திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சிங்கப்பூர் தேசிய தினம் 44

யூசுப் ராவுத்தர் ரஜித்ஆழிகள் தொழும் ஆசிய அரசி நீ விளைக்க நீரில்லை விளைய நிலமில்லை ஆனாலும் வற்றவே இல்லை உன் வர்த்தக நதி உலகெங்கும் உன் உபநதிகள் உலகம் சுற்றும் உன் கிளைநதிகள் ஊசிமுனையென…

பசி:

கி.சார்லஸ்பூக்களை பிறகு பறித்திருக்கலாம் பாவம்... பசியோடு பட்டாம்பூச்சி. ckicharles@yahoo.com

ஆகவே சொல்கிறேன்

நட்சத்திரவாசிவீட்டின் மேலிருந்த ஒரு ஓடு பிளந்திருக்கிறது இடைவெளியில் சிக்கிக் கொண்டது வானம் -- மீனவன் மீன் பிடிப்பதற்க்காக வலையை வீசுகிறான் வலைக்கும் ஆழத்துக்கும் இடையில் மீனொன்று நீந்திச் செல்லுகிறது -- விமான பயணம் சுகமானது…

மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை

யூசுப் ராவுத்தர் ரஜித்தேக்கா எல்லாருக்கும் நீ ஈரச் சந்தை எங்களுக்கு நீ ஈரத் தந்தை எங்களின் தலைமுறைகளைத் தாங்கிய தாய் காலம் தின்றது உன் பேரழகை சகிக்குமா இந்தச் சாதனை அரசு? மொத்தமும் உரித்துவிட்டு…

மூன்று கவிதைகள்

என். விநாயக முருகன்யாரும் எழுதிவிடலாம் ————————————– யாரும் எழுதிவிடலாம். கொஞ்சம் சிகரெட். கொஞ்சம் தேனீர். கொஞ்சம் மகிழ்ச்சி கொஞ்சம் பணம் கொஞ்சம் தனிமை கொஞ்சம் வறுமை கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் காமம்…

வேத வனம் – விருட்சம் 44

எஸ்ஸார்சி மேகங்களை உலுக்கி சலத்தை வர்ஷிக்கும் ஒ மருத்துக்களே காடுகள் உம்மை ஆராதிக்கின்றன எமக்கு ஆ அசுவம் தேர் செய் தேட்டம் ஆண் வாரிசொடு புகழும் தாருங்கள் ( ரிக் 5/57) அக்கினியே நீ…

ஒலி மிகைத்த மழை

எம்.ரிஷான் ஷெரீப்மின்னலைப் பார்த்திருக்கும் விழிகளுக்குச் சலனமேதுமில்லை அநிச்சையாய் விரல்கள் பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும் பின்னிக் கொண்டேயிருக்கின்றன தவளைகள் கத்தும் சத்தம் மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது இலைகள் கோப்பைகளாகி நீரைத் தேக்குகின்றன மழை ஓய்ந்த…

இயலாமை

நளன்மின்சாரம் நின்ற‌ இரவொன்றில் ஒளிரும் அகலின் வெளிச்சத்தில் கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள் நானோ எரியும் திரியின் வேதனையில் மௌனித்திருக்கின்றேன். கொடி காற்றில் அழகாய் பற‌ப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள் நான் நினைத்துக்கொண்டிருகின்றேன் அது விடுதலையின்கண் துடிப்பதாய். நீங்கள் பூத்து…

பறவையின் இறப்பு

பா. சத்தியமோகன்ஒரு பறவை பறக்கும்போது பார்த்திருக்கிறோம் இறக்கும்போது? நடுவானில் நீந்தும்போது இறக்க நேரிட்டால் எங்கு வீழுமோ அங்கு சென்று பார்த்தால் தெரியலாம் அச்சமயம் அப்பறவை மழைபோல் வீழுமோ? இறக்கப் போகும் பறவையைப் பற்றி எதற்கு…

இறகுப்பந்துவிடு தூது!

அகரம் அமுதாகாற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய் ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என் ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு! ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்! வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்* இழைபோல்…