பெயர் மறக்கடிக்கபட்ட பின்னிரவு
எம். பொன்ராஜ்
உள்ளிறக்கிய பிரிவு ஒன்று
மூச்சை முட்டச் செய்யும்
நினைவுகளின் இறுக்கம் மேலும்
குரல்வளை நெறிக்கும்
உணர்வுகள் தன் பிடி இறுக்கி
உள்ளம் இரணம் கக்கும்
எரியும் என் பிணத்தின் வாசம்
நாசி துளைக்கும்
காயம் கொண்ட இதயங்கள் கூடி
எனக்கான இரங்கல் கூட்டம் போடும்
அதிர்வுற்று கண்விழித்தேன்
விட்டத்தில் வேகமாய் சுழல்கிறது மின்விசிறி
படபடக்கும் காற்றில்
நாட்குறி காட்டிற்று என் காதலுக்கான அகவை
ஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன்
முற்றுப்புள்ளி வைக்க நான் நினைத்த உன் நினைவுகள்
தொடர்புள்ளி ஆகிறது
Ponraj M