திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இதுஎன்ன?

சின்னப்பயல் ஓரிடம்இல்லாமல் மனம்அலைபாய்வதை எண்ணிக்கலங்கவைக்கும். மனதுக்குள் ஒத்திகைபார்த்தவை நிகழ்வில்பிறழ்வதை எண்ணிமயங்கவைக்கும். அடக்கமுயற்சித்தும் தனக்குள்ளேயேபீரிட்டுக்கிளம்பும் நேரில்சொல்லஇயலாததை மனதுக்குள்பேசிப்பார்த்துக் கொள்ளத்தோன்றும். உறுதியாகத்தெரிந்தபின்னும் தயக்கம்வந்துதடுக்கும். பேசப்போகும்முதல்வார்த்தை என்னவாயிருக்கவேண்டுமென்று தீர்மானித்ததுவெறும் உளறலாகவேமுடியும் கற்றறிந்தமொழியும் உன்னைக்கைவிடும் வார்த்தைகளேஇல்லாமல் வெறும்கண்களாலேயே புரியவைத்தால்என்ன எனதனக்குள்ளேயே…

தேடல்

T V ராதாகிருஷ்ணன்தேடினான் தேடினர் தேடியது கிடைத்ததும் தேடினர் மகிழ தேடினவன் தேடாதிருந்திருக்கலாமோ என்கின்றான் T V Radhakrishnan

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -4)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ எது பொய் ? எது மெய் ? ************************************ "நான் இறப்பதால் எனக்கு நேரும் இழப்பென்ன ? ஓர்…

பசுபதி கவிதைகள்

பசுபதிஇறை நாடிய பறவை யுக யுகமாய் இரை தேடி பயணிக்கும் தனிப் பறவை. ஒற்றை மரத்தில் துளிர்த்தாடிடும் பச்சை இலைகள். வந்தமரும் பறவையின் பேரதிர்வில் சிலிர்த்துதிரும் இலைகள். சிறகடித்துப் பறக்கும் பச்சைக் கிளிகள். பெருவெளியில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஒருநாள் பொறுமை இழந்து நான் பல் மருத்துவரிடம் தொல்லை தரும் பல்லைப் பிடுங்கச் சொன்னேன். இரவில் என் நித்திரையைக் கெடுத்து…

இடைவெளி

ரமேஷ் கல்யாண்வைத்த இடத்திலேயே வைத்தபடி இருக்கும்பொருட்களுக்கும் அதன் கலைப்புகளுக்கும் இடையே - எழுதிய பக்கங்கள் எழுதியபடியே இருப்பதற்கும் அதில் ததும்பும் கிறுக்கல்கிளுக்கும் இடையே - குடிநீர்க் குடம் சுத்தமாக இருப்பதற்கும் கை இடக் கலங்குவதர்க்கும்…

உருள்படும் பகடைக்காய்கள்

தேனு: சன்னல் தென்படுகிறதா? இருள்படிந்த அகம் எண்ண அலைகளால் ஊடுருவப்பட்டு ஏதோ ஓர் புள்ளிக்கு அப்பால் ஒதுக்கப்பட்டிருந்தது.. சிதறுண்ட கண்ணாடி துண்டங்களின் சேர்க்கை குறுக்கு மறுக்குமான பிரதிபிம்பம் எது அசல் நான்? எது நகல்…

உயிரோடு நீ

செண்பக ஜெகதீசன் இந்த உலகில் இருப்பவரில் பலர் எப்போதோ செத்துவிட்டவர்கள்.. அழுவதற்கு ஆள்தேடி அலைந்து வாழ்க்கை என்ற பெயரில் வலம் வந்துகொண்டிருப்பவர்கள் ! உழைக்கும் தோழனே உன்வழியே செல், எதிரில்வரும் பிணங்களால் எந்தப் பாதிப்பும்…

வலியதுகள் வாழ்கின்றன

ரவிஉதயன்சிறு எறும்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன. கவிழ்ந்தபுழு இறந்தது போல சுருண்டு நடிக்கிறது. விடாது எறும்புகள் மொய்த்துக் கொல்கின்றன புழு வேதனையில் புழுவாய்த்துடித்துச் சாகிறது கண்களுக்குத் தெரியா எறும்புகளின் வாய்கள் புழுவின் தசைகளை…

பூக்கள் விசித்தழும் மாலை

எம்.ரிஷான் ஷெரீப் வானை எடுத்து வாவென காற்று வெளியெங்கும் பட்டத்தை அனுப்புகிறேன் பகலில் சூரியனோ பௌர்ணமியோ எதுவோ குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள் மொட்டுக்களாகிப் பூத்திடும் விடிகாலையில்…