பெண்ணே நீ …..

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

இனியவன்


மண்,பொன் ,பெண்
மறுபடி மறுபடி
மயங்கி கிடப்பதும்
மறுபடி வீழ்வதும்
எந்த பரிணாமத்திலும்
எதர்த்தாமாகி போனது .

கவிதை,காவியம்
சிலாகித்து பேச
சிலிர்த்து கிடக்கிறது
உன் வெளி மட்டும்.

இதழ் தொடங்கி
அத்தனையும்
ஆதாரமாகிப் போனது
மனித வம்சத்திற்கு .

ஒரு ஒற்றை பார்வையில்
யுகம்
தனது ஆடையை மாற்றும்
விந்தையை பழகினாய்.

ஜனனமோ
மரணமோ
தேவையான பொருளாய்
மன்னித்து விடு
உயிர்ப்பாய்
பெருகி கிடக்கிறாய்

ஆண்பாலின் அகந்தையில்
ஆண்டாண்டு காலத்திற்கு
அடிமையாய் .

எனினும்
பொட்டு வைத்து,பூ வைத்து
அழகு பொம்மையா ய்
மேலும்
அங்கங்கள் துருத்தி
அவ்வப்போது நீயும்

பெண்ணே ….
ஒன்று சொல் நீ
அடிமையா இல்லை
அடிமைகளின் தேவதையா!

Series Navigation

இனியவன்

இனியவன்