திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்

துவாரகன்இப்போ நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன். யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம் பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன். நந்தவனச் சோலைகளிலும் பிரசங்க மேடைகளிலும் திருவிழாக்களிலும் நான் சேகரித்த குப்பைகளை சட்டைப் பைகளுக்குள்…

பெயர் மறக்கடிக்கபட்ட பின்னிரவு

எம். பொன்ராஜ்உள்ளிறக்கிய பிரிவு ஒன்று மூச்சை முட்டச் செய்யும் நினைவுகளின் இறுக்கம் மேலும் குரல்வளை நெறிக்கும் உணர்வுகள் தன் பிடி இறுக்கி உள்ளம் இரணம் கக்கும் எரியும் என் பிணத்தின் வாசம் நாசி துளைக்கும்…

நீராலான உலகு

வே.பிச்சுமணிஆறால் பனி உருகி ஆறாகி கடல் பெருகி ஆறாகி நிலம் புகுந்து ஆறோடு ஒன்றை அழித்து ஆற்று நீராலான உலகு வே.பிச்சுமணி

பொங்குநுரை

முத்துசாமி பழனியப்பன் ஓடும் நீருக்கும் தேயும் பாறைக்கும் பிறந்த நுரை தன் வெண்பற் காட்டிச் சிரிக்கிறது - காற்றில் பறக்கிறது! கண்களுக்குப் புலப்படும் அவ்வெண்ணிறப் பந்து கைகள் தீண்டியதும் காட்சிப்பிழை ஆகிறது! சிறகுகளின்றியும் பறக்கும்…

கார்முகிலின் முற்றுகை

ப.மதியழகன் மழை உண்டாக்கும் மாற்றம் குடை ஒரு சுமையாய் ஆகிப்போகும் அடுத்த அடி கூட நிதானித்து வைக்க வேண்டியிருக்கும். ‘மழைபெய்யும் சமயம் மரத்தினடியில் ஒதுங்காதே மின்னல் தாக்கும்’- என்ற பாட்டியின் பயமுறுத்தல் ஞாபகம் வந்து…

வேத வனம் விருட்சம் 63

எஸ்ஸார்சி யான் புரூரவ முனி நீயோ அழகிய ஊர்வசி புகழுக்காய் அம்புவிறதூணி வசமிருந்து ஒர் அம்பெடுத்து வீசும் ஆற்றலுமிழ்ந்தேன் வீரமும் தீரமும் விலகிப்போயின புரூரவரனே கேள் ஊர்வசி பேசுகிறேன் தினம் மும்முறை என்னைத் தழுவியவன்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமதுக்குடி அங்காடி ஒயின் உள்ளது பெரிய அண்டாவில் ! ஆயினும் கிண்ணங்கள் இல்லை ! அவ்வித மாயின் சரி ! உடம்பு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"வாழ்க்கை நதியின் முடிவில் அழகுத்துவத்தின் தெய்வீகத் தளத்தில் மனிதர் ஆக்கிய சிறைக் கூண்டு விதிகளில் நான் மாட்டிக் கொண்டேன். கடவுள் அளித்த…

அனுகூலம்

செல்வராஜ் ஜெகதீசன் ஆறேழு பேர் நிறைந்த சந்திப்பொன்றில் அதைப் பற்றி நீயும் பேசவில்லை நானும் கேட்கவில்லை இருவர் மட்டுமே அறிந்த விஷயமென்று இருப்பதில் உண்டு இப்படி ஓர் அனுகூலம். o

வேத வனம் -விருட்சம் 62

எஸ்ஸார்சி உத்தமன் விசுவ கர்மன் நான்கும் தெரிந்தவன் படைப்போன் காப்போன் தேவர்கட்குப்பெயர் வைப்போன் முனிவர்கள் தாமே அவனுக்கு வேள்வி செய்கிறார்கள் நீரில் நின்றது ஒரு கரு விண்ணுக்கும் புவிக்கும் தேவர்க்கும் எட்டா நின்றது பிறவா…