அருண்பிரசாத் ஓய்வின்றி ஆடுகின்றான் தாண்டவன். ஒற்றைக் காலில் வெறுமையின் உக்கிரம் தாளாமல். தேவியின் பாத சலங்கை பின்னணி இசை நினைவு அம்பலத்தில். மற்றுமொரு மானசரோவராய் உருவெடுக்கும் வியர்வை பிரளயங்களின் வெடிப்புகளை நிரப்புகிறது. =================== everminnal@yahoo.com.
பவளமணி பிரகாசம் கும்மென்ற இருட்டான இரவும் குப்பென்று புலர்ந்துவிடும் ஒரு பொழுதில், சருகை உதிர்த்த மொட்டை மரமும் சடுதியில் துளிர்க்கும் அடுத்த பருவத்தில், இறப்பிங்கு இறுதியில்லை- இன்னும் இன்னும் உயிர் பிறக்கும். மதிகெட்டு மாந்தர்…
ப. செளந்தரராஜன் பள்ளிப் பொதிகளைச் சுமந்து சுமந்து கழுதையாகிப் போனது பிள்ளையின் மனசு வளர்ந்தபின் கழுதை உதைத்த உதையில் முதியோர் இல்லத்தில் விழுந்தது பெருசு ===================
கரு.திருவரசு மண்ணளந்து விண்ணளந்து மனமளந்து வாழ்ந்தவன் பொன்னளந்து புகழளந்து பொருள்வளத்தில் ஆழ்ந்தவன் தன்னலத்தால் நிலைதளர்ந்து தனிநலத்தைப் பேணியே கண்ணிழந்த காவியத்துக் கதையளந்த காட்சியோ! வல்லினந்தான் இடையினத்தால் வலிவிழந்து போனதும் மெல்லினமாய் உருபுகெட்டு வேற்றுமையிற் சாய்ந்ததும்…
ருத்ரா. எட்டு நூல் வெளியீட்டு விழாவில் ஏதோ எட்டாத உயரத்து சாளரத்தில் நின்றுகொண்டு காக்காய் குருவிகளை எட்டி பார்ப்பது போல் ஏற்புரை அருளியிருக்கிறார் ஜெயமோகன். எழுத்து நாகரிகத்தை எட்டாதவை அவை. அவரது எட்டு நூல்…
சேவியர் பறிக்கப்பட்டவைகள் --------------------------------------- 0 மங்களமா இருக்கும் வாங்கிக்கோங்க, கக்கத்தில் இடுக்கிய கூடை நிறைய வாசனையோடு நிற்பாள் பூக்காரி. பூக்களுக்கே வலிக்காமல் பூக்களை பூ போல அள்ளிக் கொள்தல் அவளுக்கு விரல் வரம். பூக்களைச்…
நாகூர் ரூமி யானையின் கண்களைப்போன்ற கீறல் விழுந்த உனது சின்ன குரல் முதன் முதலாய் என் செவிகளில் விழுந்தபோது எனக்குப் பிடிக்கவே இல்லை உன்னை! அபஸ்வரமாய் பட்டது உன் பெரிய ஆகிருதி எனக்கு! வெறும்…
திலகபாமா காற்றுக்குப் பறந்து போகும் காகிதங்கள் அலங்கரிக்கப் பட்ட உலோகங்கள் செல்வங்களாய் சொல்லப் பட பொருள் இழக்கின்றன வார்த்தைகள் செல்வத்தைக் கொடுத்து செல்வத்தை மணந்தும் எப்போதும் கையேந்தல்கள் பிறந்த வீட்டில் நான் மகாலட்சுமியாம் செல்வத்தோடிருந்தும்…
ருத்ரா கவிதைகளின் இமயங்களின் இமயமே ! அவற்றின் அடியில் நசுங்கிக்கிடக்கும் ஒரு இதயத்துக்குள் இத்தனை பிரவாகமா ? உன் எழுத்துக்களும் ஓட்டைகள் போட்டுக்கொண்டதுண்டு. அந்த புள்ளிகளைச் சொல்கிறேன். எழுத்துக்களின் மேல் அவை மகுடம் சூட்டி…
சத்தி சக்திதாசன் என்னைத்தேடி நன்மைகள் அற்றுத் தீமைகள் வந்தன இன்பங்கள் இன்றித் துன்பங்கள் வந்தன ஏற்றங்கள் அல்லாமல் ஏக்கங்கள் வந்தன மரியாதையற்ற மாற்றங்கள் வந்தன என்னைத்தேடி நண்பர்கள் போர்வையில் சில நரிகள் வந்தன சொந்தத்தின்…