This entry is in the series 20040318_Issue

பத்மநாதன்


குறைந்தது அறுபது வருசம்
சமைத்திருப்பாள்…
இருபது வருசம் வெற்றிலை இடித்தும்
மென்றிறுப்பாள்…இருந்தும்
அவ்வப்போது அருகில் அமர்த்தி
வெற்றிலை இடிச்சித்தா
வெங்காயம் உறிச்சித்தாவென
தொந்தரவு செய்வாள்….
என்னடா தொல்லையிது
என்றெண்ணி உதவிடும் வேளையில்
கண்களால் கைகளால் உடல் மேய்ந்து…
சின்னதாய் ஒரு மருத்துவ பரிசோதனை
செய்து முடிப்பாள்-இவளே
எங்கள் வீட்டு மருத்துவச்சி…

– பத்மநாதன்
– padmanathanm@rediffmail.com

Series Navigation