மின்மீன்கள்
நெப்போலியன், சிங்கப்பூர்

ரகசியத் துளைகளின்
செவுள்களை விரித்தபடி
சலம்பும் மீன்கள்…
குறிக் கொக்கிகளில்
இரைக் கவுச்சியுடன்
எகத்தாளமிடும்
தூண்டில்கள்…
கசங்கி
நனைந்து
படிகத் திரைமுன்
கசிகிறாள்
பள்ளிச்சிறுமி !
விரகம்
தணிகிறான்
விளைந்த கிழவன்
வேறொரு மூலையில் !
எச்சரிக்கை….
இணையக்கடல்
அற்புதமானது
அபாய ஆழங்களைத்
தொடாதவரை !
***
நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg