திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இரவு.

அருண்பிரசாத். ஓருயிரணுவாய் பரவுகிறேன். சூலுற்ற இரவினின்று வெடித்துக் கிளம்பி. திசைக்கொன்றாய் சிதறி மறையும் உன் நினைவுப் பொறிகளினூடே ஒரு மின்னலாய் பயணிக்கிறேன். ஊழியின் வெளிநிறை அதிர்வு மையத்தில் ஒரு மெளனமாய் உறைகிறேன் அதிகாலையில். அருண்பிரசாத்.…

இணையத்துக்கு இல்லை இணை !

பசுபதி கணவன்: ஆறாம் திணைவெளியில் யாவரும் மன்னர்கள்! மாறுபெயர் சூடி மடற்குழுக்கள் ஊடுருவி நாரத வேலைக்கோர் நாடக மேடையது ! நாராசம் நாடோறும் வீசிட, நச்சுக் கணைகள் தொடுத்தெனது காழ்ப்புணர்வைக் கக்க, இணையத்துக்கு இல்லை…

வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)

ருத்ரா. கவிதைகளின் சிகரமே! உன் எழுத்துகளில் கசிந்த ஈரம் மனிதாபிமானத்தின் ஒரு சமுத்திரமாக அந்த குளத்தில் அலையடித்த காட்சி எங்கள் இதயங்களையெல்லாம் நிமிண்டிவிட்டது. ஓட்டாஞ்சல்லியில் நீ தவளைக்கல் எறிந்து விளையாட விரும்பிய அந்தக் குளம்...…

நாகூர் ரூமி கவிதைகள்

நாகூர் ரூமி வெட்டுக்கிளிகள் ---------------------- நிலவிலிருந்து பார்த்தபோது நிர்வாணக் கண்களுக்கே தெரிந்ததாம் சீனப் பெருஞ்சுவர் நீளமான குச்சி கொண்டு கிச்சுகிச்சு மூட்டி உசுப்பி விட்டு வெட்டுக்கிளிகளை சண்டையிட வைத்து சந்தோஷிக்கிறது பெருஞ்சுவர்ப் பாரம்பரியம் இன்று.…

நிராகரிப்பில்…

வேதா மஹாலக்ஷ்மி அடிமனதில் கூடுகட்டி ஆழம் தோண்டி உயிர் செய்து அடைகாத்து நிற்கிறேன் - என் அணுவெல்லாம் மொத்தமாய் கருவாக்கி நிற்கிறேன்.... என் உயிரில் கொஞ்சம், உணர்வாய் கொஞ்சம் உதிரம் உருவாக்கி நிற்கிறேன்... பழகிய…

ஒரு நட்பின் முறிவு

ஆதர்ஷ் ராவ் உனக்கும் எனக்கும் இனி சரிப்படாது கோர்த்த கைகளைப் பிரித்து விடுவோம் நீயும் நானும் அவரவர் பாதைகளில் வெகுதூரம் சென்றுவிட்டோம் மீளமுடியாதினி உனக்கும் எனக்கும் பிணக்குகள் இல்லை.. பிணைவுக்கான சாத்தியங்களும் இல்லையே ?…

எண்கள்! எண்கள்!

கரு.திருவரசு எண்களுக்கும் தமிழருக்கும் என்னென்ன தொடர்பெனநம் கண்களுக்குப் பட்டவரை கணக்கெடுத்துப் பார்ப்போமா! ஒண்ணாம் கிழமையிலே ஓரிலக்கம் பூத்தொடுத்தேன் இரண்டாம் கிழமையிலே இஈரிலக்கம் பூத்தொடுத்தேன் சிறுபிள்ளை விளையாட்டில் தொடங்குகிற எண்ணிக்கை விடைசொல்லும் விடுகதையில் விளையாடும் எண்ணிக்கை!…

அவைகள்

நெப்போலியன், சிங்கப்பூர் என் இதயக் கூட்டிலிருந்து பட்டாம் பூச்சிகளை அவிழ்த்து விட்டபின் மகரந்த வாசம் எனதற்றுப் போனது...... திசைகளற்ற தீர்வை நோக்கி புறப்பட்ட அவைகளின் பயணம் பள்ளதாக்குகளில் இளைப்பாறப்பட்டது...... இடையில் சந்தித்த மலர்களுக்கெல்லாம் அவைகளால்…

பெரிய கருப்பு

நெப்போலியன், சிங்கப்பூர் பெரிய கருப்புக்கு கோடையில் கொடை. எட்டுப்பட்டி சனமும் பத்து நா கூடி நிக்கும் ரா முழுக்க கூத்துப் பாக்க வண்டி கட்டி வந்து சேரும். புதுக்கோட்ட தெலகவதி கொட்டாம்பட்டி பழனிச்சாமி கரகாட்டம்…

பட்டாபிஷேகம் நடக்கிறது…

கவியோகி வேதம் பட்டாபிஷேகம் நடக்கிறது!- இதோ!-கம்பன் ..பந்தியிலை போட்டாச்சு! பட்டாடைக் கவியுடுத்தும்-நண்பர்களே! ..பருகஒரு விருந்தாச்சு!-நீங்கள் ..பருக ஒரு விருந்தாச்சு! .. வால்மீகி சொத்துதந்தான்!-நம்கம்பன் ..வாரிசாக தனைவரித்தான்! கால்தொட்டு கும்பிட்டான்!-தனிவழி! ..கனஜோராய் விருந்துவைத்தான்!(பட்டாபி..) .. தசரதச்…