்று ஜாதி வெறி பிடித்து மார் தட்ட வைத்துவிட்டு..ஆதி திராவிடர்கள் ஏன் தேவர்களை வம்புக்கிழுக்க மாட்டேன்கிறார்கள் ? ஏன் வன்னியர்களிடம் சண்டைக்கு போக மாட்டேன்கிறார்கள் ? என்று திசை திருப்பும் விதமாக கேள்வியும் கேட்பது நாங்கள் திருந்தவே மாட்டோம் கடைசிவரை கடைந்தெடுத்த, சந்தேகமில்லாத, இனவாதியாக, வன்முறைவாதியாக, காட்டுமிராண்டியாக, குழப்பவாதியாகத்தான் இருப்பீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது..

தங்களின் உதாரனமான ‘முயலையும் முல்லாவையும் கண்டால் முயலை விட்டு விட்டு முல்லாவை கொல் ‘ என்பது வீனாக முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதாக உள்ளது.. பெரியார் பாம்பையும்..பிராமனரையும் ஒப்பீடு செய்ததில் அர்த்தம் இருந்தது..இரண்டிலும் விஷம். ஜாதீய விஷம் தோய்ந்த மனித பாம்புகளாகத்தான் பிராமனர்களை அவர் சித்தரித்து காட்டினார். அன்று அவர்கள் கக்கிய வர்னாஷிரம விஷம் இன்று விஷமாக பரவி இந்தியாவையே கூறு போட்டிருக்கிறது..பெரியார் பானா (பாம்பு) வுக்கு பானா (பார்ப்பனர்) போட்டதில் உண்மை இருந்தது. ஆனால் நீங்கள் போகிற ‘முனா(முயல்) வுக்கு முனா (முல்லா)வில் விஷமோ வில்லங்கமோ இல்லை.

இந்தியாவில் இருக்கின்ற முல்லாக்கள் எல்லாம் முன்னாள் இந்துக்கள்தான்..உங்களின் சாதியப் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்வதற்காக இஸ்லாமிய மதத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள்தான்..இன்னும் ஏன் அவர்களை துரத்திக்கொண்டிருக்கிறீர்கள்..(இருக்கின்ற மற்ற சாதியினர் மற்ற மதத்திற்குள் ஓடி விடாமல் இருப்பதற்கு புரட்சி தலைவி மூலம் ‘மத மாற்றம் தடை சட்டம் ‘ கொண்டு வந்துவிட்டோமே என்ற தெனாவெட்டா ?)

கிழ வயதில் திருமனம் செய்தவருக்கு பென்னுரிமை பேச அருகதையில்லையாம்..அப்படியென்றால் இள வயதில் திருமனம் செய்தவர்களுக்கு மட்டும்தான் பென்னுரிமை பேச உரிமை இருக்கிறதா ? என்ன ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம். சரி உங்கள் வாதத்துக்கே வருவோம்.பெரியாரவது முதுமையில் திருமணம் செய்தார்.. .திருமணமே செய்யாமல் ‘பென்னுரிமை ‘ பற்றி ‘கன்னிக்கழியாத ‘ ‘பெரியவாள்(ல்) களும் சின்னவாள்(ல்) களும் பேசமுடியாதா ?..இவால்களெல்லாம் உளரிக்கொட்டுவதை ‘தெய்வக்குரல் ‘ என்று வக்காலத்து வாங்கும் அடி வருடி கூட்டத்திற்கு பென்னுரிமை பேச அருகதை உண்டா ?

அன்புடன்

பொறையாறு நந்தன்


Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்