திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நெருப்பு மலர்

குமரி எஸ். நீலகண்டன்எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்புப் பூ.. கருப்பு வாசம். தொட இயலவில்லை தோட்டமெதுவும் இல்லை வண்டு மொய்க்கவில்லை இதழ்கள் உதிரவில்லை இறுதியில் மண்ணில் கருப்பு மகரந்தங்கள்

குறும்பாக்கள் ஐந்து

பட்டி சு.செங்குட்டுவன் ---============ 1.ஒற்றைப் பனைமரம் ஒதுங்க நிழலில்லை மட்டையில் கூடுகள். 2.மொட்டைத் தலையில் முடிவளர ரத்தம் பனி குடித்த முயல். 3.மந்திரி ஆகிட பயிற்சி எடுக்கிறது வேலியில் ஓணான். 4.நாளைக்கு வரும் நாளைக்கு…

அடிமை நாச்சியார்

பிச்சுமணி வேஅம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு செல்லும் போது எல்லாம் உடனே எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன் வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகளை தாண்டி செல்ல தயங்கும் போது அய்யம்மாவின் குரல் வாங்க நாய்னா…

என் அன்னை கமலாவுக்கு

செந்தில்கமலமலரின் இதழ் போன்று மென்மை வைரம் போன்ற வைராக்கியம் நேசத்தை தவிர எதையும் வழங்காதவள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவள் எளிமை, கண்ணியம், பெருமை அவளது மொத்த வாழ்வு! சாதிமத எல்லைகள் கடந்து தன் வாழ்வையும்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது தீய பழக்கம் : கூதற் காலத்தில் பொறுமை இழந்து பாதகம் செய்வேன் என்னோடு இருப்போ ருக்கு ! நானில்லா…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் வசித்தோம். இன்று நாம் வாழ்கிறோம். இதுதான் கடவுளின் ஊழ்விதி. வானரத்தின் வாரிசுகளே ! உமது இறுதி வாக்கு…

உறைந்த கணங்கள்

வருணன் கருப்பு வெள்ளைகளில் உறைந்து கிடக்கும் மரித்த கணங்கள் பார்ப்பாரின்றி உறங்குகின்றன அலமாரிகளிலும் தூசுகளுண்ணும் பரண்களிலும். கணிணிகளின் முகத்தில் உறைந்த நினைவுகளைச் சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன வண்ணம் துறந்த அந்நினைவுகள். பாட பாரங்கள் அழுத்தாத…

பேரரசன் பார்த்திருக்கிறான்

சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் முன்போர் நாளில் தீப்பற்றி எரிந்ததாம் நகரொன்று யாரோ பெண்ணொருத்தி நிலத்தில் ஓங்கியடித்த சிலம்பொன்றினால் அரசனின் குற்றமொன்று தவறொன்று வஞ்சகமொன்று காரணம் எதுவாயினும்…

இனிமையானவளே!

சபீர்நீ வாங்கித் தந்த விடிகாலையும்... உனக்காக விற்றுத் தீர்த்த அந்தி மாலையும் மட்டு மல்லாது... நடுநிசியும் நன்பகலும் முன்னிரவும் முதிர்காலையும் என- எக்காலமும் உன் நினைவுகள்! உன் கனிந்த கன்னங்கள் கவிதை பாடின, அதில்…

கரையில்லா ஓடங்கள்

ஷம்மி முத்துவேல் கனவுகள் தோரணம் கட்டி இமைகளில் இறுகப்பூட்டி விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட ஆங்காங்கே அவள் அமர்ந்திருப்பாள் சிறுவயதுக்கனவொன்று அவளை இரவுபகலாக வாட்ட விழி முத்துக்கள் கடலாகின உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள்…