திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அதி மேதாவிகள்

நாகூர் ரூமி ==== அற்புதமான அறிவு அந்தக் காகத்துக்கு ஒரு பக்கம் தலைசாய்த்து ஒரு கண்ணால் பார்க்கும்போது ஓராயிரம் அர்த்தங்கள் எதிர்பாராத கணத்தின் விளிம்பில் கொத்திப் பிடுங்குவதும் சப்தங்கள் கேட்டவுடன் சரேலெனக் கிளம்புவதும் எந்த…

அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்

புகாரி நீ வைகறைப் பனிவிழும் புல்மடியோ - மலை வாழையில் வெடித்தபொற் கனிநிலவோ - அந்தி வானத்துச் சந்தன ஒவியமோ - நதி கடலுக்குச் சூட்டிடும் நுரைச்சரமோ - முழு நிலவு உன் கூந்தலில்…

ஓவிய ரசனை

ஸ்ரீமங்கை ஓவியங்களை நான் ரசிப்பதில்லை, தனது ஓவியங்களை அழித்து, ஓவியத்திரையினைக் கிழித்துக்கொண்டிருந்த அந்த முதியவனைச் சந்தித்ததிலிருந்து. 'குருர ஓவியனே! நீ வரைந்த ஓவியங்கள் ரசிகர்களைப் பார்க்குமுன்னே, ஏன் இப்படி அழிக்கிறாய் ?. ' 'அனைத்த்தையும்…

ஊழ்வினை

வை.ஈ. மணி பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென பழமொழி கூறும் பொருளது பொய்யன்று தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம் செல்வம் படைத்த செருக்கில் நாரணனும் கல்விக் கரசியின் கணவனும்…

ஆர்வம்

பவளமணி பிரகாசம் விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com

நீர் வளர்ப்பீர்

சாந்தி மனோகரன் வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும்போது நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம் வேர்க்காதலன் இல்லாத இடத்தில் நீர்க்காதலி வசிப்பதில்லை வேரிடம் வெற்றிடமாகையில் வேறிடம் பெயர்கிறாள்..காதலி காடு மரங்கள் தொலைத்திடும் நிலம் சுடுகாட்டில் கணவனை தொலைத்திடல்…

பிரிவினை

மாலதி ---- கோயில் விட்டுத் தள்ளிப் போகும் சாமிக்குக் கத்துங்கடல் ரொம்பத்தூரம். கூப்பிட்டுத் தாள் பணியும் ஆணவமறுத்த கடல் கூவியழும் கண்ணீர்க்கடல் முத்துமணி பவளம் போல் மூத்திரமும் பொங்கவிடும் மறைவிடமில்லாத கடல் சப்பரத்தில் அடங்கிய…

தமிழவன் கவிதைகள்-ஆறு

தமிழவன் ஒரு ரோஜாத்தோட்டம். விழுகிறது, மஞ்சளளவு இளம்வெயில். பறக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெலிதான நிழல் பட்டு ஆடுகிறது புல்லின் பச்சைநிறம். ஆழத்திலிருந்து பீறிடுகிறது அழைப்பு. மெதுவாய் நடைபயில்கிறது அழுக்காடையுடன் நேற்று அமர்ந்து அழுத தீண்டத்தகாதவனின்…

நட்பாகுமா ?

பனசை. நடராஜன் தேர் நேராய் செல்லாமல் திசை கொஞ்சம் மாறினால் தடைப் போட்டுத் திருப்பாமல் தடம் புரளச் செய்யவோ! நீர்மூடிய சேற்றினில் - நீ நீராட இறங்கையில் 'நில் ' என்று சொல்லாமல் நீந்தென்று…

வேடம்

நெப்போலியன் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா... பாஞ்சாலி சபதம் விடிய விடியக் கூத்து... துரியோதணன் உருவலுக்கு கத்திக் கதறியவளுக்கு ஆபத்பாந்தவனாய் அருள் புரிந்த கோவில்பட்டி கண்ணபரமாத்மா கூத்து முடிந்த விடியல் கருக்கலில் தண்டபாணி லாட்ஜில் ஸ்திரீபார்ட்…