இமாம்.கவுஸ் மொய்தீன் நீ ஏணியாய் இருந்து விடாதே! உன்னை மிதித்து உயரே செல்வோர் உன்னை உதைத்துக் கீழே தள்ளுவர்! நீ மிதிப்பவரை மிதி! மதிப்பவரை மதி! நீ வாழ்வாய்!! நீ பாதையாய் இருந்து விடாதே!…
புதியமாதவி, மும்பை பூனைகளை நான் ரசிப்பதில்லை ஓசையின்றி திருட்டுப் பார்வையில் அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் அலைந்து கொண்டிருக்கும் பூனைகளை நான் ரசிப்பதில்லை. தூக்கத்திலிருக்கும் பூனைகளை கண்டு தூரவிலகிவிடுவது உத்தமம். விழித்திருக்கும் பூனைகளை விட தூங்குவது…
ஆதிராஜ் பிள்ளையார் சுழி போட்டுப் பேரேடு தொடங்கினேன். கள்ள மார்க்கட்டுக் கணக்கெழுதும் நோட்டு அது! கொள்ளை கொள்ளையாய் குவிந்தது லாபம்! கொஞ்ச நாளில் கள்ளக் கணக்கால் காலாண்டுக் கடுங்காவல்! உள்ளே இருந்தபின் உறுதியுடன் வெளிவந்தேன்!…
ஆதிராஜ் சல்லடை சொன்னது "நான் சலிப்பதனால் மக்கள் சாப்பிடுகின்றனர்!" 'பொ'க்கெனச் சிரித்தது முறம்! "நான் புடைத்தபின் தானே? பொங்குது சோறு?" "அற்பரே எங்களை அறியீரோ" என ஆர்ப்பரித்தது நெருப்பு! அடுப்பும் அதையே ஆமோதித்தது! பூமி…
புதியமாதவி, மும்பை பிரபஞ்சத்தில் வீசி எறிந்த ஒற்றைச் சொல்லைத் தேடி சுற்றி சுற்றி அலைகிறது கோள்களும் விண்மீன்களும், எழுதப்பட்ட எல்லா காவியங்களிலும் தேடியாகிவிட்டது கிடைக்கவில்லை. ஒவ்வொரு பிறப்பிலும் வெவ்வேறு மொழிகளுடன் தேடும் பயணம். செத்த…
தாஜ்நித்திரை யோகம். சிலிக்கும் காற்றேடு முத்து முத்தான மழை மண் மணக்க பூப்பும் காய்ப்புமாய் படர்ந்தக் கிளைகளில் துளிர்களின் அட்டகாசம் கோல திசையெங்கும் கண்களைத் தேடும் ஜீவ வர்ணஜாலம். வானலாவிய இருப்பிடங்களின் மறைவில் மிகுந்தப்…
இமாம்.கவுஸ் மொய்தீன் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' காலம் கடந்து புரிந்தது! உடன் இருந்த நண்பரின் பெருமை பிரிந்த பின்பே புரிந்தது! நன்றாய் இருந்த உறுப்பின் அருமை பழுதடைந்த பின் புரிந்தது! பயன் அளித்த…
வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை…
தீபச்செல்வன் பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும் வானம் இடிந்து விழுந்திருந்தது பாட்டியின் முகத்தில் பழைய கதைகள் உறைந்திருக்க புதிய உலகம் பற்றியகதை தெரியத்தொடங்கியிருந்தது குழந்தைகள் கதைக்காக பாட்டியை சூழ்ந்தார்கள். பழைய கதைகளின் ஐதீகமும் மர்மமும்…
சுரேஷ் , சென்னை(கனகமணி என்ற பார்வையற்ற எனது தோழி கடந்த 30 ஆம் தேதி விபத்தொன்றில் இறந்து போன செய்தி கேட்ட பதற்றத்தில் எனது உணர்வுகள்....) கனகமணி! கனக இதயமும் மணியான் சொல்லும் இணைந்த…