சு.மு.அகமது சுவர் எழுதிக்கொள்ளும் எனது இரங்கற்பாவை அதற்குத்தான் தெரியும் சித்திரத்தின் வலி தீண்டல்களின் தோலுறியும் சுவரதை நன்கறியும் பூக்களின் சருமத்தில் புகைச்சலின் பரிசம் பூவோடு சருகும் கருகும் மட்கிப்போயிருக்கும் என் எச்சத்தின் மிச்சம் நெட்டி…
தேனம்மை லெக்ஷ்மணன் ************************************** ஜடாமுடியாயோ., குறுந்தாடியாயோ இருப்பது குறித்து உலகுக்கு கவலையில்லை.. க்ரீடமாகவோ ஹாரமாகவோ அழகுபடுத்திக் கொள்வதும்., அசிங்கப்படுத்திக் கொள்வதும், அதைப் பெருமையாய் எண்ணுவதும் ஒற்றைக் கண்ணோட்டமே.. குற்றச்சாட்டோ., அதிருப்தியோ., குலைத்துவிடப் போவதில்லை.. வெற்று…
தேனு மழை பயிற்றுவிக்கும் பேச்சுத்துளிகள் சில யுகங்களை கடந்திருக்கும் யதார்த்தம் நமக்கு மட்டுமே உட்பட்டது.. சாரலில் மயங்கியிருந்த உன் மடிமீது துயில் கொள்கின்றன சொடுக்கப்படும் என் விரல்கள்.. நிலவுகளை அள்ளித் தெளிக்கும் உன் கரங்களில்…
ந.மயூரரூபன் வீதி வெயிலில் காய்ந்து சுருண்டிருக்கும் உலர்ந்தபின்னும் காற்றதன் மேல் தொங்கிக்கொண்டிருக்கும். பேய்த்தேர் ஆடியசையும் சலனங்கள் மட்டும் வீதியில் விழுந்துகொண்டிருக்க இமை பொசுங்கிய கண்கள் குலுங்கும் பையொன்று மேற்குருட்டு வளைவில் சோம்பியசையும். பேய்த்தேர் இழுத்துவரும்…
சக்தி மனம் எனும் மாயை அதன் இருப்பிலும் இல்லாமையிலும் காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!! நினைவு ரேகைகள் ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!! தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் கிளைக்கும் அதன்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ அழுத்திக் கேட்கும் போது சிரியன் தேசம் ரொட்டியைச் சொத்தைப் பற்களால் கடித்து ஒவ்வொரு கவளைத்தையும் நச்சு உமிழ் நீரில்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா **************************** நெருப்பே என் பிள்ளை ! **************************** ஒயின் அளிக்க வேண்டாம் இனிமேல் எனக்கு ! செந்நிற ஒயினையும் தூய…
ரவிஉதயன்சின்னக்குழந்தை தன் சின்னச்சின்னப் பாதங்களை இப்பூமியல் எடுத்துவைக்கிறது வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் அதன் பாதணியிலிருந்து சீழ்கையொலி எழும்புகிறது பிஞ்சின் நடை பதற்றம் கண்டு தாயன்பு தவிக்கிறது சின்னக்குழந்தை சிரித்தபடி நடக்கின்றது சங்கீதத்தின் மீது. ரவிஉதயன்
ரசிகன் இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில் அகாலமாய் தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்! எவனுடையதும் எவளுடையதும் பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்... யார் நீங்கள்? எங்கு நிற்கிறேன்? எங்கு செல்லப்போகிறேன்? முகவரிகளற்ற உலகத்தில் விடைகள் எதையும்…
இளங்கோ * தலையணைப் பூக்களில் வாசம் நுகரும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் காய்ந்து பிசுபிசுக்கிறது இரவு நெடுக குறட்டையொலியோடு வழிந்த உதட்டு எச்சில்.. **** --இளங்கோ