திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை வளைதலும் வளைந்து கொடுத்தலுமான நாணல்களின் துயர்களை நதிகள் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை கூடு திரும்பும் ஆவல் தன் காலூன்றிப் பறந்த மலையளவு மிகைத்திருக்கிறது நாடோடிப் பறவைக்கு அது நதி நீரை நோக்கும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர், போவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அவரெல்லாம் காதல்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++ காதல் மௌனம் ++++++++++++++++++++++++++++++ மலர்ந்த இப்புதிய காதலுக்குள் மடிந்து விடு ! ஆயினும் உனது பாதை உருவாவது மறு பக்கத்தில்…

வேத வனம் விருட்சம் 86

எஸ்ஸார்சி - ஆத்மாவை அளிப்பவன் பலமளிப்பவன் தேவர்கட்கு ஆக்ஞை தருவோன் இருகால் நான்கு கால் பிராணிகட்கு த்தலைவன் அவனுக்கிவண் அவியொடு வணக்கம் சுவாசிப்புக்கும் இமைகொட்டுதலுக்கும் யார் அதிபதியோ யாருடைய உருவம் அமிர்தமோ நிழல் மரணமளிப்பதோ…

ஜன்னல் பறவை:

'அவனி அரவிந்தன் நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதில் ஐந்து வருடத்துக்கு முன் வெள்ளி முளைத்த வேளையில் தூக்கு மாட்டிக் கொண்ட இருவரைத் தவிர வேறெவரும் அறிந்திராத அந்த அரையிருட்டு அறையில் அவர்களின் இறுதி…

A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)

செந்தில் --- எதனால் எப்படி வந்தடைந்தான் மனிதன் இந்த காலக்கண்ணாடியில் தன் முகம் பார்க்க நோக்குடன் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சின் விதையாகவோ நோக்கற்று காற்றில் திரிந்தலையும் பறவையின் சிறகாகவோ ஓ மகா மாயே!…

புறத் தோற்றம்

யூசுப் ராவுத்தர் ரஜித் மீசையில்லா பாரதி தாடியில்லா வள்ளுவன் தமிழனுக்குத் தெரியாது அகம் பேசும் புறமே ஆராதிக்கப்படும் முள்ளில்லா வாழை முள்ளுள்ள தாழை அகம் புரிந்ததால் புறத்தில் தவறில்லை அவன் அன்பில் கமலம் வீரத்தில்…

கால்களின் அசமகுறைவு

நட்சத்திரவாசி உங்களின் பரிபாஷையில் எவ்வொரு மாற்றுச்சொல்லினையாவது அவனுக்காய் உபயோகியுங்கள் பையித்தியம் என்பதை தவிர அவனது ஆடைகளில் படிந்திருக்கும் கறைகளையாவது துர்மணத்தையாவது விமர்சனம் செய்யாமல் விட்டுவிடலாம் அறுந்த வாரைகட்டி பூட்டியிழுக்கும் கால்களின் அசமகுறையை பெரிதுபடுத்த வேண்டாம்…

மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்

மலேசியா ஏ.தேவராஜன் 1. பறவைகளின் சிறுகூட்டுக்குள் பகிர்ந்தளிக்க் ஏதுமில்லையென்பதாலும் நாளை வீசும் புயலில் சிதறினாலும் மரத்திலிருந்து ஒரு கூட்டுக் கொலை அடுத்த வினாடி நிகழ்ந்தாலும் சிரிப்பதையும் அழுவதையும் அவை உணராமலேயே ஒரு வாழ்க்கையை வாழ்வித்துவிடுகின்றன.…

காதலி எனும் கிறுக்கல்கள்!

ரசிகன் ஒவ்வொரு காதலின் சட்டைப்பையிலும் ஆயிரமாயிரம் புண்பட்ட மௌனங்களும் மேம்பட்ட சலனங்களும் ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன! அதில் குறிப்பிடும்படியாக குறிப்பெழுதும்படியாக ஒன்றிரண்டு மட்டும் அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு பசியாற்றப்பட்டு விடுகிறது! மீதம் எஞ்சியவை ஒற்றை…